Saturday, October 15, 2022

உனக்கு எது வலியோ எனக்கும் அது அப்படியே...

 


உனக்கு எது வலியோ

எனக்கும்

அது அப்படியே...

உனக்கு எது தேவையோ

எனக்கும்

அது அப்படியே...


உனக்கு எது தேடலோ

எனக்கும்

அது அப்படியே...

உன்னில் இருந்து

உன்னுள் அல்லாத

என்னை நிர்வகிக்க

எனக்கும் தெரியும்

அதற்க்கு நீ

தேவை இல்லை...

வேறு எதற்கு தேவை?

என்னில் இருந்து

என்னுள் அல்லாத

உன்னை கண்டடைய..!



- Ashika Imthiyaz

No comments: