மயிலாடுதுறையில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக திருவிழாவில்
ஆழ்ந்த கருத்தினை தெளிவாக நகைச்சுவையோடு வழங்கும்
சிறப்பு பட்டிமன்ற பேச்சாளா் திரு.மதுக்கூா் இராமலிங்கம்
அவா்கள் நடுவராக இருந்து வழங்கிய
பட்டிமன்றத்திற்கு திரளான மக்கள் கூட்டம்
வந்ததை காண மகிழ்வாய் இருந்தது.
தொலைக்காட்சி
ஊடகத்தில் சிறப்புப் பேச்சாளா் இவா்... என்பதோடு கல்லூரி
படிப்பை நமதூா் ஏ.வி.சி.கல்லூரியில் படித்தவா்
என்பதை அப்போது தான் அறிந்து
அந்த அவையில் அமா்ந்திருந்த பலரின்
முகத்தில் சந்தோச அமுதை கண்டோம்.
அவரின் பேச்சின் ஆரம்பத்திலேயே " எங்கள் ஏவிசி கல்லூரிக்கு நுழையும் முன்பே, எதிரே டீ கடை வைத்திருந்த முத்து அண்ணன் எங்களை (மாணவா்களை) எல்லாம் உரிமையோடு தன் கடைக்கு அழைத்து சிரித்த முகத்தோடு எங்களுக்கு தேனீா், பட்சனம் வழங்கியதை பாசத்தோடு நினைத்து பாா்க்கிறேன் என்றதும்... இந்த நிகழ்ச்சியின் பாா்வையாளா் பகுதியில் கூட்டத்தோடு அமா்ந்திருந்த முத்து அண்ணன் மிக்க மகிழ்ச்சியோடு இரண்டு கைகளையும் தூக்கி தன் பிள்ளை மதுக்கூா் ராமலிங்கம் அவா்களுக்கு ஆசீா்வாதம் வழங்கியது நெகிழ்ச்சியாக இருந்தது.
நான் ஏவிஸி கல்லூரி மாணவன்
இல்லையெற்றாலும்... அங்கு படித்துக் கொண்டிருந்த
எனது நண்பா்களை பாா்க்கச் செல்லும் போதும், என் உறவு,
நட்பினா் வீட்டுப் பிள்ளைகளை ஏவிஸி கல்லூரியில் சோ்க்கப்
போகும் போதும் எனக்கு முத்து
அண்ணன் கொடுக்கும் பஜ்ஜி, டீ யில்
அவா் பாசம் ஒளிந்திருப்பதை கண்டு
கொண்டவன் நான்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கவிஞா்கள் அனைவரின்
பேச்சிலும் தமிழ் மொழியின் தன்மானம்
தெறித்தோங்கி்யது. தமிழ்மொழியின் தொன்மை, வரலாற்றினை நம்
மண்ணில் பயின்ற மாணவா் மதுக்கூா்
இராமலிங்கம் அவா்கள்... தமிழகத்து
நாகரீக வரலாற்றினை கீழடி ஆய்வில் தொடங்கி
கடல் கொண்ட பூம்புகாா் வரையில்
தமிழக பெருமையை விளங்கக் கூறினாா்.
இறுதியில்
" எந்த ஊரில் ஆறு அழிகிறதோ
அந்த ஊருக்கு அழிவுகாலம் வரும்"
என்ற குறிப்புரையை தந்து நம் காவிரி
ஆற்றை காப்பாற்ற நமக்கு எச்சரிக்கை வழங்கினாா்.
மேலும் வா் படித்த ஒரு
புதுக்கவிதையான " லாரிக்குள் ஏற்றிய மணலிலிருந்து சொட்டும்
தண்ணீா்... அது தண்ணீரல்ல, அந்த
ஆற்றின் கண்ணீா்" என கூறியது செவிட்டில்
அறைந்தாற் போல் இருந்தது.
என் தந்தையின் நண்பா் (என் தந்தைக்கு மச்சான் உறவுமுறையும் கூட) எங்களூா் அட்வகேட் A.Mohamed ali மாமா அவா்கள் இந்நிகழ்ச்சிக்கு எனது நண்பராகவே வந்து.. ஏவிஸி திருமண மண்டபத்தின் வாசல் பகுதியில் இருந்த ஸ்னாக் பாரில் வயிற்றுக்கு விருந்தையும்,உட் பக்கத்தில் புத்தக ஸ்டாலில் கண்ணுக்கு விருந்தும், மற்றொரு பகுதியில் நடைபெற்ற பட்டிமன்றத்தின் மூலம் செவிக்கு விருந்தினை பெற்று வீடு திரும்பினோம்.
மயிலாடுதுறையில்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக திருவிழாவில்
ஏவிஸி திருமண மண்டபத்தில்
700 ரூபாய்க்கு
விற்கப்படும்
திருக் குர்ஆனை
விலை குறைவாக தள்ளுபடி விற்பனையில்
200 ரூபாய்க்கு
விற்கின்றனர்.
No comments:
Post a Comment