Parenting thoughts
·
Toddler development stage (1 year to 3 years)
புதிதாக தத்தி தத்தி
நடக்க கற்றுக் கொள்ளும் குழந்தைகளை
toddler என்கிறோம். அதாவது, இரண்டு முதல்
மூன்று வயதிலான குழந்தைகளை கையாள்வது
பற்றி விரிவாக பார்க்கலாம்.
பிறந்த குழந்தைகள், தவழும்
போதும் பிறகு நடக்க ஆரம்பிக்கும்
போதும் கையாள்வது மிக எளிதானதாக இருக்கும்.
ஆனால், நடக்க ஆரம்பித்த சில
மாதங்களில் அவர்களின் நடத்தைகளில் சில மாறுதல்கள் ஏற்படும்.
18 மாதங்கள் முதல் 32 மாதங்கள் வரை, அவர்களை கையாள்வது
கடினமானதாக மாறும். உணவு சாப்பிடுவதில்
இருந்து... உடைகள் உடுப்பதிலிருந்து... அவர்களை
எப்படி கையாள்வது என புரியாமல் பெற்றோர்கள்
தவிப்பதுண்டு.
இந்தப் பருவத்தில் குழந்தைகள்
அதிக சுறுசுறுப்பாகவும், கற்பதில்
மிகுந்த ஆர்வமாகவும், உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த வயதில், உங்கள் குழந்தை
புதிதாக வார்த்தைகளை கற்க தொடங்கி இருப்பார்கள்.
அதனால் குழந்தைகள் தாங்கள் செய்ய விரும்புவதை
வார்த்தைகளால் சொல்ல தெரியாமல் அழுது
அடம் பிடிக்கலாம். அந்த வயதில் அவர்களுக்கு
தெரிந்த மொழி அழுவது மட்டுமே.
ஆனால் பெற்றோர்களுக்கோ, குழந்தைகளை பார்த்துக் கொள்பவர்களுக்கு குழந்தைகளின் மொழி புரியாமல் குழந்தைகள்
மேல் கோபம் கொள்ள வாய்ப்புண்டு.
இது போன்ற சூழ்நிலைகளை Toddler temper tandrums எனக் குறிப்பிடலாம்.
Toddler temper
tandrums களை எவ்வாறு தடுப்பது..? மேலும்
அவற்றை எவ்வாறு கையாளலாம்...? என்பதை
தெரிந்து கொள்ள முதலில் temper tandrums என்றால் என்ன
என தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு
ஏற்படும் திடீர் கோபத்தை அல்லது
விரக்தியை அழுவதன் மூலமாகவோ, பொருள்களை தூக்கி
எறிவதன் மூலமாகவோ, கோபமான வார்த்தைகள் மூலமாகவோ, வெளிப்
படுத்துவதை temper
tandrums என்கிறோம்.
பொதுவாக எந்த விஷயங்களுக்கு
குழந்தைகள் கோபப்பட வாய்ப்புகள் உண்டு..?
- குழந்தைகளின்
தூங்கும் நேரமாக இருக்கலாம்
- குழந்தைகளின்
Meal time அல்லது snack
time இருக்கலாம்.
- பெற்றோர்களின்
கவனம் குழந்தைகளின் மேல் இல்லாமல் இருக்கும்
பொழுது பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு
குழந்தைகள் அழலாம்.
- குழந்தைகளின்
விருப்பத்திற்கு மாற்றமாக எதுவும் நடந்தால்
- ஏதேனும்
ஒரு activity செய்து கொண்டிருந்தாலோ அல்லது
ஒரு விளையாட்டிலிருந்து வேறு விளையாட்டிற்குக்கு மாறும்
சமயத்திலும் அவர்கள் அழுது அடம்பிடிக்க
வாய்ப்புகள் உண்டு.
Toddler temper
tandrums களுக்கான காரணம்...?
மிக சிறு வயதில்
ஏற்படும் இந்த குறுங் கோவங்கள்
எதனால் ஏற்படுகிறது எனில், குழந்தைகள் அந்த
வயதில் தங்களுக்கு தேவையானவற்றை கேட்டு பெறும் அளவு
மொழி திறனை பெற்றிருப்பது இல்லை.
எனவே, வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாததை அடம் பிடித்து அழ
தொடங்கி விடுகிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலக்கேற்ப எவ்வாறு சமாளிப்பது...?
குழந்தைகளை
முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள்
எதற்காக அழுகிறார்கள் என தெரிந்து கொள்ள
வேண்டும். அவர்களுக்கான குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது போன்ற Daily routine பழக்க படுத்துவது... இந்த
நேரத்தில் இதை செய்யலாம் என
அவர்கள் அந்த மாற்றதிற்க்கு தயாராக்குவது...
அவர்களுடன் நாம் இப்பொழுது என்ன
செய்ய போகிறோம் என உரையாடுவது... குழந்தைகள்
அடம் பிடித்தல் குறையலாம்.
பெரும்பாலும் குழந்தைகள் எதற்காக அடம் பிடிக்கிறாரகளோ
அதனை தேவை எனில் நிறைவேற்றலாம்.
சில நேரங்களில், அவர்கள் அளவுக்கு அதிகமாக
எலக்ட்ரானிக் gadgets களுக்காக அடம் பிடிக்கும் போது,
Distraction method தான் சிறந்தது. அதாவது, குழந்தைகளின் கவனத்தை
வேறு திசைகளில் திருப்புதல்.
அடம்பிடித்து அழும் குழந்தைகளை கண்டு
கொள்ளாமல் கடப்பது, அடம் பிடித்தால் நமக்கு
அது கிடைக்காது என்று அழுகையை நிறுத்த
பழகும். அப்படி அழும் சமயங்களில்
நாம் அதற்க்கு காரணம் கூறி கொண்டிருக்காமல்...
அழுது முடிந்த பின் அவர்களுக்கு
புரிய வைக்க முயற்சிக்க வேண்டும்.
அப்படியும்
சில குழந்தைகளை எளிதில் சமாளித்து விட
முடியாது. அப்படியான சமயங்களில் சிலவற்றை முயற்ச்சி செய்து பார்க்கலாம்.
- குழந்தைகள் அடம் பிடிக்கும் போது
நின்று கொண்டே சமாதான படுத்த
முயலாமல், அவர்களின் உயரத்திற்கு சமமாக உட்கார்ந்து கொண்டு,
அவர்களை அருகில் பார்த்து பேச
முயற்ச்சி செய்ய வேண்டும்.
- அழுது கொண்டே இருக்கும்
குழந்தையிடம்... ஏன்...? எதற்கு..? என்ற
கேள்விகளை கேட்டு கொண்டே யிருக்க
கூடாது. அவர்களுக்கு புரிந்து சின்ன சின்ன வார்த்தைகளில்
அவர்களிடம் பேச வெண்டும். நமக்கு
தெரிந்ததை அவர்களுக்கும் அது தெரிய வாய்ப்பில்லை
தானே.
- கதறி அழும் குழந்தையை
போல நீங்களும் கத்தி சொல்ல கூடாது.
நீங்கள் அமைதியான முறையில் சொல்லும் போது குழந்தையும் கேட்க
முயற்சிக்கும்.
- குழந்தைகளுக்கு எப்படி அந்த சூழலை
கையாள்வது என சில relaxation techniques கற்று கொடுங்கள்.
உங்கள் கைகளால் அவர்களை தட்டி
கொடுப்பது, கட்டி அணைத்து கொள்வது
போன்றவை குழந்தைகளை சமாதான படுத்தும் வழி
முறைகள்...
- நாமாக எதோ நினைத்து
கொண்டு குழந்தைகளுக்கான solution களை கொடுக்காமல், அவர்களை
பேச விட்டு, அவர்களின் தேவையை
அறிந்து, அவர்களுக்கான solution களை கொடுப்பது தான்
சிறந்தது
No comments:
Post a Comment