ஒரு பெண் தனது வாழ்க்கையில் கடந்து செல்லும் எதார்த்தமான நிலைகளை படம்பிடுத்துக்காட்டும் கட்டுரை இது!
[ ஆணும் பெண்ணும் சேர்ந்து இல்லறத்தில் ஈடுபடுவதற்கு எதற்காக
வரதட்சணை? எதற்காக இத்தனை ஆடம்பரம்? பெண்ணைப் பெற்ற ஒரே காரணத்துக்காக
அம்மாவும் அப்பாவும் ஏன் இத்தனை கஷ்டப்பட வேண்டும்? கேள்விகள் வந்து
போனாலும் யாரிடமும் கேட்க முடியாது. மாப்பிள்ளை வீட்டார் மீது
திருமணத்துக்கு முன்பே அதிருப்தியும் பயமும் ஏற்பட்டு விடும்.
அம்மா, அப்பா, தங்கை, தம்பி, தோழிகள்,
உறவினர், ஆசையாக வளர்த்த மரங்கள், பூச்செடிகள், வாழ்ந்த வீடு, பழகிய ஊர்...
அனைத்தையும் விட்டுச் செல்லப் போவதை நினைத்து, பல இரவுகள் கண்ணீரில்
கரையும்.
திருமணத்தன்று இரவே, நிறைந்திருக்கும் உறவினர் மத்தியில், பெண்ணை
அலங்காரம் செய்து தனி அறைக்கு அழைத்துச் செல்லும்போது, சொல்ல முடியாத
தர்மசங்கடம் நிறைந்திருக்கும். அவ்வளவாக அறிந்திராத ஓர் ஆணுடன், தனிமையில்
விடப்பட்டவுடன் பயம் முழுவதும் நெஞ்சை அடைக்கும்.
புதுச்சூழல். புது வாழ்க்கை. பெண்ணை விட
முதிர்ச்சி பெற்றிருக்கும் ஆண் இந்த விஷயத்தில் பக்குவமோ, பொறுமையோ
காட்டுவதில்லை. ஒரு புரிதல் ஏற்பட்ட பிறகு தாம்பத்யத்தில் ஈடுபடலாம் என
நினைப்பதில்லை.
திருமணம் என்றால் இன்னொரு வீட்டில் சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது, துணி
துவைப்பது, வீட்டை நிர்வகிப்பது என்று நினைத்திருக்கும் பெண்களுக்கு இந்த
விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தும். சில பெண்கள் பயத்தில் கதவைத் திறந்துகொண்டு ஓடி வந்துவிடுவார்கள். மாப்பிள்ளை
எரிச்சலின் உச்சத்தில் இருப்பார். அவமானமாக நினைப்பார். பெரியவர்கள்
பெண்ணுக்குப் புத்தி சொல்லி, மீண்டும் உள்ளே அனுப்பி வைப்பார்கள்...]
Saturday, December 31, 2011
Wednesday, December 28, 2011
ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா..
ஞானத்தின் திறவுகோல் நாயகம் அல்லவா.. நபி நாயகம் அல்லவா.. கானத்தில் நான் அதை கொஞ்சம் இன்றி சொல்லவா ஞானத்தின் திறவுகோல்.. பள்ளி சென்று படிக்கவில்லை பாடம் ஏதும் கேட்கவில்லை(2) சொல்லிதரும் தகுதி இந்த துனியாவில் எவர்க்குமில்லை (2) அல்லாஹ்வே ஆசியுடன் அனைத்துமே ஆச்சரியம் சொன்னதெல்லாம் நீதிகளே சத்தியத்தின் செய்திகளே ஞானத்தின் திறவுகோல்..
அனைவரும் விரும்பி கேட்கும் பாடல்! + நாகூர் ஹனிபா – அவர் ஒரு சரித்திரம்
அனைவரும் விரும்பி கேட்கும் பாடல் - இறைவனிடம் கையேந்துங்கள்...
Iraivanidam Kaiyenthungal.mp3 Download
"இறைவனிடம் கையேந்துங்கள் புகழ்" மர்ஹும் கிளியனூர் அப்துல் சலாம் அவர்கள் எழுதிய அல்ஹாஜ் இசைமுரசு E.M.ஹனீபா பாடிய பாடலைப் பற்றி தேரிழந்தூர் தாஜுதீனின் மூன் டிவி பேட்டி
தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
ஒலி, ஒளி இன்னிசை குருந்தகடு கொடுத்துதவிய காவியக் குரலோன் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.
பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கும் Moon T. V க்கும்,பேட்டி எடுப்பவருக்கும் மிக்க நன்றி.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா.
நீடூர்.
Jazakkallahu Hairan நன்றி
----------------------------------------------------------------------------------------

Monday, December 26, 2011
உங்களிடம் உள்ளது இன்றைய தினமே
عوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم
காலையில் நீங்கள் எழுந்தால், மாலையை காண எதிர்பாராதீர்-இன்றையே தினமே உங்களிடம் இருப்பது போல் வாழுங்கள். நேற்றைய தினம் தன்னுடைய நன்மை மற்றும் தீமையுடன் கடந்து விட்டது. நாளைய தினமோ இன்னும் வந்தடையவில்லை. உங்கள் வாழ்நாள் ஒரு நாளே, அதே நாளில் நீங்கள் பிறந்து அதன் இறுதியில் நீங்கள் மரணிப்பதைப் போல். இந்த மனப்பான்மையுடன், கடந்த காலத்துடன் அதனுடைய துன்பங்களின் மேல் உள்ள மன உறுத்தலுக்கும், எதிர்காலத்துடன் அதனுடைய உறுதியின்மையின் மேல் உள்ள நம்பிக்கைகளுக்கும் நடுவில் நீங்கள் சிக்காமல் இருப்பீர். இன்றைய தினத்திற்காக வாழுங்கள்: இந்த நாளில் விழிப்பான மனதுடன் நீங்கள் தொழ வேண்டும், குர்ஆனை புரிந்து ஓதுங்கள், மனமார்ந்து அல்லாஹ்வை நினையுங்கள். இந்த நாளில் உங்கள் காரியங்களில் மீதமாக இருக்க வேண்டும், உங்களுக்கு பங்கிடப்பட்டுள்ள பாகத்துடன் திருப்தி அடைய வேண்டும் உங்கள் தோற்றம் மற்றும் உடல்நல அக்கறையுடன்.
இந்நாளின் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள் ஆதலால் நிமிடங்களை வருடங்களாகவும், நொடிகளை மாதங்களாகவும் நீங்கள் ஆக்குவீர்கள். உங்கள் அதிபதியிடம் பாவமன்னிப்பை வேண்டுங்கள், அவனை நினைவிகூருங்கள், இவ்வுலகிலிருந்து இறுதி பிரிவுக்கு தயார் ஆகுங்கள். மேலும் இன்றைய தினம் சந்தோஷமாகவும், சாந்தியுடனும் வாழுங்கள். உங்கள் ஆதாரத்துடனும், துணைவியுடனும், குழந்தைகளுடனும், பணியுடனும், வீட்டுடனும் மற்றும் வாழ்வில் உள்ள உங்கள் ஸ்தானத்துடனும் மனநிறைவுடன் இருங்கள்.
ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக”. (திருக்குர்ஆன் 7:144)

Saturday, December 24, 2011
ஏன் இந்த குரோத மெயில் சகோதரரே?
Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
சென்ற 2010 ஜூலை மாதம், 'சகோதர யுத்தம் சமுதாயத்திற்கு
தீங்கு' என்ற கட்டுரையும், அதே வருடம் நோன்பு நேரத்தில், 'தஞ்சை
மாவட்டத்தில் திருவிடைசேரி கிராமத்தில் நடந்த வன்முறை சம்பந்தமாக, 'கண்கள்
குலமாகுதம்மா சகோதர யுத்தம் கண்டு' என்ற கட்டுரையும் மின் அஞ்சலில்
வெளியிட்டும், சமுதாய ஊடகங்களிலும் வெளி வந்தன பலர் அறிந்திரிப்பீர்கள்
முன்பெல்லாம் கதைகள், கட்டுரைகளைப் பத்திரிக்கைகளிலும்,
புத்தகங்களிலும் காசு கொடுத்து வாங்கிப் படிப்போம். தற்போது அசூர வேகத்தில்
சுழலும் மின்சார உலகில் பல்வேறு அலுவல்களுக்கிடையே சில நிமிடங்களிலேயே
பல்வேறு நாடுகளிலிருந்து நண்பர்கள், உறவினர்கள், உடன் பிறந்தோர், அறிவு
ஜீவிகள், மார்க்க அறிஞர்கள் போன்றோர்களிடம் இருந்து செய்திகளைப் பெற
மின்அஞ்சல் மிக இன்றியமையானதாக ஆகி விட்டது. ஆனால் அதேமின் அஞ்சலை தங்களது
சொந்த விருப்பு, வெறுப்பினை தரம் தாழ்ந்து கொட்டித் தீர்ப்பது சரிதானா
என்பதே என் கேள்வியே?
20.12.2011 அன்று மின் அஞ்சலை திறந்து ஒவ்வொன்றாக படித்துக்
கொண்டு வந்தேன். அதில் புனித குரான் தமிழ் விளக்கம்,ஹதீசுகள், தவா
நடவடிக்கைகள், நோயிற்றிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவி, துவா
கேட்டல், பல்வேறு மவுத்து செய்திகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில்
வேலை வாய்ப்பிற்கான விளம்பரங்கள், வெளி நாட்டில் வாழும் ஈமான்தார் ஆக்கப்
பூர்வமான செயல்கள் போன்றன வந்திருந்தது கண்டு, ஆகா மின் அஞ்சல் எந்த
விதத்தில் நமது சகோதரர்களை இணைக்கும் பாலமாக அமைந்துள்ளது என்று எண்ணி
மகிழ்ந்து இருக்கும் வேலையில், அனைவருக்கும் அனுப்பட்டஒரு மின்அஞ்சல்
மட்டும் என்னை திடுக்கிடச் செய்தது. அது என்ன என்று நீங்கள் அறிய
உங்களுக்கு ஆவல் இருப்பது நியாயமே!
ஸூரத்து மர்யம் 19: 1 - 36 - முஸ்லிம்களும் இயேசுவை (ஈஸா நபியை) நேசிக்கிறார்கள்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
19:2. (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
19:3. அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).
19:4. (அவர்) கூறினார்:
“என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும்
நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம்
செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.
19:5. “இன்னும்,
எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்;
மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து
எனக்கு வாரிசை அளிப்பாயாக!
19:6. “அவர் எனக்கு
வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்;
என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி
வைப்பாயாக!”
19:7. “ஜகரிய்யாவே! யஹ்யா
என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு
நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை”
(என்று இறைவன் கூறினான்).
Friday, December 23, 2011
சில ஆண்களின் ஆசை இரண்டாம் திருமணம்!
ஆண்களின் நடக்காத ஆசை இரண்டாம் திருமணம்!
போர் நடந்த நாடுகளில் போரின் விளைவினால் பல ஆண்கள் இறந்து விடுவதனைப் பற்றி நாம் அறிவோம் . இது ஈரான் வியட்நாம் நாடுகளில் நடந்தபோது ஆண்கள் போரில் மாண்டுபோய் பெண்கள் மிகைத்து இருந்த கொடுமை அதிகம் . போர்களில் அதிகமாக கொல்லப்படுகிராகள்.
கணவனை இழந்த பெண்களே அதிகம். பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது. அந்த நிலையில் பெண்களுக்கு திருமணம் செய்துக் கொள்ள மண முடிக்காத ஆண்கள் கிடைக்காத நிலை. குறிப்பாக வியட்நாமில் பெண்கள் தவறான பாதையை மேற்கொள்ள வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.ஈரான் போர் முடிந்த நிலையில் அந்த நாட்டின் முக்கியமானவர் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ள அனுமதி கொடுத்து அந்த மனைவியருக்குள் நியாயமாக நடந்து கொள்ளுங்கள் ஆனால் அது இஸ்லாம் அனுமதி தந்த முறைப்படி இருக்க வேண்டும் என அறிவித்தார்.

Thursday, December 22, 2011
சூரத் அல் -'A`rāf + சூரத் அல் -ஜூம்மா
Surat Al-'A`rāf
Surat Al-'A`rāf (The Heights) - سورة الأعراف
7: 204
Sahih International
So when the Qur'an is recited, then listen to it and pay attention that you may receive mercy.
Tamil NEW
குர்ஆன்
ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது
நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.Surat Al-Jumu`ah (The Congregation, Friday) - سورة الجمعة
Surat Al-Jumu`a
62: 9
Sahih International
O
you who have believed, when [the adhan] is called for the
prayer on the day of Jumu'ah [Friday], then proceed to the
remembrance of Allah and leave trade. That is better for you, if
you only knew.
Tamil NEW
ஈமான்
கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால்,
வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து
செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான
நன்மையுடையதாகும்.
Copyright © Quran.com. All rights reserved.
சுவையான ரசம் உடல் வளமாக இருக்க. (வீடியோ இணைப்புடன்)
ரசம் செய்வதற்கான எளிய சமையல் குறிப்பு...பருகுவதற்கும், உணவில் ஊற்றி சாப்பிடுவதற்கும் நல்ல ஜீரணத்திற்கும் சுவையான ரசம்.
Black Pepper also has great anti-inflammatory, anti-bacterial and anti-oxidant properties. It stimulates absorption of several micronutrients in the body such as coenzyme Q-10, beta-carotene and EGCG (a powerful anti-oxidant).
Modern science has shown that garlic is a powerful natural antibiotic, albeit broad-spectrum rather than targeted. The bacteria in the body do not appear to evolve resistance to the garlic as they do too many modern pharmaceutical antibiotics. This means that its positive health benefits can continue over time rather than helping to breed antibiotic resistant "superbugs".
For more info pls visit:
http://www.grannytherapy.com

சுகம் தரும் ஸ்வீடிஷ் மசாஜ் !
ஸ்வீடிஷ் மசாஜ் நோக்கம்: ஸ்வீடிஷ் மசாஜ் ஒரு அறிய கலை . தொடர்ந்து செய்வதால் பிராணவாயு ,உமிழ்நீர் , தேவையான அளவு கிடைபதால் உடல் நலம் கூடுகிறது . தேவையான பருமனுடன் என்றும் இளமையான தோற்றத்துடன் இருக்கலாம் .உடல் முழுவதும் இரத்தம் ஓட்டம் சீராகி ஆக்சிஜன் ஓட்டத்தை அதிகரிக்க மற்றும் கேடுதரும் நச்சுகள் அழிக்கப்பட்டு தசை இறுக்கம் குறையும். தசைகள் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதயம் நன்கு வேலை செய்யும் , மசாஜ் செய்வதால் நரம்பு மண்டலம் தூண்டுகிறது. மூட்டுகளில் இயக்கம் இயல்பு நிலை வருவதால் மன அழுத்தம் குறைந்து , உடல் வலிகளிருந்து மீட்பு ஏற்பட்டு உடல் வலுப்பெறும்
ஸ்வீடிஷ் மசாஜ் லாக்டிக் அமிலம், யூரிக் அமிலம், மற்றும் பிற வளர்சிதைமாற்ற கழிவுகள் திசுக்களை சுத்தமாக்குவதின் மூலம் தசை திரிபு இருந்து மீட்பு நேரம் குறைக்கிறது. நன்றாக செரிமானம் மற்றும் குடல் செயல்பாடு. மசாஜ் உடலின் secretions மற்றும் excretions அதிகரிக்கிறது. இது இரைப்பை சாறுகள், உமிழ்நீர், மற்றும் சிறுநீர் உற்பத்தி அதிகரிக்கிறது. நைட்ரஜன், கனிம பாஸ்பரஸ், மற்றும் உப்பு அதிகரித்த வெளியேற்றத்தை கிடைக்க உதவுகின்றது .
உள் உறுப்புக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு மீது பயனுள்ள விளைவுகளை உண்டாகின்றது..வீக்கம் குறையும். மன அழுத்தம் குறைகிறது. உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை தரம் ஒட்டுமொத்த முன்னேற்றம் உண்டாகின்றது.
ஸ்வீடிஷ் மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் சரியான நிலையில் இருப்பதால் உடல் அழகு அதிகமாகின்றது . உடல் வலி, மயக்கம் , தொல்லையில் இருந்து மீளலாம். மனநிலை நிம்மதியாக இருக்க உதவும் சதை குறைந்து அழகான உடல் அமைகிறது. உடலில் தேவையில்லாத சதை குறைக்கப்படுவதால் உடல் இளமையுடன் இருக்கிறது. இரத்த ஓட்டம் சீர் அடைகிறது. மனம் அமைதி அடைகிறது. மேலும் பல பலன்கள் உள்ளது. இரத்த கொதிப்பு , ஆஸ்துமா உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
ஸ்வீடிஷ் மசாஜ் முறையாக செய்வதற்கு அதனை நன்கு அறிந்தவரிடம் கற்று செய்து வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது .

Tuesday, December 20, 2011
உங்களை சுமக்கப் போவர்களுக்கு நீங்கள் சுமைத்தாங்கியாக இருங்கள்.
வாழ்வில் இனிய சுமை குழந்தைகளை சுமப்பது. தன் குழந்தையை சுமப்பது மகிழ்வு
தந்தாலும் அதைவிட பேரின்பம் தன் பேரக் குழந்தைகளை சுமப்பது. அதிலும் மகள்
வழி பேரக் குழந்தைகளை சுமப்பது மிகவும் மகிழ்வு தரக் கூடியது. இவைகள்
சுமைகள் அல்ல .நமக்கு மன மகிழ்வு தரக் கூடிய மாமருந்து, அனுபவித்து
பார்க்கும்போது இதன் அருமை தெரியும். குழந்தை வயிற்றில் இருக்கும் போது
எந்த தாயும் அதனை சுமையாக நினைப்பதில்லை. அந்த தாயின் முகத்தின் அழகே
உயர்வானது. அந்த நேரத்தில் அவள் எந்த சிரமங்களையும் மகிழ்வாக ஏற்றுக்
கொள்வாள். தாய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்குழந்தையை பாதுகாத்து
வயிற்றில் சுமக்கிறாள். இதுதான் தாய்மையின் மகிழ்மை. அந்த தாயை எந்த
காலத்திலும் நாம் சுமையாக கருத முடியுமா! அவளின்றி நாம் ஏங்கே? ஆனால்
பெற்ற தாயையே ஒரு பாரமாக நினைப்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை.
"நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)

அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.
நூல் : புஹாரி
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
ஆதாரம்: புகாரி
"ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்)
அவர்கள், "ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர்
இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே
காரணமாகிறார்)" என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)
ஆதாரம் : புகாரி
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)
ஆதாரம் : புகாரி
மூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம் - தற்போது pdf வடிவத்தில்..
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரர்
முஹம்மது ஆஷிக் அவர்களால் எழுதப்பட்டு நல்லதொரு விமர்சனத்தை பெற்ற
"மூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்" என்ற தொடர்பதிவுகள், தற்போது pdf
வடிவத்தில் சகோதரர் சுல்தான் மைதீன் அவர்களின் உதவியால்
முழுமை பெற்றுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
# இவர்கள் பற்றி அறிவியல் என்ன கூறுகிறது
# தங்களைப்பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
# இவர்கள் பற்றி மக்கள் கருத்து என்ன?
#' இவர்களுக்கு அரசு என்ன சொல்கிறது
#' இவர்களுக்கு என்னதான் சரியான முடிவு
# இதில் இவர்களுக்கு இஸ்லாம் தரும் தீர்வு என்ன?
என்பது கேள்விகளுக்கு ஆய்வுரீதியாக விடை தருகின்றது முஹம்மது ஆஷிக் அவர்களின் பதிவுகள்.
படிக்க விரும்புபவர்கள் இணைக்கப்பட்டுள்ள pdf பைலை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
moonraam_paalinam.pdf 1397K View Download |
Monday, December 19, 2011
நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே.
7138. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில்
ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்)
விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர்
தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப்
பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து
விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய
குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து
விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப்
பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில்
கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும்
தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.3http://www.tamililquran.com/
"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி).
நூல்: புஹாரி.
ஏகத்துவப் பிரச்சாரத்தை துவக்கிய ஆரம்பக் காலங்களில் அப்பிரச்சாரத்தைக்
கைவிடும்படி அன்றைய மக்கா நகர அறிஞர்கள் செல்வந்தர்கள் அனைவரும்
கோரினார்கள். அதற்கு பகரமாக பொன் – பொருட்களை நபி (ஸல்) அவர்களின்
காலடியில் வைக்கவும் தயாரானார்கள் – பெண் தேவையுள்ளவராக இருந்தால் உலக
அழகிகளையும் உமக்குத் தருகிறோம் – ஆட்சிதான் வேண்டுமென்றால் உம்மை
எங்களுக்குத் தலைவராக்கிக் கொள்கிறோம். என்றெல்லாம் வாக்குறுதி தந்து –
ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தை கைவிடும்படி வேண்டினார்கள்.
ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும்
ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன் என்று அல்லாஹ்விடமிருந்து
சத்தியத்தைப் பெற்று மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்)
அவர்கள் மிக உறுதியாகச் சொன்னார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள், பொன் – பொருள் – பதவியின் மீது ஆசை
கொண்டிருந்தால் இவையெல்லாம் தம் காலடியில் மண்டியிடத் தாயாராக இருந்த
போது அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கலாம். மாறாக இறைத்தூதர் பதவிக்கு
முன் இவையெல்லாம் சர்வ சாதாரணமாக – துச்சமாக மதித்து அனைத்தையும்
தூக்கியெறிந்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ,
தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ,
வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும்,
தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.
(அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ்
எண்: 2739)
நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்தேன். (அதனால் சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது. (அறிவிப்பவர், அன்னை ஆயிஷா (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 3097)
நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும் அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள். அறிவிப்பாளர், அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 3098)
சண்டையிடாதீர்கள். இதனால் கோழைகளாகிவிடுவீர்கள். அப்போது உங்கள் பலம் போய்விடும்.(அல் குர்ஆன் 8:46)
Sunday, December 18, 2011
தமிழ் கனடா - 013 குளிர் குளிர் குளிர்
தமிழர்கள் உலகின் பல பாகங்களிலும் வாழ்கிறார்கள். கனடாவுக்கு மிக அதிகமாக வந்து குடியேறியிருக்கும் தமிழர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த நிலையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்களைச் சொல்லலாம். அதன் பின்னர்தான் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சொல்லவேண்டும்.
இலங்கையில் பெரும்பாலும் வெப்பம் 37 பாகை செல்சியசைத் தாண்டுவதில்லை, குளிர் 22 செல்சியசுக்குக் கீழே செல்வதில்லை தமிழ் நாட்டில் அது 40 வரை உயரும் 20 வரை தாழும். ஆக இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் தட்பவெட்பத்தில் அதிக வித்தியாசம் இல்லை.
ஆகவே தமிழர்கள் அரைக்கை சட்டையும் வேட்டியுமாகவே பெரும்பாலும் நகர்வலம் வருவார்கள். பெண்கள் இடைப்பகுதியைத் திறந்து வைத்து சேலை உடுத்துவார்கள்.
சட்டை இல்லாமல் வயல்வெளிகளில் வேலை செய்வதும் ஒரு கோவணத்தோடு மட்டுமே உலாவருவதும் கிராமங்களில் மிகச் சாதாரணமாக நடக்கும் விவசாய விசயங்கள். ஆனால் கனடா அப்படியா?
Friday, December 16, 2011
தொழுகையின் யின் சிறப்பினைப் பற்றி சொல்ல தொழுகையின் அருமையினை விளங்க வையுங்கள்
உங்களுக்கு தொழ வைக்கும் முன் நீங்கள் தொழுது
கொள்ளுங்கள் என்பதனை பல இடங்களில் மற்றும் பள்ளிவாசல்களிலும்
பார்க்கின்றோம் . இதன் பொருள் உங்களுக்கு இறப்பு(ஜனாஸா தொழுகை) தொழுகை வைப்பதற்கு முன்
இறைவனை தொழ ஆரம்பித்து விடுங்கள்.இது நல்ல அறிவுரையாக இருந்தாலும் மனிதனை
அச்சமூட்டி எச்சரிக்கை செய்து தொழ வைக்க முயலும் செயலாக அமைந்து விடுகின்றது. இதைவிட தொழுகையின் அருமையினையும் அதனால் அடையக் கூடிய நற்பயன்களயும்
மக்களிடம் எடுத்துச் சொல்பது சிறப்பாக இருக்கும் .
மனதை வருடி
விடுங்கள். இக்கால மக்கள் (சிலர்) மனதில் அனைத்து வகை இன்ப
துன்பங்களைக் கண்டு அலுத்துப் போய் சுவனத்தின் மாண்பினையும் நரகத்தின்
வேதனைப் பற்றியும் சிந்திக்க மனமில்லாதவர்களாய் மாறிவருகின்றனர்.
தொழுகையின் சிறப்பினைப் பற்றி சொல்ல எதனையோ ஹதீஸ்களும் குரான் ஆயத்துகளும் இருக்கிறது. குடிகாரனை வெறுக்காதீர்கள் குடிப்பதை தடுக்க வழி சொல்லுங்கள் . குடிப்பவனும் தொழுகையை நாடிவிட்டால் குடிப் பழக்கம் அவனை விட்டு ஓடிவிடும் .அவரையும் அன்போடு தொழ அழைத்துச் செல்லுங்கள். இக்கால குழந்தைகளுக்கு அடித்து பாடம் சொல்லித் தருவதில்லை மாறாக கல்வி மேல் ஆர்வம் உண்டாக்கி பயிற்சி கொடுத்து வளர்கின்றார்கள்.
ஆர்வம் உண்டாக்கி தொழுகையின் அருமையினை விளங்க வையுங்கள்.
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

கவிதையின் கதை
ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்று அந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்
சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி
உள்ளத்தின் பரப்புகளை
உழுதுநின்ற உணர்வுகளைச்
சொல்லும்சுவை நானுணர்ந்தேன்
சொன்னமொழி என்மொழிதான்
வென்றுவிட்ட நினைவெழுந்து
வெள்ளலையாய் வந்துமோத
கன்றுமனத் துள்ளலோடு
கவிஞனென கண்சிலிர்த்தேன்
Wednesday, December 14, 2011
வெறும் அழகினால் மட்டும் சாதித்து விட முடியாது !
ஒவ்வொரு வெற்றிகரமான மனிதன் பின்னால் எப்போதும் ஒரு பெண் இருக்கிறாள் என்று கூறப்படுகிறது. அதனால் பெண்களை குறைத்து மதிப்பிடக் கூடாது. பெண்ணே தாயாகவும், பேணிக் காப்பவளாகவும் , துணையாக நின்று ஊக்குவிப்பவளாகவும்,
இனிய வாழ்வில் இன்பம் தரும் மங்கையாகவும் இருப்பது உண்மை . அறிவுத்
திறனால் குடும்ப ஆட்சியோடு மட்டுமில்லாமல், நாட்டினேயே ஆட்சி செய்வதற்கு தகுதி வாய்ந்தவர்களாக இருந்தார்கள், இருக்கிறார்கள்.
பெண்ணின் பணிவு உயர்வானது. பொறுப்பு அவர்களிடம் கிடைத்து விட்டால் தனக்கு நிகராக அடுத்தவர் வருவதை அவர்கள் விரும்புவதில்லை. அதிலும் ஆட்சி செய்யும் அளவுக்கு வந்து விட்டால் அவர்கள் எடுப்பதே முடிவு. அனைத்திலும் அவர்கள் மிகைத்தே நிற்பார்கள். ஆனால் அறிவின் ஆற்றலில்லாமல் வெறும் அழகினால் மட்டும் அதற்கு தகுதியானவர்களாக ஆகிவிட முடியாது .

Tuesday, December 13, 2011
திருமணம் செய்ய மணப்பெண் தேடும் படலம் !
பணம் ,சீர் கொடுத்தால்தான் பெண் எடுப்பேன் என்ற ஒரு காலம் இருந்தது
இப்பொழுது நிலைமை மாறி பெண் கிடைத்தால் போதும் என்று அலைகின்றார்கள். ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது. விரைவில் திருமணம் செய்தாக வேண்டும்
என்றும், எவ்வளவு காலம்தான் எப்படித்தான் பொறுமையாக இருப்பது என்று ஆண்கள்
சொல்லும் காலம் வந்து விட்டது. பெண் தேடும் கல்யாண புரோக்கர்களுக்கு மதிப்பு வந்து
விட்டது. திருமணத்துக்குப் பெண் பார்ப்பது இன்டர்நெட் வரை
இதன் தொடர்பு வந்து விட்டது, பெண் கேட்க சென்றாலே 'பெண் படித்துக்
கொண்டிருக்கிறாள் அதனால் இப்பொழுது திருமணம் செய்ய நாட்டமில்லை' என்ற
பதில்தான்.
திருமணம் எனது வழிமுறை ஆகும். இதனை எவரொருவர் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்ல என்பது நபிமொழி (அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி)
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. (அல் குர்ஆன் 2:188)
முன்பெல்லாம் பெண் பருவத்திற்கு வந்த உடனேயே திருமணம் செய்ய முயல்வர். பதினெட்டு வயதிற்குள் பெண்ணுக்கு திருமணம் முடிந்து விடும். இப்பொழுது வயதை பற்றி கவலை கிடையாது. பெண் படித்தாக வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பெண்ணின் பெற்றோர் திருமண மாப்பிளை முடிவு செய்வதற்கு பெண்ணின் ஒப்புதலை முதலிலேயே கேட்டு தெரிந்துக் கொள்கின்றனர்.
நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த இறைத்தூதர் (ஸல்), நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என் அறிவுரைப்பகன்றார்கள். -
நஸயீ, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்

Monday, December 12, 2011
நல்ல மருமகள் எப்படி இருக்க வேண்டும்?
M.R.M. முஹம்மது முஸ்தஃபா
அன்பிற்கும், மனத்திற்கும் நெருங்கியத் தொடர்புண்டு. ஒருவரை நாம் உண்மையாக நேசித்தால், அவரும் நம்மை உண்மையாக நேசிக்க ஆரம்பிப்பார். புகுந்த வீட்டில் உள்ளவர்கள் மீது உங்களுக்கு உண்மையான அன்பு இல்லாவிட்டால் உங்கள் மீது அவர்களுக்கு உண்மையான அன்பு ஏற்படாது. அவர்கள் மீது உண்மையான அன்பிருக்குமானால் அவர்களுக்கும் அவசியமாக உங்கள் மீது அன்பு ஏற்பட்டு விடும். எனவே புகுந்த வீட்டிலுள்ளவர்களை நீங்கள் உண்மையாக நேசிக்க வேண்டும்.
முதலாவதாக உங்கள் அன்பைப் பெற உரிமைப் பெற்றவர்கள் உங்கள் மாமனாரும், மாமியாரும் ஆவார். உங்கள் கணவர் உங்கள் அன்பிற்கு உரியவர், உயிருக்கு இனியவர் இல்லையா? அந்தக் கணவரைப் பெற்றவர்கள் அவர்கள், பேணி வளர்த்தவர்கள் அவ்ர்கள்.. உங்களின் கண் நிறைந்த கணவராக, "கல்பு" நிறைந்த கணவராக உங்களுக்கு வழங்கியிருப்பவர்கள் அவர்கள். அவர்கள் மீது அன்பு கொள்வதற்கு இதற்கு மேலும் உங்களுக்கு என்ன வேண்டும்?
அன்பு இன்பம் தரும்!
கமலாவும் ஃபாத்திமாவும் நல்ல நண்பிகள். ஒரே வகுப்பில் படிக்கும் அவர்கள் இருவரும் ஒருபோதும் சண்டை பிடித்துக்கொள்வது இல்லை. ஒற்றுமையாக விளையாடுவார்கள்; ஒருவருக்கு ஒருவர் உதவிகளும் செய்துகொள்வார்கள். கமலா ஃபாத்திமாவுக்குக் கணக்குப் பாடத்தில் கஷ்டமான கணக்குகளைச் சொல்லிக் கொடுப்பாள். அவ்வாறே, ஆங்கிலப் பாடத்தில் கமலாவுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஃபாத்திமா விளங்கப்படுத்துவாள்.
இப்படி இவர்கள் இருவரும் எப்போதும் ஒற்றுமையாக இருப்பது விமலாவுக்குப் பிடிக்கவில்லை. அவள் அவர்களைப் பார்த்துப் பார்த்துப் பொறாமைப் பட்டாள். எப்படியாவது சண்டை மூட்டிவிட்டுக் கமலாவையும் ஃபாத்திமாவையும் பிரிக்க வேண்டும் என்று நினைத்தாள். எனவே, அதற்காக எப்போதும் பொய் பேசிக்கொண்டும் புறம் கூறிக்கொண்டும் திரிந்தாள். ஆனாலும் அவளுடைய திட்டம் பலிக்கவில்லை. கெட்ட பிள்ளைகளை எல்லோரும் வெறுப்பார்கள் அல்லவா? விமலாவுக்கும் அதுதான் நடந்தது. ஆம்! அவளின் கெட்ட பழக்க வழக்கங்களால் மாணவிகள் எல்லோரும் விமலாவை வெறுத்து ஒதுக்கினார்கள். எத்தனையோ புத்திமதிகள் கூறியும் தன்னைத் திருத்திக் கொள்ளாத விமலாவை ஆசிரியர்களும் விரும்பவில்லை.
"தன் வினை தன்னைச் சுடும்" என்பது பழமொழி. அதுபோல, மற்றவர்களுக்குத் தீங்கு செய்யப் போய் அவளே கடைசியில் துன்பத்தில் மாட்டிக் கொண்டாள். யாருமே அவளுடன் பேசவில்லை, அவளை விளையாடச் சேர்க்கவும் இல்லை. வகுப்பறையில் தனித்து ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்த விமலாவுக்கு அழுகை அழுகையாய் வந்தது. மேசையில் முகம் புதைத்து அவள் விம்மி விம்மி அழுதாள்.
