Tuesday, December 6, 2011

உங்கள் வலைப்பூவை பிரபலப்படுத்த...


என்னைப் பற்றி!
நான் பிரபல பதிவராக(?) இருந்த காலத்தில் இந்த டிப்ஸ்களை எழுதினேன். இப்போதைய மாடர்ன் டேமில் பிலாக்கிங்குக்கு இவையெல்லாம் உதவுமா என்று தெரியவில்லை. ஒருவேளை ட்ரெண்ட் மாறியிருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து வலைப்பதிவு பெருசுகள் அவ்வப்போது இந்த டிப்ஸ்களை என்னிடம் இப்போதும் நினைவு கூர்வதுண்டு... ஒருவேளை நீங்கள் இதையெல்லாம் ஃபாலோ செய்து, எதிர்பாராவிதமாக ‘லத்திகா’ மாதிரி உங்கள் பிலாக் ஹிட் அடித்தாலும் அடிக்கலாம்.

ஓக்கே, கமிங் டூ த பாயிண்ட் :

டைரக்ட் மார்க்கெட்டிங் :

தமிழ்மணத்தில் எந்தப் பதிவை பார்த்தாலும் சிரமம் பார்க்காமல் நுழைந்து விடுங்கள். பதிவை முழுவதாக படிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. லைட்டாக ஒரு லுக் விட்டு அப்பதிவில் முத்தாய்ப்பாக இருக்கும் ஏதோ ஒரு கருமத்தை Quote செய்து “அருமையாக சொன்னீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!” என்றொரு பின்னூட்டத்தை போட்டு விட்டு வந்துவிடுங்கள். நம்முடைய பதிவையும் எவரோ   ஒருவர்  பாராட்டிவிட்டாரே என்று மெய்சிலிர்த்து சம்பந்தப்பட்ட பதிவர் உங்களது Blogger Profile மூலமாக உங்கள் பதிவுக்கு வந்து பதில் மொய் வைக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தமிழ் மணத்தின் “ம திரட்டி” மொத்தத்தையும் உங்களது “அருமையாக சொன்னீர்கள்” என ஆரம்பிக்கும் பின்னூட்டத்தின் மூலமாக ரொப்பினீர்கள் என்றால் இன்ஸ்டண்ட் பலன் நிச்சயம் உண்டு.
டெலி-மார்க்கெட்டிங் :

சில  பதிவர்கள் தங்களது டெம்ப்ளேட்டில் கொடூரமான தங்கள் முகத்தை போட்டு கீழே போன் நம்பரையும் கொடுத்து “நிறைய பேசலாம், வாருங்கள்” என்று போட்டிருப்பார்கள். சும்மா டைம் பாஸுக்கு அவர்களுக்கு போன் செய்து, “உங்க பதிவுகளையெல்லாம் தொடர்ந்து படிக்கிறேன். ரொம்ப நல்லா எழுதறீங்க. உங்க சிந்தனைகளோடு ஒத்த சிந்தனை கொண்டவன் நான் என்று ஆரம்பியுங்கள். கொஞ்சம் அழுத்தமாகவே உங்கள் வலைப்பூவின் முகவரியையும் சொல்லிவிடுங்கள். உங்களது டெம்ப்ளேட்டிலும் உங்கள் போன் நம்பரை பிரசுரித்தால்  எவராவது போன் செய்து பேசுவார். இவ்வாறாக உங்கள் வலைப்பூவை தொலைபேசி வாயிலாகவும் மற்றவர் தலையில் கட்டமுடியும்.


அட்வெர்டைஸிங் :

ஒரு பதிவை போட்டுவிட்டு பின்னூட்டங்கள் வராமல் தேவுடு காத்திருப்பதை விட அனானிமஸாக நீங்களே உங்களை பாராட்டி ஒன்று, ரெண்டு பின்னூட்டங்களை போட்டுக் கொள்ளுங்கள். இந்த பின்னூட்ட மூலமாக தமிழ்மணத்தின் முகப்பில் எப்போதும் நின்று கொண்டிருக்கலாம். ஏதோ பின்னூட்டம் வந்திருக்கிறதே, விஷயம் இருக்கிற பதிவு தான் போலிருக்கு என்று சிலர்  வந்து மிக சுலபமாக தூண்டிலில் மாட்டிவிடக்கூடும். அப்படியும் வேலைக்கு ஆகவில்லையென்றால் சம்பந்தப்பட்ட பதிவின் லிங்கை காப்பி செய்துகொண்டு, தமிழ்மணத்தில் வந்திருக்கும் எல்லாப் பதிவுகளுக்கு போய் “நல்ல பதிவு” என்று சொல்லிவிட்டு லிங்கை நைசாக சொருகிவிட்டு வந்துவிடுங்கள். டோண்டு சார் போன்றவர்களுக்கு இதுபோன்ற பின்னூட்டங்களை போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


மக்கள் தொடர்பு :

ஒரே ஒரு ஐடி மட்டுமே வைத்துக் கொண்டிருந்தால் வலையுலகில் நாக்கு வழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தான். குறைந்தது பத்து ஐடிக்களாவது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஐடியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சூடான ஒரு பதிவு போடுங்கள். இன்னொரு ஐடியில் அதே பதிவை கடுமையாக தாக்கி முதலாளித்துவம் பேசுங்கள். இரண்டு ஐடியிலும் மாறி மாறி சண்டைப் போட்டுக் கொண்டால் மற்ற பதிவர்கள் இடையே ஒரு சலசலப்பு ஏற்படும். ”என்ன பிரச்சினை?” என்று பிரச்சினைகளுக்கு ஆளாய் பறக்கும் மொக்கை மற்றும் கும்மிப் பதிவர்கள் உங்களை சூழ்ந்து கொள்வார்கள். ஆளாளுக்கு அவரவர் சர்க்கிளில் உங்கள் ஐடிக்களை பிரபலப்படுத்துவார்கள். வலையுலகில் மிகப்பிரபலமாக இருக்கும் ‘லக்கிலுக்' மற்றும் ‘இலைக்காரன்' ஐடிக்கள் இப்படித்தான் பிரபலமடைந்ததாக வாத்ஸ்யாயனர் தன்னுடைய காமசூத்ரா புத்தகத்தில் எழுதியிருக்கிறாராம்.


ஈவண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் :

சிலர் அவ்வப்போது போண்டாவோ, பஜ்ஜியோ வாங்கிக் கொடுத்து பதிவர் சந்திப்புகள் நடத்துவது வழக்கம். அதுபோலவே சில நாட்களாக சோறு போட்டு பதிவர் பட்டறையும் நடத்துகிறார்கள். இதுபோன்ற ஈவெண்ட்ஸ்களில் தவறாமல் கலந்துகொண்டால் அந்நிகழ்ச்சிகள் குறித்து சிலாகித்து போடப்படும் எல்லாப் பதிவுகளிலும் உங்கள் பெயர் கண்டிப்பாக இடம்பெறும். யாருக்கு தெரியும்? நாளைக்கே இதன்மூலமாக நீங்கள் சன்நியூஸிலும், ஆனந்தவிகடனிலும் கூட பேட்டி தர வாய்ப்பிருக்கிறது.


பிராண்டிங் :

இதை 'பிறாண்டிங்' என்று படிக்கவேண்டாம், Branding என்று படியுங்கள். படிக்கும் எல்லாப் பதிவர்களுக்கும் ”நல்ல பதிவு, சூப்பர்” என்று சொம்படித்துக் கொண்டிருந்தால் ‘நடுநிலை பதிவர்' என்ற பிராண்டிங் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
அப்படியில்லையேல் ஒம்மா, த்தா, யோனி போன்ற வார்த்தைகளை பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் ஆங்காங்கே அள்ளித் தெளியுங்கள். உயிர்மை, கவிதாச்சரண், காலச்சுவடு ரேஞ்சு புத்தகங்களில் வரும் கட்டுரைகளில் சில பத்திகளை மனப்பாடம் செய்து வார்த்தைகளை ஆங்காங்கே மாற்றிப் போட்டு எல்லா இடத்திலும் கும்மியடியுங்கள். ‘பின்நவீனத்துவ' பிராண்டிங் நிச்சயம் கிடைக்கும்.


கஸ்டமர் Feedback :

உங்கள் பதிவுகள் சூப்பராக இருந்தாலும் சரி, மொக்கையாக இருந்தாலும் சரி. வந்து பின்னூட்டம் போட்டு உங்களை போற்றி புகழ்ந்து கொண்டிருக்க எத்தனை பேருக்கு நேரம் இருக்கப் போகிறது. ஆகையால் தன் கையே தனக்குதவி என்ற அடிப்படையிலும், நமக்கு நாமே திட்டத்திலுமாக சேர்ந்து வெவ்வேறு பெயர்களில் நீங்களே உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டுக் கொள்ளுங்கள். பத்து பின்னூட்டங்கள் நல்ல பதிவு என்ற ரேஞ்சிலும் இடையிடையே ஒன்றிரண்டு மோசமான பதிவு, தட்டையான சிந்தனை என்றும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு பதிவுக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கமெண்டுகள் வருவதாக காட்டிக் கொண்டால் வலையுலகில் கொஞ்சம் கெத்தாக வலம் வரமுடியும்.
Source :  http://www.luckylookonline.com

4 comments:

HOTLINKSIN.COM said...

லக்கிலுக் நன்றாகவே எழுதியிருக்கிறார்.

தங்கள் இணையதளம் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் இணையதளம் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள். www.hotlinksin.com பதிவுலகில் ஒரு புதிய அனுபவம்.

NIZAMUDEEN said...

காமெடியா எழுதியிருக்காருல்ல?!?

ஏற்றுமதி வழிகாட்டி said...

உங்களிடமிருந்தே ஆரம்பிக்கிறேன் நண்பரே அருமையான பதிவு

PCKaruppaiah said...

உங்களிடமிருந்தே ஆரம்பிக்கிறேன் நண்பரே அருமையான பதிவை கொடுத்திரிக்கிறீர்கள்

LinkWithin

Related Posts with Thumbnails