Monday, October 10, 2022

நபிவழியும் சமூக புரட்சியும்

 

Vavar F Habibullah

நபிவழியும்

சமூக புரட்சியும்

இன்று முகமது நபி

பிறந்த தினம்.அவர்

பிறந்த அரபகத்தில்

அவரது பிறந்த நாள்

நினைவுகள் இல்லை

விடுமுறையும் இல்லை.

அவரது பெயரில் மன்றங்கள்

இல்லை ஸ்தூபிகள் இல்லை

நினைவு சின்னங்கள் இல்லை

அவரது பெயரில் ஒரு நகரமோ

அல்லது தெருவின் பெயரோ

இல்லை.ஒரு வரை படம் கூட

இல்லை.

ஆனால்...

அவர் வாழ்ந்த மக்கா நகரும்

மறைந்த மதீனா மாநகரும்

உலக மக்கள் கூட்டத்தால்

நிரம்பி வழிகிறது.செல்வம்

கரை புரண்டோடுகிறது.

வந்தாரை வாழ வைக்கும்

அந்த நகரமும் சரி

நாடும் சரி...பஞ்சமே

இல்லாத நாடாக இன்றும்

திகழ்வது அதிசயம் தான்.

உணவு உடை உறையுள்

இவற்றில்  தன்னிறைவு

பெற்றவர்கள் இம்மக்கள்.

கொடுக்கும் கரங்களே

இங்கே அதிகம்.வாங்கும்

கரங்கள் மிகவும் குறைவு.

முகமது நபி ஒரு

அனாதைக் குழந்தை.

பிறக்கும் போது தந்தை

இல்லை. ஆறு வயதில்

தாய் மறைய எட்டு வயதில்

அவரது பாட்னார் மறைய

பின்னர் பெரிய தந்தையும்

மறைந்து விட...அவர்

முழுக்க நம்பிய அவரது

இறைவன் மட்டுமே அவரை

கைவிடவில்லை.அவரது

முழு வெற்றிகளுக்கும்

அவரது இறைவனே

காரணம் என்று அவர்

திடமாக நம்பினார்.

முகமது நபி இல்லை

என்றால் திருக்குரான்

இல்லை.இஸ்லாம் என்ற

மதமும் இல்லை...

பெண் குழந்தைகளை

கொன்று புதைத்த

நாட்டில் பெண்களை

அடிமைகளாக்கி

அவமதித்த நாட்டில்..

இருபத்தைந்து வயது

நிரம்பிய இளைஞர்

முகமது நபி

தன்னை விட வயதில்

மூத்த நாற்பது வயது

விதவை பெண்மணி

யைத் தான் தனது முதல்

மனைவியாக மணம்

புரிந்து கொண்டார்

என்பது வரலாறு.

அவர் வாழ்ந்த வரை

வேறு திருமணம் செய்து

கொள்ளவில்லை என்பது

அந்த நாளில் அந்த மண்ணில்

ஒரு சமூக புரட்சியாக கருதப்

பட்டது. இன்றைய இளைஞர்

களால் இது விசயத்தில் அவரது

வழிமுறையை பின் பற்றி நடக்க

முடியுமா என்பது

கேள்விக்குறி தான்..!

பெற்ற தாயின்

காலடியில் தான்

பிள்ளைகளின்

சுவர்க்கம் உள்ளது

என்று போதனை

செய்தவரும் நபிகள் தான்.

A Milad - un Nabi Message




No comments: