Wednesday, September 12, 2012

பேசாமல் இருந்தால் நாம் நம் நிலை அறியோம்!


இறைவன் மானிடருக்கு கொடுத்த தனிப் பெரும் கருணை பேசுவதும் மற்றும் சிந்திப்பதும் .

ஒலி எழுப்புவத்தின்   வழியாக மற்ற இனங்களும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன.ஆனால் அவைகளுக்கு நம்மைப்  போல் சிறப்பான பேசும் ஆற்றலும்,  சிந்திக்கும்    திறனும்  கிடையாது .
நாம்  பேசுவதால்  நன்மையும்  தீமையும்  விளைகின்றது. அதனால் நாம் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும்.
சிலர் மௌனமாக இருப்பதையே விரும்புவார்கள் . இறைவன் தந்த பேசும் ஆற்றலையும் மற்றும் சிந்திக்கும் திறனையும் முறையாக பயன்படுத்த வேண்டியது நம் கடமை

உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்!
 "நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்."
-திருக்குர்ஆன் 2:42



பேசும் சொல்லில் நற்ச்சொல்லாக பயன்படுத்தப்பட்டு அதனை கனிவோடும் ,பணிவோடும், நாம் யாரோடு பேசுகின்றோமோ அவர்கள் புரியம் படி பேசுதல் சிறப்பு .தேவையற்ற பேச்சினை தவிர்ப்பது அவசியம்.  மனம் விட்டு பேசுவதால் மனதில் உள்ள பாரம் குறையும், அன்பும் பெருகும். ஆனால் மனம் போன போக்கில் பேசக் கூடாது.  "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதேநாவினால் சுட்ட வடு"
  .ஆனால் நாம் பேசுபவர்கள் எப்படிப் பட்ட குணம் உடையவர்கள் என்பதனை அறிந்து பேச வேண்டும்.
நாம் மனதில் உள்ளதனை மற்றவர்களிடம் சொல்லி மன ஆறுதல் பெற முனைவதுண்டு. அதற்கு நாம் தேர்ந்தேடுப்பவர்கள் மீது கவனம் வேண்டும்.
 பேசுவதை கேட்பவர்கள் பலவிதம்.


அதில் மூன்று  விதமான மனிதர்களைப் பற்றி நாம் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டும்.
1- இவரிடம் யார் கேட்டது நம்மிடம் ஏன் இதனைச் சொல்கின்றார் என்பவர்.
2 - நல்ல செய்தி கிடைத்து விட்டது மற்றவர்களிடம் பரப்ப  என நினைப்பவர்.
3- இவருக்கு இந்த சிரமமும் வேண்டும் இதைவிட அதிகமாகவும் வேண்டும்  என்று விரும்புவர்.

'மனம் திறந்து பேசுங்கள் - ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள் ... சிலர் புரிந்து கொள்வார்கள், சிலர் பிரிந்து செல்வார்கள்'

 மனிதர்களுக்கு சிறிய நாக்கு ஆனால் மிருகங்களுக்கு பெரிய நாக்கு .
சின்ன நாக்கு உள்ள மனிதன் பேசுகின்றான் பெரிய நாக்கு உள்ள மிருங்கங்கள் பேசுவதில்லை
ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசுகிறார்கள் ஆண்கள் அடங்கிப் போகிறார்கள்.
ஆண்கள் அடக்கம் பெண்களுக்கு பாதுகாப்பு.
பெண்கள் அடங்காவிட்டால் அது அவர்களுக்கு பாதிப்பு.


'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். (832. ஆயிஷா(ரலி) அறிவித்தார்).

 'நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

 'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்; பேசினால் பொய்யே பேசுவான்; ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்; விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

. 'மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள். அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் பொய்யர்களென கருதப்படுவதை நீங்கள் விரும்புவீர்களா?' என்று அலீ(ரலி) கூறினார்
 http://www.tamililquran.com

நபி (ஸல்) அவர்கள், நல்ல வார்த்தைகளைப் பேசு! ஸலாத்தைப் பரப்பு! என்றார்கள்.

(அறிவிப்பவர் : ஷுரைஹ் இப்னு ஹானீ -ரலி, நூற்கள் : இப்னுஹிப்பான், ஹாகிம்)

பாகப்பிரிவினை செய்யும் போது (பாகத்திற்கு உரிமையில்லா) உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்; மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.குர்ஆன்4:8.

3 comments:

Unknown said...

super sir

Unknown said...

பேசணும்

அன்புடன் புகாரி said...

அதிகம் பேசுபவர்களைவிட பேசாமலேயே இருப்பவர்கள் வன்முறை செய்கிறார்கள்

மொழிதான் மனிதனை மனிதனாக்கிய கருவி.

மொழி வழியாகத்தான் அறிவு பயணப்படுகிறது.

இருவர் பேசும்போது ஒரு பூ பூக்கிறது. உலகமெல்லாம் பேசும்போது உலகமே பூவனம் ஆகிறது.

பேசாமலே இருக்கும் வாழ்வில் நாட்கள் இருக்கும் இனிய பொழுதுகள் இருக்காது.

அன்புடன் புகாரி