புன்னகை
தினம் ...
இதழின்
முகம்
மெலிதாய்
புன்னகைப்பதால்
மலர் மலர்கிறது ....
மலரின்
முகம்
வண்ணமாய்
புன்னகைப்பதால்
வாசம் பரவுகிறது ....
கடலின்
முகம்
வலிதாய்
புன்னகைப்பதால்
அலை எழுகிறது ....
அலையின்
முகம்
வெண்மையாய்
புன்னகைப்பதால்
நுரை ததும்புகிறது ....
மேகத்தின்
முகம்
கறுமையாய் புன்னகைப்பதால்
மழை பொழிகிறது ....
மழையின்
முகம்
ஈரமாய்
புன்னகைப்பதால்
நிலம் நனைகிறது ....
நிலத்தின்
முகம்
செழுமையாய்
புன்னகைப்பதால்
விளைச்சல்
தளைக்கிறது ....
காற்றின்
முகம்
சுகமாய்
புன்னகைப்பதால்
தென்றல்
வீசுகிறது ....
இயற்கையின்
முகம்
பசுமையாய்
புன்னகைப்பதால்
வளம் கொழிக்கிறது ....
சூரியனின்
முகம்
சூடாய்
புன்னகைப்பதால்
பகல் புலர்கிறது ....
நிலவின்
முகம்
குளிராய்
புன்னகைப்பதால்
இரவு தழுவுகிறது ....
சேவையின்
முகம்
நேயத்தோடு
புன்னகைப்பதால்
ஏழைகள்
மகிழ்கிறார்கள் ....
அப்துல்
கபூர்
07.10.2022 ....
No comments:
Post a Comment