நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பிளாக்
ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-8]
Abdul Basith
இந்தப் பதிவில்
நண்பர் அப்துல் பஸ்ஜித் அவர்கள் பதிவு ஆரம்பிப்பது எப்படி
என்று ஒரு தொடர் எழுதி வருகிறார். ஆனால் பிரபல பதிவர் ஆவது எப்படி என்று ஒரு செய்தியையும்
கொடுக்கவில்லை. அதற்காகத்தான் இந்தப் பதிவு.
1.
தினம்
ஒரு பதிவு போடவேண்டும். அதற்கு மேலும் போடவேண்டுமென்றால் சி.பி.செந்தில்குமாரிடம்
(ஈரோடு) பர்மிஷன் வாங்க வேண்டும். அதற்கான காப்பிரைட் உரிமையை அவர்தான் வைத்திருக்கிறார்.
2.
பதிவுகளை
சனி, ஞாயிறு, மற்றும் விடுமுறை நாட்களில் போடாதீர்கள். யாரும் படிக்க வர மாட்டார்கள்.
இதில் ஒரு பெரிய தொழில் நுணுக்கம் இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்
என்னைத் தனியே தொடர்பு கொள்ளவும்.
3.
பதிவு
போட்டவுடன் அதை எல்லா திரட்டிகளிலும் இணைக்கவேண்டும்.
4.
தெரிந்தவர்கள்,
நண்பர்கள், எதிரிகள், முன்பின் தெரியாதவர்கள் அனைவருக்கும் ஈமெயில், ட்விட்டர், முகப்புத்தகம்
மூலமாக பதிவு போட்ட செய்தியை அனுப்பவேண்டும்.
a.
பின்னூட்டங்கள்.
b.
ஹிட்
கவுன்ட்டர்
c.
பின்பற்றுவோர்
d.
ஓட்டு
நிலவரம்
e.
தமிழ்மணம்
மற்றும் அலெக்ஸா ரேட்டிங்க்.
6.
எல்லாப்
பின்னூட்டங்களுக்கும் பதில் போடவேண்டும்.
7.
பின்னூட்டம்
போட்ட பதிவர்களின் பதிவுகளுக்குப் போய், அங்கு பின்னூட்டம் மற்றும் ஓட்டுகள் போடவேண்டும்.
8.
அந்தப்
பதிவுகளில் பின்பற்றுவோர் ஆக சேரவேண்டும்.
9.
மற்ற
நேரங்களில், புதிய பதிவுகளைப் பார்த்து பின்னூட்டம் போடவேண்டும்.
10. தங்கள் பதிவுகளிலேயே திரட்டிகளுக்கு ஒரு
ஓட்டுப்போட வசதி உண்டு. அதைத் தவறாமல் போடவும்.
11. அதிக பின்னூட்டங்கள் வராவிடில் நண்பர்களுடன்
சிண்டிகேட் ஏற்படுத்தி பின்னூட்டங்களை அதிகப் படுத்தவும். இதற்கான வழிமுறைகளை தெரிந்து
கொள்ள, அதிக பின்னூட்டங்கள் (நூற்றுக்கு மேல்) வரும் பதிவரைத் தொடர்பு கொள்ளவும்.
12. தொடர் பதிவுகளை ஆரம்பித்து அப்பாவிப் பதிவர்களைக்
கோர்த்து விடவும்.
13. தொழில் நுட்ப பதிவுகளைத் தவறாமல் பார்த்து
அடிக்கடி பதிவை மேம்படுத்திக் கொள்ளவும்.
14. முடிந்தால் யாரையாவது அடிக்கடி வம்புக்கு
இழுக்கவும். வம்பு சமாளிக்க முடியாமல் போனால் உடனே ஒரு மன்னிப்புப் பதிவு போட்டுவிட
வேண்டும். (காசா, பணமா?)
நீங்கள் முதல்
பதிவு போட்டவுடனேயே பிரபலமாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
1 comment:
காமெடியாகத்தான் இருக்கிறது.
Post a Comment