Thursday, September 24, 2020

நாகூர் ரூமி அவர்களுடன்

 அஸ்ஸலாமு அலைக்கும்

பல ஆண்டுகளாக பார்க்க விரும்பிய உயர்திரு பேராசிரியர் முகநூல் நண்பர் அண்ணன் @நாகூர் ரூமி அவர்கள் தங்கள் குடும்பத்துடன் எங்கள் இல்லம் நாடி வந்து எங்கள் அனைவரையும் மகிழ்வித்தார்கள்

இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

முகம்மது அலி 

≠≠_

நாகூர் ரூமி


இயற்பெயர் முஹம்மது ரபி. புனைபெயர்: நாகூர் ரூமி. கல்வித் தகுதி: எம்.ஏ., பிஎச்.டி., கம்பன் - மில்டன் காவியங்களில் ஒப்பாய்வுக்காக, சென்னைப் பல்கலைக் கழக முனைவர் பட்டம். கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், சுயமுன்னேற்றம், மதம், ஆன்மிகம், வாழ்க்கை வரலாறு, தமிழாக்கம் என நிறைய நூல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்’ நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும், ஹோமரின் ‘இலியட்’ காவிய மொழிபெயர்ப்புக்கு 2009-ம் ஆண்டுக்கான நல்லி திசையெட்டும் மொழியாக்க விருதும் கிடைத்தது. கணையாழி தொடங்கி கல்கி, விகடன், குமுதம் என எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளார். இணையத்திலும் எழுதுகிறார். www.nagorerumi.com என்ற இவரது வலைத்தளத்திலும் இவரது ஆக்கங்களைப் படிக்கலாம். ஆம்பூர், மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இவர், சென்னையில் பல ஆண்டுகளாக ஆல்ஃபா தியான வகுப்புகளை நடத்தி வருகிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறியுள்ளார்.


அண்ணன் நாகூர் ருமி அவர்களுடன் எனது பேரனும் நானும் நீடூர் நெய்வாசல் ஜும்மா பள்ளிவாசலில் இஸா தொழுகையை நிறைவேற்றிய பின்பு எடுத்தது


எனது இல்லத்தில் 






No comments: