Saturday, October 15, 2022

Mathematics: Tool or Life skill..?/ Ashika Imthiyaz

 


Mathematics: Tool or Life skill..?

       இப்பொழுதெல்லாம் மாணவர்கள் கணிதத்தை முதன்மை பாடமாக எடுத்து படிப்பதை விரும்புவதில்லை. குறிப்பாக, பொறியியல் துறைகளில் மெக்கானிக்கலை விரும்புவதில்லை. இனி வரும் காலங்களில், கணிதம் மிக தேவையான மாறி வருவதால் அதனை விளக்கவே இந்த பதிவு.

     நாம படிக்கிற கணக்குகளை எல்லாம் நாம் எங்கும் உபயோகப்படுத்துவதில்லை என்றே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலான பொறியியல் மாணவர்களே அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு வளர்ந்து வரும் துறைகளான AI, Machine Learning, Data Science போன்ற பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் கூட கணிதத்தின் தேவையை உணராமல் இருப்பது அவலம்.

      என்னுடைய முந்தைய பதிவுகளில், Math skills நம் வாழ்வில் பல financial decisions களை எடுப்பதற்கு உதவியாய் இருக்கிறது. எனவே, Maths becomes a Life skill என குறிப்பிட்டு இருந்தேன். Maths ஒரு Tool மட்டும் தான் என நண்பர் குறிப்பிட்டு இருந்தார். உண்மை தான். கணிதம் ஒரு கருவியே.


      எப்பொழுது நாம் ஒரு கருவியை (Tool) சரியாக பயன் படுத்த கற்று கொள்கிறோமோ அது திறன் (skill) ஆக மாறுகிறது. உதாரணத்திற்கு, நாம் பிறரை தொடர்பு கொள்ள பயன்படும் மொழி (language) ஒரு கருவி. நாம் அந்த மொழியை சரியான இடங்களில் சரியாக பயன்படுத்த கற்று கொள்வது communication skill ஆகிறது.

      இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால், நாம் அன்றாடம் பயன்படுத்தும் கத்தி (knife) எனும கருவியை சரியாக பயன்படுத்த கற்று கொள்வது skill. அதுபோல், Mathematics என்ற கருவியை, நவீன அறிவியல் உலகில், எந்த இடத்தில் எப்படி திறமையாக கையாள்வது என கற்று கொள்வது skill.

     As I said earlier, Maths becomes a Lifeskill at this modern technological World. Do you Agree @friends ?

Ashika Imthiyaz

No comments: