Sunday, September 20, 2020

இறைவன் மிகப்பெரியவன் - எல்லா புகழும் இறைவனுக்கே !

Shaikh Sadaqathullah

 எனது மகன் ஜனாப். ஷேக் சம்சுத்தீன் மக்கி (வயது 23) அவர்கள் இன்ஷா அல்லாஹ் வரும் புதன்கிழமை M.A. அரபிக் முதுநிலை பட்டபடிப்புக்கான இறுதித் தேர்வு எழுதிட உள்ளார். இளநிலை மற்றும்  முதுநிலை பட்டப் படிப்புகளை ( The New College - Chennai ) சென்னை புதுக்கல்லூரியில் பயின்றார். அவர் சிறப்பான முறையில் தேர்வெழுதி வெற்றி பெற்றிட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்தனை செய்திடுமாறு யாவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு  முடிந்த பிறகு எமது தொழிலில்  ( பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எமது தகப்பனார்  காலம்சென்ற  ஹாஜி ஷேக் சம்சுத்தீன் மக்கி அவர்கள் 1964 ம் ஆண்டு அவர்தம் கடின உழைப்பாலும், நேரிய நெறிகளாலும் உருவாக்கித்தந்த கட்டிட வாடகை வசூல் மற்றும் பராமரிப்பு சேவை – RENT COLLECTION & BUILDING MANAGEMENT SERVICE )  இன்ஷா அல்லாஹ் எம்முடன் ஈடுபட உள்ளார்.  

அவர் மெச்சத்தகவகையில் தனது அரிய வகைக் குருதியான  AB NEGATIVE  இரத்தத்தை இது நாள் வரை 9 தடவையாக தானம் செய்துள்ளார்.  மேலும், எமது தொழிலில் சீறிய முறையில் செவ்வனே ஈடுபடுத்திக்கொள்ளவும், மற்றும் சமூக சேவைகளில் தன்னார்வத்தோடு ஈடுபடவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக - ஆமீன். 

இருக்கும் போது  இரத்ததானம் செய்வோம் - இறந்த பின் கண்தானம் செய்வோம் !

இறைவனை வணங்கி வாழ்வோம் - இல்லாதோர்க்கு வழங்கி வாழ்வோம் - எல்லோரோடு இணங்கி வாழ்வோம்.

காயல்பட்டணம் ஷேக் சதக்கத்துல்லாஹ் -

My Website -- www.sadaqathullah.com/blood.html



( இந்த புகைப்படம் எமது மஹல்லாஹ் - மஸ்ஜிதே மாஃமூர்  பள்ளிவாசலில் வைத்து எடுத்தது ).



Shaikh Sadaqathullah

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் ஷேக் சதகதுல்லா Shaikh Sadaqathullah.



No comments: