عوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم
காலையில்
நீங்கள் எழுந்தால், மாலையை காண எதிர்பாராதீர்-இன்றையே தினமே உங்களிடம்
இருப்பது போல் வாழுங்கள். நேற்றைய தினம் தன்னுடைய நன்மை மற்றும் தீமையுடன்
கடந்து விட்டது. நாளைய தினமோ இன்னும் வந்தடையவில்லை. உங்கள் வாழ்நாள் ஒரு
நாளே, அதே நாளில் நீங்கள் பிறந்து அதன் இறுதியில் நீங்கள் மரணிப்பதைப்
போல். இந்த மனப்பான்மையுடன், கடந்த காலத்துடன் அதனுடைய துன்பங்களின் மேல்
உள்ள மன உறுத்தலுக்கும், எதிர்காலத்துடன் அதனுடைய உறுதியின்மையின் மேல்
உள்ள நம்பிக்கைகளுக்கும் நடுவில் நீங்கள் சிக்காமல் இருப்பீர். இன்றைய
தினத்திற்காக வாழுங்கள்: இந்த நாளில் விழிப்பான மனதுடன் நீங்கள் தொழ
வேண்டும், குர்ஆனை புரிந்து ஓதுங்கள், மனமார்ந்து அல்லாஹ்வை நினையுங்கள்.
இந்த நாளில் உங்கள் காரியங்களில் மீதமாக இருக்க வேண்டும், உங்களுக்கு
பங்கிடப்பட்டுள்ள பாகத்துடன் திருப்தி அடைய வேண்டும் உங்கள் தோற்றம்
மற்றும் உடல்நல அக்கறையுடன்.
இந்நாளின் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள் ஆதலால் நிமிடங்களை
வருடங்களாகவும், நொடிகளை மாதங்களாகவும் நீங்கள் ஆக்குவீர்கள். உங்கள்
அதிபதியிடம் பாவமன்னிப்பை வேண்டுங்கள், அவனை நினைவிகூருங்கள்,
இவ்வுலகிலிருந்து இறுதி பிரிவுக்கு தயார் ஆகுங்கள். மேலும் இன்றைய தினம்
சந்தோஷமாகவும், சாந்தியுடனும் வாழுங்கள். உங்கள் ஆதாரத்துடனும்,
துணைவியுடனும், குழந்தைகளுடனும், பணியுடனும், வீட்டுடனும் மற்றும் வாழ்வில்
உள்ள உங்கள் ஸ்தானத்துடனும் மனநிறைவுடன் இருங்கள்.
ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்;
(எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக”.
(திருக்குர்ஆன் 7:144)
இன்று எந்த துக்கமும், கவலையும், கோபமும், பொறாமையும், வன்மமும் இல்லாமல் வாழுங்கள்.
ஒரு சொற்றொடரை கட்டாயமாக உங்கள் மனதில் பொறித்துக் கொள்ள வேண்டும்.
இன்றே எனது ஒரே நாள். இன்று நீங்கள் சூடான, சுத்தமான ரொட்டியை உண்டு
விட்டால், நேற்றைய காய்ந்த, அழுகிய ரொட்டியும், நாளைய எதிர்நோக்கும்
ரொட்டியும் என்ன முக்கியம்?
உங்களுடனே நீங்கள் உண்மையாக இருந்தால் மேலும் திடமான மற்றும் உறுதியான
தீர்மானம் உங்களிடம் இருந்தால், சந்தேகமின்றி பின்வருபவற்றை உங்களையே
நீங்கள் நம்பவைப்பீர்கள்: இன்றைய தினமே நான் வாழும் இறுதி நாள். இந்த
மனப்பான்மையை நீங்கள் பெற்றுவிட்டால், உங்கள் மனோபாவத்தை மேம்படுத்திக்
கொண்டும், உங்கள் திறமைகளை விரிவுபடுத்திக் கொண்டும், உங்கள் செயல்களை
பரிசுத்தப்படுத்திக் கொண்டும், உங்கள் நாளின் ஒவ்வொரு நொடியிலிருந்தும்
நீங்கள் பயன் பெறுவீர்கள் .
இன்று எனது பேச்சின் பண்பை மேம்படுத்துவேன், தீமையான பேச்சையோ அல்லது மானக்கேடான பேச்சையோ மொழிய மாட்டேன். புறங்கூறவும் மாட்டேன்.
இன்று எனது வீட்டையும், அலுவலகத்தையும் ஒழுங்குபடுத்துவேன். அவை
ஒழுங்கின்மையாகவும், குழப்பமாகவும் அல்லாமல் ஒழுங்காகவும், சுத்தமாகவும்
இருக்கும்.
இன்று உடல்தூய்மை பற்றியும், தோற்றத்தைப் பற்றியும் குறிப்பாக
இருப்பேன். எனது சுத்தத்தில் மிக உன்னிப்பாக இருப்பேன், எனது நடையில்,
பேச்சில் மற்றும் செயல்களில் சமநிலையாக இருப்பேன்.
இன்று எனது அதிபதிக்கு அடிப்பணிய முயற்சிப்பேன், சிறந்த முறையில்
சாத்தியமாகக் கூடிய அளவு தொழுவேன், நிறைய தனிச்சையான நற்செயல்களைச்
செய்வேன், குர்ஆனை ஓதுவேன் மற்றும் பயனுள்ள புத்தகங்களைப் படிப்பேன்.
நன்மையை எனது உள்ளத்தில் நாற்றுவேன், தீமைகளின் வேருகளை-ஆணவம், பொறாமை, நயவஞ்சகம் போன்றவையைப் பிரித்தெடுப்பேன்.
இன்று பிறரை உதவ முயற்சிப்பேன்- நோயாளியை போய்ப் பார்க்க, இறுதிச் சடங்கில்
பங்குபெற, வழிதவரியவரை வழிகாட்ட மற்றும் பசியுள்ளவருக்கு உணவளிக்க.
ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பலகீனமானவர்களுடன் சேர்ந்து நிற்பேன்.
மார்க்க அறிஞருக்கு மரியாதையை செலுத்துவேன், சிரியவர்களுடன் கருணையுடன்
இருப்பேன், பெரியவர்களுடன் பணிவுள்ளவனாக இருப்பேன்.
விடைகொண்ட, சென்றுபோன கடந்த காலமே, உன் மீது நான் அழ மாட்டேன். உன்னை
நினைப்பவனாக என்னை நீ காண மாட்டாய், ஒரு நொடி பொழுதும், ஏனென்றால்
என்னிடமிருந்து நீ என்றும் திரும்பி வராமலிருக்க பயணித்து சென்று
விட்டாய்.
எதிர்காலமே, நீ மறைந்திருக்கும் சாம்ராஜ்யத்தில் இருக்கிறாய், ஆதலால்
உனது கனவில் தொலைந்திருக்க மாட்டேன். எது வரப்போகிறதோ அதில் ஆழ்திருக்க
மாட்டேன் ஏனென்றால் நாளை என்பது எதுவுமில்லை. மேலும் அது இன்னும்
படைக்கப்படவில்லை.
‘இன்றைய தினமே எனது ஒரே தினம்’
என்பது மகிழ்ச்சியின் அகராதியில் ஒரு முக்கியமான கூற்றாகும்- வாழ்வின் முழு
ஒளியுடனும், பிராகசத்துடனும் வாழ நாட்டமுள்ளவர்களுக்கு.
Source : http://theheartopener.wordpress.com/
No comments:
Post a Comment