Showing posts with label காதலி. Show all posts
Showing posts with label காதலி. Show all posts

Sunday, December 2, 2012

நகையைக் கண்டால் புன்னகை

நகையைக் கண்டால் புன்னகை
கடையைக் கண்டால் வேகம்
பையை இறுக்கினால் வெறுப்பு
நச்சத்திர விடுதிக்குப் போனால் மோகம்
நெருங்கினால் நெருப்பு
விலகினால் ஏக்கம்
பேசினால் பாசம்
காட்சி மாறினால் கசப்பு
மலரைக் கண்டால் நாட்டம்
திருமணம் என்றால் பார்ப்போம்
பெற்றோரைக் கண்டால் ஓட்டம்
காதல் காதலியின் நாட்டம்
கல்யாணம் பெற்றோர்களின் முடிவில்

அலைக்கழிக்க வைக்க ஆனந்தம்
அலைக்கழிக்கப் பட்டதால் வேதாந்தம்
இன்பத்தை அள்ளித் பெருக நாடினோம்
துன்பத்தை தந்து பிரிந்து விட்டாய்
இசைந்துவந்து இன்பத்தை  தொடங்கினாய்
கசந்து போய் துன்பம்  தந்து மடியச் செய்தாய்

Saturday, September 11, 2010

சிரிப்புதான் எத்தனை வகை!

சிரிப்புதான் எத்தனை வகை!

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியகாரன்
ஓட விட்டு சிரிப்பவன் வஞ்சகன்

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி
இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்