Friday, July 6, 2012

நான் 0.4mm ஈ...

நான் 0.4mm ஈ...
உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி (fly) தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் காணப்படும் ஈயை ஒத்திருக்கும் இதன் அளவு 0.4 mm மட்டுமே. அதாவது, ஒரு உப்பு துகள் அல்லது மிளகு துகளை விட சிறிய சைஸ். கண்ணால் பார்ப்பதற்கு கடினமான இந்த உயிரினம், இறக்கைகள் மற்றும் சிக்கலான உடலமைப்பை கொண்டதாக திகழ்வதால் ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த உயிரினங்கள் சிறிய அளவு எறும்புகள் மீது முட்டைகள் இடுகின்றன. இந்த முட்டைகள் வளர வளர எறும்பின் தலைப்பகுதிக்கு சென்று விடுகின்றன. பிற்பாடு, எறும்பின் தலைப்பகுதியையும் உடல்பகுதியையும் இணைக்கும் மெல்லிய தோலை செயல் இழக்க செய்துவிடுகின்றன. இதன் விளைவாக, எறும்பின் தலை தனியே கழண்டு விழுந்து விட, அதனை தங்கள் இருப்பிடமாக பயன்படுத்திகொள்கின்றன, சுப்ஹானல்லாஹ். மேலே கூறிய இவற்றின் இயங்குமுறை சோதிக்கப்படவில்லை. இருப்பினும் இம்மாதிரியான பூச்சிககள் சிலவற்றின் இயக்கமுறை இதுப்போன்றே இருப்பதால் இந்த யூகத்தை கொண்டுள்ளனர் ஆய்வாளர்கள். அதே நேரத்தில், இந்த பூச்சியின் உடல் வடிமவைப்பு மற்ற பூச்சிகளை விட வேறுபட்டும் இருக்கின்றது.

0.4 mm அளவில் ஒரு முழுமையான பறக்கும் உயிரினம். ம்ம்ம்...பரிணாமம் எவ்வளவு  அற்புதமா வேலை செய்திருக்கின்றது பாருங்கள் !!!! வழக்கம் போல இவை எந்த உயிரினதிளிருந்து வந்தது என்பதற்கு ஆதாரமில்லை...இருப்பினும் இவை பரிணாமம் தான் அடைந்திருக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை.... :) :)

இது குறித்த செய்தியை வாசிக்க.....http://www.foxnews.com/scitech/2012/07/02/world-tiniest-fly-may-decapitate-ants-live-in-their-heads/

பரிணாம கோட்பாட்டின் முட்டாள்தனமான வாதங்களுக்கான பதில்களை/ஆய்வுகளை/அலசல்களை துறைவாரியாக இங்கே படிக்கலாம் http://www.ethirkkural.com/p/blog-page_19.html

வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு தகவல்... தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : இந்த உலவு ஒட்டுப்பட்டையை எடுத்து விடவும். உங்கள் தளம் திறக்க ரொம்ப நேரம் ஆகிறது.....மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.bloggernanban.com/2012/06/remove-ulavu-vote-buttons.html) சென்று பார்க்கவும். நன்றி !

mohamedali jinnah said...

உங்கள் அன்பான வேண்டுகோள் என்னை தூண்டியது அதனால் நன்மை விளைந்தது ,இப்பொழுது தளம் திறக்க நேரம் ஆகாது. நன்றி வந்து பார்த்து கருத்து கொடுங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களை சங்கடப்படுத்தி விட்டேனோ என்று நினைத்திருந்தேன். நன்றி.. இப்போது உடனே உங்கள் தளம் திறக்கிறது.. வாழ்த்துக்கள் ! மிக்க நன்றி சார் !

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களை சங்கடப்படுத்தி விட்டேனோ என்று நினைத்திருந்தேன். நன்றி.. இப்போது உடனே உங்கள் தளம் திறக்கிறது.. வாழ்த்துக்கள் ! மிக்க நன்றி சார் !