அப்போது... ஏதோ தேவைக்காக கமலாவும் ஃபாத்திமாவும் வகுப்பறைக்குள் நுழைந்தார்கள். அழுது கொண்டிருந்த விமலாவைப் பார்க்க அவர்களுக்குப் பாவமாய் இருந்தது. இருவரும் விமலாவின் அருகில் சென்றார்கள். ஃபாத்திமா விமலாவின் தலையை அன்போடு தடவி விட்டாள். அழுதபடி நிமிர்ந்து பார்த்த விமலாவின் கண்களில் வழிந்த கண்ணீரைக் கமலா இரக்கத்துடன் துடைத்து விட்டாள்.
விமலா தன் பிழையை உணர்ந்து வெட்கப்பட்டாள். அவர்கள் இருவருக்கும் தான் செய்த தீமையை மன்னித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டாள். கமலாவும் ஃபாத்திமாவும் விமலா திருந்திவிட்டதை உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Saturday, December 10, 2011
இசை எப்படி இருக்க வேண்டும்!
இசையும் ஒரு கலையின் வெளிப்பாடுதான் ஆனால் அதனை ஒரு சிறந்த முறையில் கொடுக்கப்பட வேண்டும். ஒழுங்கு படுத்தப் பட்ட ஒலி அனைத்தும் இசையாக இருக்க முடியும், அந்த இசை எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் நாம் சித்திக்க வேண்டியதாக இருக்கின்றது. ஹிப் ஹாப் அல்லது ராப் தொடர்புடைய இசை ஒரு ஒழுக்கமான படிவத்தை பெற முடியாது. அது வலுவான இசைக்கு ஒரு களங்கமாக உள்ளது. மனிதனுக்கு மனிதன் விருப்பங்கள் மாறுபடுகின்றன , (Taste differs man to man) எனக்கு இசையினைப் பற்றிய அறிவு கிடையாது. சமைக்கத் தெரியாவிட்டாலும் சமைத்த உணவின் ருசியினை அறிய முடியும்.
நாட்டுக்கு நாடு இசை மாறு பட்டிருப்பதனை நாம் அறிவோம் . இப்பொழுது நமக்கு
அதிகமாக கிடைக்கும் சினிமா இசை யாவும் ஒரு கலவைதான். காக்காய் கரைவதும்,
நாய் ஓலமிடுவதும் குயில் கூவுவதும் அதன் மொழி. ஒரு நல்ல கலைஞர்களால் அதனையே ஒரு சிறந்த இசையாக மாற்ற முடியும். சிறந்த கலைஞர்களுக்கு சில ஓட்டை டப்பாக்களே இசை உண்டாக்கக் கூடிய கருவியாக முடியும்
இசைக்கு சிறந்த பாடல்கள் சிறப்பினைத் தருகின்றன. இசை மனத்தினை வருடக் கூடியதாகவும் உற்சாகம் தர வல்லதாகவும் இருப்பது சிறப்பு . நல்ல பாட்டுடன் இசையைக் கொண்டு குழந்தையை தூங்க வைப்பது போல் செடிகளை வளர வைக்க முடியும் என ஆய்வின் வழி கண்டுள்ளார்கள்.
இறுதியாக வள்ளுவர் வாக்கே உயர்வு.
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள். மழலை சொல் கேளாதவர்!
இங்கு கிளிக் செய்து பாருங்கள் : இசை எதிலேருந்து வருது?
.அதிலிருந்து அருமையான இசையினை கொடுக்க முடியும்.இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும்.இசைக்கு சிறந்த பாடல்கள் சிறப்பினைத் தருகின்றன. இசை மனத்தினை வருடக் கூடியதாகவும் உற்சாகம் தர வல்லதாகவும் இருப்பது சிறப்பு . நல்ல பாட்டுடன் இசையைக் கொண்டு குழந்தையை தூங்க வைப்பது போல் செடிகளை வளர வைக்க முடியும் என ஆய்வின் வழி கண்டுள்ளார்கள்.
இறுதியாக வள்ளுவர் வாக்கே உயர்வு.
குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள். மழலை சொல் கேளாதவர்!
Thursday, December 8, 2011
இணையமும் ஒரு தனிமையே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
என் இணைய தள சகோதரிகளே! பொழுதுப்போக்கிற்காக உலாவரும் இவ்விணையத்திலும் மார்க்கம் குறித்து பேசுவது மகிழ்வளிக்கிறது.இன்றைய கால கட்டத்தில் சுதந்திரம் -பெண்ணுரிமை- நாகரீகம் என பேசி ஆண்களுக்கு சமமாக பெண்களையும் வழி நடத்தி செல்வதாக போலி நட்புறவில் தங்கள் வாழ்க்கை பயணத்தில் வாழ்வை தொலைக்கும் அநேகம் பெண்கள். உண்மை நிலை உணராமல் அஃது விபரீத பாதைக்கு இன்று பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் அதனால் ஏற்படும் இழப்பை அடையும்போது தான் தங்களின் பாதை பயனற்றது என அறிகின்றனர். பெண்களே! அஃதில்லாமல் அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய வழியில் வாழ்வை அமைக்க வல்லோன் நமக்கு நற்கிருபை புரிவானாக!
• 3006. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்" என்று கூறினார்கள். ( புஹாரி )

சீனாவில் வீழ்ந்தது கம்யூனிஷம்!
கம்யூனிஷ ஆட்சியாளர்களால் இது நாள் வரை மத
உரிமைகள் மறுக்கப்பட்ட பல சீனர்கள் வேலை நிமித்தமாக சவூதி வந்துள்ளனர்.
அதிலும் ஜெத்தா-மெககா-மெதீனா மெட்ரோ ரயில் திட்ட காண்ட்ராக்டும் தற்போது
சைனாவுக்கே கிடைத்துள்ளது. 5000க்கும் மேற்பட்ட டெக்னீசியன்களும்
தொழிலாளர்களும தற்போது சவுதி வந்துள்ளனர்.
கடவுள் என்றால் யார்? இறை தியானம் எப்படி இருக்கும்?
மன அமைதியை இறை தியானத்தில் பெறுவது எப்படி என்றெல்லாம் தெரியாமலேயே வெறும்
கார்ல் மாக்ஸை மட்டுமே படித்த இந்த இளைஞர்கள் இன்று இறை மார்க்கத்தால்
கவரப்பட்டு அதிகமதிகம் இஸ்லாத்தை ஏற்கின்றனர்.
தொடர்ந்து படிக்க...http:// suvanappiriyan.blogspot.com/ 2011/12/blog-post_08.html
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
ஆள் பாதி ஆடை பாதி.
ஆள் பாதி ஆடை பாதி என்பது தமிழ் பழமொழி. கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்று நமது முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
ஒருவரின் தோற்றம் நன்றாக இருக்க "ஆள் பாதி ஆடை பாதி" என்பார்கள். ஆடை நன்றாக இருந்தால் மட்டும் நல்ல தோற்றம் வந்துவிடாது. இந்தப் பழமொழியின் முதல் பாதியான ஆள் பாதியும் நன்றாக இருந்தால்தான் தோற்றம் நன்றாக இருக்கும். அதற்கு உடல் ஆரோக்கியம் மிக அவசியம். 'இப்போதெல்லாம் ஆடைதான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது' என்பதனை சிலர் வாதாடுவது பார்க்க ஒரு வீடியோ காட்சி.

Wednesday, December 7, 2011
எப்படி வாழ்வது? எப்போதும் வாழ்வது உங்கள் கையில்!
வாழ்க்கை புத்தகத்தை .....
நீங்கள் திறக்க இருக்கிறீர்கள் -
நாம் எதைப் பெற்று கொண்டு ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறோம் ...
பணம்,
சொத்து,
கௌரவம்???
நாம் இறக்கும் போது,
நம் பணம், சக்தி , சொத்து ...
மற்றும் நம் அனைத்து உடைமைகளும் நம்மை விட்டு செல்கின்றன ...
வேறு யாருக்காவது சொந்தமாக!
மீதி நாம் நமக்காக விட்டுச் செல்வது என்ன உள்ளது?
நினைவுகள் மட்டுமே, இருக்கின்றன. அதுவும் நாம் மற்றவருக்கு உதவி செய்திருந்தால் அதுவும் காலத்தால் மறக்க முடியாத நிலையாக இருக்கக் கூடியதாக இருந்தால்!
அந்த மக்கள் மனதில் நிற்கும் !
நாம் உதவியது என்று!
என்று நீங்கள் பின்னால் போக தேவையில்லை அழகான நினைவஞ்சலிகள் இறைவனால் எழுதப்படும்
''இறந்தவரை மூன்று விஷயங்கள் பின் தொடர்கின்றன. அவை அவனது குடும்பம், அவனது சொத்து, அவனது செயல்கள் ஆகும். இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டும் தங்கி விடுகிறது. அவனது குடும்பமும், அவனது சொத்தும் திரும்பி விடுகின்றன. அவனது செயல் தங்கி விடுகிறது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரளி)
நூல்கள்: புகாரி , முஸ்லிம்
மனிதன் இறந்து விட்டால் அவனது மூன்று செயல்கள் தவிர மற்றவை துண்டிக்கப்பட்டு விடும். அவையாவன:
i). நிலையான தர்மங்கள்
ii). பயன் தரும் கல்வி
iii). அவனுக்காகப் பிரார்த்தனை புரியும் நல்ல பிள்ளை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் 1631, அபூதாவூத் 2880, திர்மிதி 1376 மற்றும் புஹாரி 6514)
இன்று நமக்கு ஒரு பெரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Tuesday, December 6, 2011
உங்கள் வலைப்பூவை பிரபலப்படுத்த...
எழுதியவர் யுவகிருஷ்ணா
நான் பிரபல பதிவராக(?) இருந்த காலத்தில் இந்த டிப்ஸ்களை எழுதினேன். இப்போதைய மாடர்ன் டேமில் பிலாக்கிங்குக்கு இவையெல்லாம் உதவுமா என்று தெரியவில்லை. ஒருவேளை ட்ரெண்ட் மாறியிருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து வலைப்பதிவு பெருசுகள் அவ்வப்போது இந்த டிப்ஸ்களை என்னிடம் இப்போதும் நினைவு கூர்வதுண்டு... ஒருவேளை நீங்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்து, எதிர்பாராவிதமாக ‘லத்திகா’ மாதிரி உங்கள் பிலாக் ஹிட் அடித்தாலும் அடிக்கலாம்.
ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட் :
டைரக்ட் மார்க்கெட்டிங் :
தமிழ்மணத்தில் எந்தப் பதிவை பார்த்தாலும் சிரமம் பார்க்காமல் நுழைந்து விடுங்கள். பதிவை முழுவதாக படிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. லைட்டாக ஒரு லுக் விட்டு அப்பதிவில் முத்தாய்ப்பாக இருக்கும் ஏதோ ஒரு கருமத்தை Quote செய்து “அருமையாக சொன்னீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!” என்றொரு பின்னூட்டத்தை போட்டு விட்டு வந்துவிடுங்கள். நம்முடைய பதிவையும் எவரோ ஒருவர் பாராட்டிவிட்டாரே என்று மெய்சிலிர்த்து சம்பந்தப்பட்ட பதிவர் உங்களது Blogger Profile மூலமாக உங்கள் பதிவுக்கு வந்து பதில் மொய் வைக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தமிழ் மணத்தின் “ம திரட்டி” மொத்தத்தையும் உங்களது “அருமையாக சொன்னீர்கள்” என ஆரம்பிக்கும் பின்னூட்டத்தின் மூலமாக ரொப்பினீர்கள் என்றால் இன்ஸ்டண்ட் பலன் நிச்சயம் உண்டு.
ஹஜ்ரத் S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவு.
மர்ஹூம் S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்கள் 1980களில் துபை-ஹாங்காங் சென்ற போது எடுத்த படங்கள்
"சலவாத் பாவா" பற்றி S.R.S. ஹஜ்ரத்
S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்கள் சலவாத் பாவா பற்றி சொற்பொழிவு.ஹதீஸில் என் மீது ஒரு தடவை ஸலவாத் கூறினால், அல்லாஹ் உங்கள் மீது பத்துத் தடவை சலவாத் கூறுகிறான் (மன்னிக்கிறான், அருள் புரிகிறான்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாவும் உள்ளது.
தமிழ் இதழ்களை இலவசமாக இணையத்தின் வழியாக தரவிறக்கம் செய்து படிக்க !
சிறு வயதிலேயே மாத, வார மேலும் நாள் இதழ்கள் மற்றும் பத்திரிக்கை செய்தித்தாள்கள் படிக்கும்
பழக்கம் நம்மிடம் இருந்து அதற்காக அதிக செலவு செய்து வந்த காலம் இருந்த
நிலையில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது . இப்பொழுது அதனை இணையத்தின் வழியாக படிக்கும் நிலை வந்து விட்டது.
சிறந்த தமிழ் இதழ்களை இலவசமாக அருமையாக தரவிறக்கம் செய்து படிக்க நண்பர் வடகரை தாரிக் தனது வலைப்பூவில் http://vadakaraithariq.blogspot.comவடகரை தாரிக் வழி காட்டுகின்றார். அதனை நாமும் பயன் படுத்திக் கொள்வோம்.

பேஸ்புக் பற்றிய உண்மையும் மற்றும் அதன் தரமும்
விளக்கப்படம்: பேஸ்புக் பற்றிய உண்மையும் மற்றும் அதன் தரமும்.
சமூக ஊடகங்கள் மாற்றமடைந்து வருவது தொடர்ந்து, பேஸ்புக் தன்னிலையில் மாற்றங்களைக் கொடுத்து முன் செல்கிறது, மேலும் அது நாளை கல்வி வளர்ச்சிக்கும் மிக முக்கிய அங்கம் வகிக்க வாய்ப்பளிக்கக் கூடியதாக இருக்கும்.
முன்னணி சமூக ஊடக ஆராய்ச்சியாளர், ரெய்னோல்ட் ஜுன்கோ(Reynold Junco) வின் இந்த விளக்கப்படம் பேஸ்புக் பற்றிய தலைப்பில் பேஸ்புக்கின் உண்மையையும் அதன் தரத்தினையும் முழுமையான விளக்குகிறது பாருங்கள்.
Via: OnlineEducation.net
மின் அஞ்சல் வழி தகவல் தந்தவர் (by mail from) Tony Shin

இணையமும், எழுத்தாளர்களும்!
உயிர்மை :
பிரபல தமிழ் எழுத்தாளர்கள் இணைய தளங்களில் எழுத வரும்போது அவர்கள் தங்கள்
புதிய வாசகப் பரப்பை எதிர்கொள்ளும் விதம் குறித்து என்ன கருகிறீர்கள்?
யுவகிருஷ்ணா : எழுத்தாளர் சுஜாதா ‘அம்பலம்’ இணையத் தளத்தில், வாசகர்களோடு ‘சாட்டிங்’ மூலம் உரையாடத் தொடங்கியதை ஆரம்பப் புள்ளிகளில் ஒன்றாக கருதலாம். பொதுவாக வெகுஜன வாசகர்களிடம் சுஜாதாவுக்கு ஒரு இமேஜ் உண்டு. வாசகர்களிடம் அவர் சகஜமாகப் பழக மாட்டார், மனம் விட்டு பேசமாட்டார் என்பார்கள். ‘ஒரு நல்ல வாசகன், எழுத்தாளனை சந்திக்க விரும்பமாட்டார்’ என்பது சுஜாதாவின் பிரபலமான சொல்லாடலும் கூட.
சுஜாதா சினிமாவிலும் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த காலம். அவ்வளவு நேர நெருக்கடியான காலக்கட்டத்திலும், வாரந்தோறும் சனிக்கிழமை மிகச்சரியாக பத்து மணிக்கு ‘அம்பலம் சாட்டிங்’குக்கு வந்துவிடுவார். நம்மோடு உரையாடுவது சுஜாதாதானா என்றுகூட பல வாசகர்களும் நம்பமுடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் அவ்வளவு இயல்பான உரையாடல்கள் அவை. தேவன் வானுலகில் இருந்து கீழிறங்கி வந்து, மனிதர்களோடு தோளோடு தோள் உரசி பழகுவது மாதிரியான உன்னத உணர்வினை சுஜாதாவின் வாசகர்களுக்கு அம்பலம் வழங்கியது.

Monday, December 5, 2011
ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் ஒரு செய்தி கொண்டிருக்கிறது.
ஏ என்றால் அம்மா, ஆப்பிள் அல்லது அதை அல்லாஹ் என்றும் மற்றும் அனைத்து ஆங்கில எழுத்துகளுக்கும் இன்னும் பலவாறு குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவதுண்டு.
இங்கு தரப்பட்ட படங்களும் வீடியோவும் சிறந்த செய்தி தருவதனைப் பார்ப்போம்.
A to Z
Every alphabet has a meaning and messagejust find it out
and work on it !!!!!!!!!!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் மின்சாரத் தேவைக்காகவா !
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் செய்தமைக்கு பல காரணங்கள் சொன்னாலும் மின்சாரத் தேவை ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்பதும் உண்மை . ஆனால் இன்றைய நிலை என்ன?
மின்சாரத் தேவைக்காக வாக்களித்தவர்கள்
அதைப்பற்றி பேசலாமா ? எழுதலாமா ?
இந்த நாட்டில் இருந்து கொண்டு எழுதலாம்!
தயவு செய்து இங்கு கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு சிறை செல்ல விருப்பமா! இந்தியாவில் வேண்டாம்.
மின்சாரம் தமிழ்நாட்டுக்குத் தருவதாக மோடி கூறியுள்ளார். அதை நிறைவேற்றுவாரா பார்ப்போம்!
குளிர் காலம் அதனால் இனாமாக வீட்டிற்கு ஒரு கை விசிறி தேவையில்லை. கோடை வரும்போது கேட்போம்!
மின்சாரத் தேவைக்காக வாக்களித்தவர்கள்
அதைப்பற்றி பேசலாமா ? எழுதலாமா ?
தமிழகத்தில் !
இந்த நாட்டில் இருந்து கொண்டு எழுதலாம்!
தயவு செய்து இங்கு கிளிக் செய்யுங்கள் உங்களுக்கு சிறை செல்ல விருப்பமா! இந்தியாவில் வேண்டாம்.
மின்சாரம் தமிழ்நாட்டுக்குத் தருவதாக மோடி கூறியுள்ளார். அதை நிறைவேற்றுவாரா பார்ப்போம்!
குளிர் காலம் அதனால் இனாமாக வீட்டிற்கு ஒரு கை விசிறி தேவையில்லை. கோடை வரும்போது கேட்போம்!
Sunday, December 4, 2011
நல்ல பதிவர் யார்?
நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பிளாக்
ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-8]
Saturday, December 03, 2011 Abdul Basith
இந்தப் பதிவில்
நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பதிவு ஆரம்பிப்பது எப்படி
என்று ஒரு தொடர் எழுதி வருகிறார். ஆனால் பிரபல பதிவர் ஆவது எப்படி என்று ஒரு செய்தியையும்
கொடுக்கவில்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவு.
1.
தினம்
ஒரு பதிவு போடவேண்டும். அதற்கு மேலும் போடவேண்டுமென்றால் சி.பி.செந்தில்குமாரிடம்
(ஈரோடு) பர்மிஷன் வாங்க வேண்டும். அதற்கான காப்பிரைட் உரிமையை அவர்தான் வைத்திருக்கிறார்.
2.
பதிவுகளை
சனி, ஞாயிறு, மற்றும் விடுமுறை நாட்களில் போடாதீர்கள். யாரும் படிக்க வர மாட்டார்கள்.
இதில் ஒரு பெரிய தொழில் நுணுக்கம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்
என்னைத் தனியே தொடர்பு கொள்ளவும்.
3.
பதிவு
போட்டவுடன் அதை எல்லா திரட்டிகளிலும் இணைக்கவேண்டும்.
4.
தெரிந்தவர்கள்,
நண்பர்கள், எதிரிகள், முன்பின் தெரியாதவர்கள் அனைவருக்கும் ஈமெயில், ட்விட்டர், முகப்புத்தகம்
மூலமாக பதிவு போட்ட செய்தியை அனுப்பவேண்டும்.
5.
ஒரு
மணி நேரத்திற்கு ஒரு முறை பிளாக்கை ஓபன் செய்து கீழ்க்கண்டவைகளை பரிசோதிக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)