மாயவரம்
வேதநாயகம் பிள்ளை
*பெற்றோர்
திருச்சியில் இருந்து மதுரை ரயிலில்
சென்றப் பொழுது, தாயாருக்கு பிரசவ
வலி வந்து இடையில் குளத்தூர்
ரயில் நிலையித்தில் பிறந்த #பிள்ளைதான் அய்யா
வேதநாயம் அவர்கள். பிறந்த தேதி: 11- 10 - 1826. நாளை 195 வது
பிறந்த நாள் ஆகும்.
" ஊர்
பெயர் என எதை சொல்வது
என குழப்பங்கள் எழலாம் ஆனால் பணிப்
பார்க்க வந்து அவர் வாழ்வில்
மிகவும் விரும்பிய எங்கள் ஊர் #மாயவரமே அவர் பெயருக்கு
அடைமொழியானது.
*வேளாண்
நிலங்கள் தந்தைக்கு அதிகம் இருந்தும் அன்றே
உறவுகள் எல்லாம் அயல் நாட்டில்
வாழ்ந்தும் பணிப்பார்க்க ஆசைப்பட்டு முதலில் பார்த்தப் பணி
திருச்சி கோர்ட்டில் பதிவாளராகதான்.
* மொழிகள்
மீது இருந்த காதல் தமிழ்
ஆங்கிலம், லத்தின், சான்ஸ்கிரிட் என விரிந்து அனைத்திலும்
புலமை தந்தது.
"தமிழின்
முதல் நாவல் (புதினம்) படைத்தது
இவரே, பிரதாப
முதலியார் சரித்திரம் அதன் பெயர். பெண்
கல்வி, பெண்கள் முன்னேற்றத்தை பற்றி
அன்றே அந்த புதினத்தில் பேசினார்.
* இசையில்
ஆர்வம், இசைக்கருவிகள் மீட்ட கற்றார். கர்நாடக
சங்கீத கீர்த்தனைகளை ஆராய்ந்தார், ராகமாலிகைகள் உருவாக்கி அதற்கு தமிழ் பாடல்களும்
எழுதினார். இவர் உருவாக்கிய பாடல்
அவர் மறைந்து பல ஆண்டுகளுக்கு
பின் G.ராமநாதன் அவர்கள் இசையில் 1955
ல் வெளியான #டாக்டர்சாவித்திரி படத்தில் நடன காட்சிக்கு பயன்படுத்தப்பட்டது.
* கிபி
1856 ல் தரங்கம்பாடி முன்சீப்பாக பணி செய்தார்.
* பின்னர்
மாயவரம் மாவட்ட முன்சீப்பாக பதவி
உயர்வு பெற்றார். ( இதில் கவனிக்கப்பட வேண்டிய
செய்தி, சுமார் 160 ஆண்டுகள் முன்பு மாவட்டமாக இருந்த
எங்கள் ஊரை மயிலாடுதுறையை (மாயவரம்)
மீண்டும் மாவட்டமாக்கு என எங்கள் பகுதியினர்
போராடி இப்பொழுதுதான் மாவட்டம் ஆகியுள்ளது என்ன கொடுமை அய்யா
இது)..
* 1876 முதல்
1888 வரை நிலவிய பஞ்சக்காலங்களில் தன்
சொந்த சொத்தை விற்று ஏழைகளின்
பசியாற்றிய வள்ளல் என பலரும்
அறிந்து இருக்கவில்லை....
*மாயவரத்தின்
நகர் மன்ற தலைவராகவும் இருந்தார்.
* மிக கடுமையாக உழைத்து 1805 முதல் 1861 வரை சதர்ன் கோர்ட்
வெளியிட்ட அனைத்து தீர்ப்புகளையும் தமிழில்
மொழி பெயர்த்தார்.
* 1862 லேயே
தமிழில் தீர்ப்பு வழங்கிய நீதிமானாக விளங்கினார்,
இன்றும் நீதி மொழியாக தமிழை
ஆக்குக என போராடி பயனில்லாமல்
உள்ளது. ( என்ன கொடுமை நீதி
இது....)
* பல புத்தகங்கள் எழுதினார்.
" இவருக்கு
மயிலாடுதுறை RC தேவாலயத்தின் வாசலில் முன்னர் சிலை
இருந்தது, பின்னர் அச்சிலை கல்லறை
தோட்டத்தில் சிறையான காரணம் இன்றும்
எனக்கு புரியவில்லை.( அவ்வளவு பெரிய நீதிபதியவே
சிறை வைத்த கொடுமை ஏன்
என தெரியவில்லை ஆண்டவனே, ஆள்கிறவர்களே..) நவீன சுடலைமாடனாக தோற்றம்
தருகிறாரோ?
* வழக்கறிஞர்கள்
போராடியும் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஏன் அவருக்கு சிலை
வைக்கவில்லை? (நீதிக்கு தண்டனையா?)
* நான்
இவ்வளவு எழுதியும் யார் என தெரியவில்லை
என்றால் எளிதாக சொல்கிறேன் நடிகர்,
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் கொள்ளுப்பாட்டனார்
ஆவார். (இப்படி எல்லாம் சொல்ல
வேண்டியதாக உள்ளது.)
நாளை காலை 9 மணிக்கு மயிலாடுதுறை
தமிழ்ச் சங்கம் இவர் பிறந்த
நாளை கொண்டாடுகிறது.
No comments:
Post a Comment