குழந்தைப்
பருவத்தில் விளையாட்டுப் பொருளைத் தேடினேன்
பள்ளிப்
பருவத்தில் நண்பர்களைத் தேடினேன்
கல்லூரிப்
பருவத்தில் அறிவைத் தேடினேன்
படித்தபின்
வேலையைத் தேடினேன்
மணமுடிக்க
பெண்ணைத் தேடினேன்
வளமாக வாழ பணத்தை தேடினேன்
தேடும்
படலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது
தேடியதில்
சில கிடைத்து தொடர்ந்து வந்தது
தேடியதில்
கிடைத்த சில தொல்லையை கொடுத்தது
தேடாததும்
சில சேர்த்துக் கொண்டது
தேடுவதில்
சில மகிழ்வைத் தந்தது
தேடுவதில்
சில வருத்தத்தை தந்தது
தேடவேண்டிய
சிலவற்றை தேடாமல் விட்டேன்
தேடவேண்டிய
நேரத்தில் தேடாமல்
தேடியது
கிடைக்காமல் போனது
தேடுவதே
வாழ்க்கையின் பகுதியானது
தேட வேண்டியதை தேடாத நேரமில்லை
தேடுவதை
விரும்பித் தேடி மனதில் நிறுத்த
முடியவில்லை
தொடர்ந்து
தேடுவது இறைவனின் நினைப்பை மனதில் நிறுத்த
துவங்கும்
வேலையில் இறைவன் நினைப்போ மனதில்
நிற்கின்றது
தொடரும்
வேலையில் இறைவன் நினைப்பு மறவாமல்
வருகின்றது
தொடரும்
கெட்ட மனமும் (சைத்தான்) தொடர்ச்சியாக
தொடர்கின்றது
தொடர் முயற்சியால் கேடு கெட்ட மனத்தை(சைத்தானை) வெல்ல வேண்டும்
தொய்வில்லா
முயற்சியால் இறைவனது அருளை நாடி
தேடுகின்றேன்
விரும்பித்
தேடும் இறைவனின் நினைவை மனதில் நிறுத்த
வேண்டும்
தேடுவது
வாழ்வின் தொடர் நிகழ்வு
தேடுவதில்
இறைவனின் அருள் கிடைத்தால் பிறப்பின்
நிறைவு கிட்டிவிடும்
ஆசைகள்
அழிந்தன
ஆண்டவனின்
அருள் கிடைத்தது
ஆண்டவனின் அழைக்கும் நேரத்தில் அவனிடத்தை நாடிச் செல்ல விழைகின்றேன்
தேட்டமுடையவனாய்
தேடி அவனைத் தேடித் தொழுது
நிற்கின்றேன்
தேடலையே
இறைவன் எனக்கு கருவியாய்த் தந்தான்
தேடவேண்டிய
நேரத்தில் தேடக் கூடிய ஆற்றலை
அவனே தந்து விட்டான்
தேடியதின்
பலன் கிடைத்ததில் நிறைவினைக் காண்கின்றேன்
தேடலின்
பங்கு நிறைந்து நிற்கின்றது வாழ்க்கையில்
இதயம் மெல்லிய சிகப்பு (பிங்க்)
நிறமுடையது.
அதனுள்
அடங்கிக் கிடக்கும் நினைவோட்டங்கள் மனதை சில நேரங்களில்
மென்மையாகவும் ,
சில நேரங்களில் கனமாகவும் ஆக்கிவிடுகின்றதே.
உன் விளையாட்டை யார் அறிவார்!
உன்னை மேன்மையாகவே வைத்துக்கொள்ள விரும்புகின்றேன்.
முயன்றால்
முடியும் .
முழுமையாக
முடியாவிட்டாலும் ஓரளவு இனிமைப் படுத்த
இறைவனை சிந்திப்பது மூலமாகவும் நல்ல எண்ணங்களை மனதில்
நிலைப்படுத்துவதின் வழியாகவும் முயற்சிக்கலாம்
இறையன்பு
நாடும் இறைநேசன்
முகம்மது அலி ஜின்னா
No comments:
Post a Comment