Wednesday, October 12, 2022

பொய் முகங்கள் சூழ்ந்த முகநூலில் மெய் முகம்

 

Mohamed Kaffoor


பொய் முகங்கள் சூழ்ந்த

முகநூலில் மெய் முகம்

தேடி அலைந்திட வேண்டாம்.

இன்று நீ சென்றால் நீ

இருக்கும் இடத்தில்

நாளையே வேறு ஒருவர்.

இங்கே உறவுகள் என்பது

எல்லாம் பொய்.

வேடங்களை நிஜமென

நம்பி உன் நிஜங்களை

தொலைத்து விடாதே.

பொய் முகங்கள் சூழ்ந்த

முகநூலில் மெய் முகம்

தேடி அலைந்திட வேண்டாம்.

இங்கே இனிக்க இனிக்க

பேசும் ஒருவரும். உனக்கு

ஒரு பிரச்சனை என்றால்

உன் அருகில் இருந்திட

போவதில்லை. அருகில்

இருக்கும் உறவுகளை

தொலைத்து விடாதே.

மெய்யை பொய் என்றும்

பொய்யை மெய் என்றும் கொண்டாடும்

மாய உலகம் இது.

பொய் முகங்கள் சூழ்ந்த

முகநூலில் மெய் முகம்

தேடி அலைந்திட வேண்டாம்.

இங்கே உன்னை தொலைத்து அதனால் உண்மை உறவுகள் தொலைத்து பொய்யாய்.

சிரித்து வாழும் இந்த மாய

உலகின் உறவுகள் வேண்டாம் யாரும் உறவாகவும் வேண்டாம்

பொய் முகங்கள் சூழ்ந்த

முகநூலில் மெய் முகம்

தேடி அலைந்திட வேண்டாம்

நல்ல பொழுது போக்கு

தான் இது. உன் பொழுதுகள் அத்தனையும் இங்கேயே

போக்கிடவும் வேண்டாம்.

இங்கே உனக்கான

அடையாங்களை

தேடவும் வேண்டாம்.

உன்னை அடையாள

படுத்தவும் வேண்டாம்.

ஒதுங்கி நின்று வேடிக்கை

பார்க்கும் கூட்டத்தில்

ஒருவராய் வந்து போக

முடிந்தால் மட்டும் இந்த

மாய சுழலுக்குள் வா.

பொய் முகங்கள் சூழ்ந்த

இதுவும் முகநூலில் படித்ததுதான்..

இதை படிப்பதற்கும் முகநூல் தேவைப்படுகிறதே..

என்னத்த சொல்ல...

முகநூலில் மெய் முகம்

தேடி அலைந்திட வேண்டாம்

Mohamed Kaffoor

No comments: