Sunday, October 30, 2022

"Seeman எப்படி Love பண்ணுவாரு தெரியுமா"🤣கலாய்த்து தள்ளிய மனைவி Kayalvizh

 

வாழ்க அனுதினம்...!

 

1969-1970-ஆண்டுகளில் அண்ணாமலைப் பல் கலைக் கழக வாழ்வின் காலத்துக் கவிதைகள்!

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரத்திலேயே வாழ்ந்த நேரமது!

வாழ்க அனுதினம்...!

நெற்றிப்  பக்கம்  காற்றில்  மிதக்கும்

         நெளிசுருள் முடியோ  வஞ்சம்!

சுற்றித் தொங்கும்  ஜடையின்  அசைவில்

         சுழலும்  நெஞ்சம்  தஞ்சம்!

சற்றே  மார்பு  குலுங்க  நடக்கும்

         சதிக்கோ  என்னுயிர் அஞ்சும்!

உற்றுப்  பார்த்தால்  பின்புறம்  தேவ

          ஊஞ்சல்!  என்விழி  மஞ்சம்!

நீடூர் நெய்வாசல் ஜின்னா தெரு பள்ளியின் இமாம் ஹஜ்ரத் சுஹைப் அவர்கள் சொற்ப...

Saturday, October 29, 2022

சுஹைப் ஹஜ்ரத் /சுப்ஹ் சிந்தனை/29-2-22.

நீடூர் நெய்வாசல் ஜின்னா தெரு இமாம் ஹாபிஸ் சுஹைப் ஹஜ்ரத் அவர்கள் விடியற்காலை சொற்பொழிவு. -முகம்மது அலி ஜின்னா.

Thursday, October 27, 2022

வாவர் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்!

 

 

வாவர் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்!

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்! !

 

வாவர் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்! !

 

வாவர் குடும்ப அன்பு சகோதரர்கள்

 

அனைவரும் செயல் வீரர்கள்

 

வாழ்த்துவதில் மகிழ்கின்றேன்

 

அன்புடன் Mohamed Ali

துவா கேட்பவர் தேனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்  

#நற்செயலே_சிறந்த_உபதேசம்.....

 


#நற்செயலே_சிறந்த_உபதேசம்.....

(நூஹ் மஹ்ழரி , Navas Banu,எமனை சாகுல் பதிவிலிருந்து..)

அதிகாலைத் தொழுகையை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று கூட்டாகத் தொழுவதை வழமையாக் கொண்டவர் அபூதுஜானா (ரலி) அவர்கள்..

ஆயினும் அதில் சின்ன சிக்கல் என்னவென்றால்தொழுகை முடிந்த உடனேயே பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறிவிடுவார்...

இதனை நபி (ஸல்) அவர்களும் கவனித்தார்கள்... !

ஒருநாள் அவ்வாறு வெளியேறும்போது அபூதுஜானாவை நிறுத்தி நபிகளார் கேட்டார்கள்...

"அபூதுஜானாஉமக்கு அல்லாஹ்விடம் கேட்பதற்கு எதுவுமே இல்லையா?”

அபூதுஜானா (ரலி): "ஏன் இல்லை, அவனிடம் கேட்பதற்கு நிறைய இருக்கிறது அல்லாஹ்வின் தூதரே! ஒரு கண நேரம்கூட அவனுடைய உதவியின்றி என்னால் வாழ முடியாது...”.

Wednesday, October 26, 2022

நபிமார்கள் வாழ்க்கை முறை./ சுஹைப் ஹஜ்ரத் அவர்கள் சொற்பொழிவு

மஸ்ஜிதில் (பள்ளிவாசலில்)நுழையும் போது ஓதும் துவா

Rishi Sunak Wife Akshata Murthy: UK PM-ன் மனைவி அக்ஷதா மூர்த்தியின் பின்...

The Rise Of Rishi Sunak: The First Indian-Origin & Hindu British PM | Ri...

UK New PM Rishi Sunak அரச குடும்பத்தை விட பணக்காரரா? சொத்து எவ்வளவு?

ஜமாத் ஒருங்கனைப்பாளர் இனாயத்துல்லா பேட்டி

 

Saturday, October 22, 2022

வாழ்த்துக்கள் வழக்குரைஞர்.அப்ரார் அகமது அவர்களுக்கு

மாயவரமும் மணிக்கூண்டு வரலாறும் #Mayiladuthurai #manikoondu #TCM 360

Day - Entering The Mosque

பாரம்பரியத்தை காக்க தடைகளை தகர்க்கும் காயல்பட்டினம் முஸ்லீம் பெண்கள் |

பாரம்பரியத்தை காக்க தடைகளை தகர்க்கும் காயல்பட்டினம் முஸ்லீம் பெண்கள் | தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் செயல்பட்டு வரும் அபத்தி அமைப்பு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கிருக்கும் முஸ்லீம் பெண்களுக்கான முன்னேற்றத்திற்காக பல முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக இளம் முஸ்லீம் பெண்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களை சுயதொழில் முனைவோர்களாக்க இந்த அமைப்பு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

Megham Karukatha - Official Video Song | Thiruchitrambalam | Dhanush | A...

Thursday, October 20, 2022

மயிலாடுதுறைக்கு பயணம் பயணங்கள் முடிவதில்லை!

 சிவா வாசிங்டன் (Sivaa Washington)

மயிலாடுதுறைக்கு பயணம்



6 மாதங்கள் 6 நாடுகள்

கடந்த 6 மாதங்களில் 6 நாடுகளுக்கு பயணம் செய்ய வாய்ப்பு கிட்டியது. [துபாய், அமெரிக்கா, காஸ்டாரிக்கா, கனடா, லண்டன், பிரான்ஸ்(பாரீஸ்)] -

புதிய நிலப்பரப்பு, புதிய கடற்கரைகள், புதிய மலைகள், புதிய மக்கள், ஆங்கிலம் பேசாத நாடுகள் என பயணப் பட்டேன். என் வாழ்க்கையில் இது ஒரு புது அனுபவமாக இருந்தது.

புத்தகத்தில் படிப்பதற்கும், நேரில் சென்று அந்த அந்நாட்டு மக்களை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. குறிப்பாக லண்டன், பாரீஸ், காஸ்டாரிக்கா போன்ற நாடுகள் பெரும் அனுபவத்தை கொடுத்தது. இந்த நாடுகளின் அனுபவத்தை பற்றி தனி தனி பதிவாக இடவேண்டும்.

என்னதான் சில நாடுகள் சென்றாலும், நம்ம சொந்த ஊருக்கு செல்வது போல் ஆகுமா? அதுவும் தீபாவளிக்கு சொந்த ஊரில் இருப்பது என்பது ஒரு தனி சுகம். மணிக்கூண்டை சுற்றி இருக்கும் கடைத் தெருக்கள், கடைகள், நண்பர்கள், நம்ம ஊர் மக்கள், நம்ம ஊர் அன்னை மெஸ் சாப்பாடு என்று எதையும் விட மனமில்லை.

வாழ்க்கை இணையருக்கு என் மேல் கோபம் - அமெரிக்காவில் இருந்து சில நாடுகள் சென்ற பொழுதும் எதையும் கண்டுகொள்ளவில்லை! ஆனால் மயிலாடுதுறை செல்லுகிறேன் அதுவும் கடைத் தெருவில் மூன்று நாட்கள் குடி இருக்க போகிறேன் என்றதும், என் மீது கோபம் 😉ஊர் பாசத்தை அவர்கள் புரிந்துக் கொள்ள மாட்டார்கள் 😉

மயிலாடுதுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக திருவிழாவில்

 


மயிலாடுதுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக திருவிழாவில்  ஆழ்ந்த கருத்தினை தெளிவாக நகைச்சுவையோடு வழங்கும் சிறப்பு பட்டிமன்ற பேச்சாளா் திரு.மதுக்கூா் இராமலிங்கம் அவா்கள் நடுவராக இருந்து வழங்கிய பட்டிமன்றத்திற்கு திரளான மக்கள் கூட்டம் வந்ததை காண மகிழ்வாய் இருந்தது.

தொலைக்காட்சி ஊடகத்தில் சிறப்புப் பேச்சாளா் இவா்... என்பதோடு கல்லூரி படிப்பை நமதூா் .வி.சி.கல்லூரியில் படித்தவா் என்பதை அப்போது தான் அறிந்து அந்த அவையில் அமா்ந்திருந்த பலரின் முகத்தில் சந்தோச அமுதை கண்டோம்.

அவரின் பேச்சின் ஆரம்பத்திலேயே " எங்கள் ஏவிசி கல்லூரிக்கு நுழையும் முன்பே, எதிரே டீ கடை வைத்திருந்த முத்து அண்ணன் எங்களை (மாணவா்களை) எல்லாம் உரிமையோடு தன் கடைக்கு அழைத்து சிரித்த முகத்தோடு எங்களுக்கு தேனீா், பட்சனம் வழங்கியதை பாசத்தோடு நினைத்து பாா்க்கிறேன் என்றதும்... இந்த நிகழ்ச்சியின் பாா்வையாளா் பகுதியில் கூட்டத்தோடு அமா்ந்திருந்த முத்து அண்ணன் மிக்க மகிழ்ச்சியோடு இரண்டு கைகளையும் தூக்கி தன் பிள்ளை மதுக்கூா் ராமலிங்கம் அவா்களுக்கு ஆசீா்வாதம் வழங்கியது நெகிழ்ச்சியாக இருந்தது.

Wednesday, October 19, 2022

, இரண்டு முதல் மூன்று வயதிலான குழந்தைகளை கையாள்வது பற்றி

 


Parenting thoughts

  ·

Toddler development stage (1 year to 3 years)

      புதிதாக தத்தி தத்தி நடக்க கற்றுக் கொள்ளும் குழந்தைகளை toddler என்கிறோம். அதாவது, இரண்டு முதல் மூன்று வயதிலான குழந்தைகளை கையாள்வது பற்றி விரிவாக பார்க்கலாம்.

       பிறந்த குழந்தைகள், தவழும் போதும் பிறகு நடக்க ஆரம்பிக்கும் போதும் கையாள்வது மிக எளிதானதாக இருக்கும். ஆனால், நடக்க ஆரம்பித்த சில மாதங்களில் அவர்களின் நடத்தைகளில் சில மாறுதல்கள் ஏற்படும். 18 மாதங்கள் முதல் 32 மாதங்கள் வரை, அவர்களை கையாள்வது கடினமானதாக மாறும். உணவு சாப்பிடுவதில் இருந்து... உடைகள் உடுப்பதிலிருந்து... அவர்களை எப்படி கையாள்வது என புரியாமல் பெற்றோர்கள் தவிப்பதுண்டு.

       இந்தப் பருவத்தில் குழந்தைகள் அதிக சுறுசுறுப்பாகவும்,  கற்பதில் மிகுந்த ஆர்வமாகவும், உணர்ச்சிகளை எளிதில் வெளிப்படுத்துபவர்களாகவும்  இருப்பார்கள். இந்த வயதில், உங்கள் குழந்தை புதிதாக வார்த்தைகளை கற்க தொடங்கி இருப்பார்கள். அதனால் குழந்தைகள் தாங்கள் செய்ய விரும்புவதை வார்த்தைகளால் சொல்ல தெரியாமல் அழுது அடம் பிடிக்கலாம். அந்த வயதில் அவர்களுக்கு தெரிந்த மொழி அழுவது மட்டுமே. ஆனால் பெற்றோர்களுக்கோ, குழந்தைகளை பார்த்துக் கொள்பவர்களுக்கு குழந்தைகளின் மொழி புரியாமல் குழந்தைகள் மேல் கோபம் கொள்ள வாய்ப்புண்டு. இது போன்ற சூழ்நிலைகளை Toddler temper tandrums எனக் குறிப்பிடலாம்.

Saturday, October 15, 2022

உனக்கு எது வலியோ எனக்கும் அது அப்படியே...

 


உனக்கு எது வலியோ

எனக்கும்

அது அப்படியே...

உனக்கு எது தேவையோ

எனக்கும்

அது அப்படியே...

Mathematics: Tool or Life skill..?/ Ashika Imthiyaz

 


Mathematics: Tool or Life skill..?

       இப்பொழுதெல்லாம் மாணவர்கள் கணிதத்தை முதன்மை பாடமாக எடுத்து படிப்பதை விரும்புவதில்லை. குறிப்பாக, பொறியியல் துறைகளில் மெக்கானிக்கலை விரும்புவதில்லை. இனி வரும் காலங்களில், கணிதம் மிக தேவையான மாறி வருவதால் அதனை விளக்கவே இந்த பதிவு.

     நாம படிக்கிற கணக்குகளை எல்லாம் நாம் எங்கும் உபயோகப்படுத்துவதில்லை என்றே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலான பொறியியல் மாணவர்களே அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு வளர்ந்து வரும் துறைகளான AI, Machine Learning, Data Science போன்ற பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் கூட கணிதத்தின் தேவையை உணராமல் இருப்பது அவலம்.

      என்னுடைய முந்தைய பதிவுகளில், Math skills நம் வாழ்வில் பல financial decisions களை எடுப்பதற்கு உதவியாய் இருக்கிறது. எனவே, Maths becomes a Life skill என குறிப்பிட்டு இருந்தேன். Maths ஒரு Tool மட்டும் தான் என நண்பர் குறிப்பிட்டு இருந்தார். உண்மை தான். கணிதம் ஒரு கருவியே.