வாழ நினைத்தால்
வாழலாம்...!
கிருஷ்ணன்
இவன், ஒரு
சகலகலா
வல்லவன்.
கார் பெயிண்டிங்
இவனது நிரந்தர பணி
என்றாலும்,
அதிகாலையில்
எனக்காக
தினமும்
வீட்டிற்கு
வந்து எனது
கார்களை
துடைத்து
சுத்தம்
செய்து தருவது
இவனது வழக்கம்.
தினமும்
ஆயிரம் பணம்
சம்பாதிக்கும் இவன்
தனது மூத்த மகனை
ஆடிட்டர்
பணிக்கு தயார்
செய்து
வருகிறான்.பேச்சுத்
திறமையால்
பல பரிசுகளை
கல்லூரியில்
பெற்ற, தனது
மகளை சட்டம் படிக்க வைக்க
முயற்சி
செய்து வருகிறான்.
நகரில்
பெரும்பாலான
விஐபி க்கள் இவனது
நண்பர்கள்.
கார் பாலிஷ்
செய்வதில்
இவன் கில்லாடி.
கலைஞர்
போல் பேசுவது
இவனுக்கு
பிடித்த விசயம்.
அடுத்த
எலக்சனில் நின்று
கவுன்சிலராக
வேண்டும்
என்பது
இவனது ஆசை.
எந்த அதிகாரியையும்
ஆன்லைன்
மூலம், முன்
அநுமதி
பெற்று சந்திப்பது
இவனது வாடிக்கை. கேட்டால்
அதிகாரிகளை
விட அவன்
மிகவும்
பிஸி என்கிறான்.
ஆபீஸ்களில்
போய் காத்துக்
கிடப்பது
தேவையற்றது
என்பது
இவனது வாதம்.
ஒருவன் ஒரு
கார் தான்
வைத்துக்
கொள்ள வேண்டும்
என்று சட்டம் வந்தால்
ரோடுகளில்
வாகன
நெருக்கடி குறையும்
விபத்துக்களை
தவிர்க்க
முடியும்
என்று அட்வைஸ்
செய்கிறான்.
வெற்றிக்கு
என்ன வழி
சொல்..!
என்று கேட்டால்
சிந்திக்க
வைக்கிறான்
சொத்துக்களை
விட
நல்ல குழந்தைகள் மேல்!
யாரிடமும்
கடன்
கேட்பதில்லை
யார் கேட்டாலும்
கடன் கொடுப்பதுமில்லை.
லாட்டரி
டிக்கட் டில்
நம்பிக்கையில்லை
திடீர்
குபேரனாவதில்
விருப்பம்
இல்லை.
ஒரு காலத்தில் குடித்தேன்
பிள்ளைகள்
கோபித்ததால்
குடியை
நிறுத்தி விட்டேன்.
பரிசுகள்
எதையும் எதிர்
பார்க்காத
கிருஷ்ணன்..
சார், ஒரு நல்ல பேனா
ஒன்று வேண்டும் தருவீர்களா!
இன்று வாய் திறந்து கேட்டான்
உனக்கு
எதுக்கு பேனா..
எனக்கு
இல்லை சார்
எனது ஆடிட்டர் மகனுக்கு.
அடுத்த
வாரம் அழைத்து
வருகிறேன்
சார்...!
பணம் எதுவும் வேண்டுமா
வேண்டாம்
சார்...
ஒரு கார் துடைத்தால்
இருநூறு
பணம் கிடைக்கும்
ஒரு கார் பாலிஷ் போட்டால்
ஐநூறு பணம் கிடைக்கும்
எனஃப் சார்…!
எனது பையன் ஒரு
ஜென்டில்
மேன் சார்
அவன் இப்போது
ஒரு பிரபல கல்லூரியில்
ஆடிட்டிங்
ஆஃபீசர் சார்
வாழ்க்கையில்
வெற்றி
பெறுவது
ரெம்ப ஈ்ஸி சார்
கிருஷ்ணன்
சொல்வதில்
உண்மை உள்ளது.
No comments:
Post a Comment