Monday, December 19, 2011

நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே.



7138. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.3
 http://www.tamililquran.com/

 "உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்" என்றார். "அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி).
நூல்: புஹாரி.

ஏகத்துவப் பிரச்சாரத்தை துவக்கிய ஆரம்பக் காலங்களில் அப்பிரச்சாரத்தைக் கைவிடும்படி அன்றைய மக்கா நகர அறிஞர்கள் செல்வந்தர்கள் அனைவரும் கோரினார்கள். அதற்கு பகரமாக பொன் – பொருட்களை நபி (ஸல்) அவர்களின் காலடியில் வைக்கவும் தயாரானார்கள் – பெண் தேவையுள்ளவராக இருந்தால் உலக அழகிகளையும் உமக்குத் தருகிறோம் – ஆட்சிதான் வேண்டுமென்றால் உம்மை எங்களுக்குத் தலைவராக்கிக் கொள்கிறோம். என்றெல்லாம் வாக்குறுதி தந்து – ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தை கைவிடும்படி வேண்டினார்கள்.
ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன் என்று அல்லாஹ்விடமிருந்து சத்தியத்தைப் பெற்று மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிக உறுதியாகச் சொன்னார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள், பொன் – பொருள் – பதவியின் மீது ஆசை கொண்டிருந்தால் இவையெல்லாம் தம் காலடியில் மண்டியிடத் தாயாராக இருந்த போது அதை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கலாம். மாறாக இறைத்தூதர் பதவிக்கு முன் இவையெல்லாம் சர்வ சாதாரணமாக – துச்சமாக மதித்து அனைத்தையும் தூக்கியெறிந்தார்கள். 
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்து – தலைமைப் பொறுப்பில் இருக்கும் போதே மரணித்தார்கள். மரணித்த மாமன்னரின் சொத்தின் மதிப்பைப் பாருங்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. (அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 2739)

நிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்தேன். (அதனால் சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது. (அறிவிப்பவர், அன்னை ஆயிஷா (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 3097)


நபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும் அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள். அறிவிப்பாளர், அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 3098)
Source : http://www.islamkalvi.com/portal/?p=400

 சண்டையிடாதீர்கள். இதனால் கோழைகளாகிவிடுவீர்கள். அப்போது உங்கள் பலம் போய்விடும்.(அல் குர்ஆன் 8:46)

No comments: