Thursday, September 10, 2020

தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_12 அபு ஹாஷிமா

 லெபனான் ...

நான் பார்க்க ஆசைப்பட்ட நாடுகளில் ஒன்று லெபனான்.

கழிந்த அத்தியாயத்தில் நான் சவுதியில் வேலை பார்த்த கம்பனியைப் பற்றி சொல்லி இருந்தேன்.

அதன் உரிமையாளர் அரபி என்றாலும் பெயரளவுக்குத்தான் அவர் கபில்.

கம்பெனியின் ஏராளமான பங்குகளும் முழு அதிகாரமும் நிர்வாகப் பொறுப்பும் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்களின்

கைவசமே இருந்தது .

#ஜார்ஜ்பிரேம்

#ஷஃபி_பிரேம்

#ரஃபி_பிரேம்

என்ற மூன்று லெபனான் சகோதரரர்கள்தான் சகலமும்.

இதில் ஜார்ஜ் பிரேம் லெபனான் நாட்டு மந்திரியாகவும் இருந்தார்.

அங்கேயும் அவர்களுக்கு பல தொழிற்சாலைகள் இருந்தன.

சனிதா Sanitha என்ற பெயரில் அந்தத் தொழிற்சாலைகள் இயங்கி வந்தன.

லெபனானைப் பற்றி இப்போது சொல்ல என்ன காரணம் ?

சமீபத்தில் லெபனானில் நிகழ்ந்த எரிபொருள் வெடிப்பு சம்பவம் நமக்கெல்லாம் தெரியும்.

ஏராளமானவர்கள் இறந்து போனார்கள்.

லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து விட்டார்கள்.

லெபனானின் சோகம் தொடர்கதையாகி வருகிறது.

அதனால் லெபனானைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம் .

உலகின் மிக அழகான நாடுகளில் லெபனானும் ஒன்று .

#லெபன் என்றால் 

#தயிர் என்று பொருள்.

பனிக்காலங்களில் லெபனான் நாட்டு மலைகள் தயிரில் குளித்ததுபோல்

வெண்மையாக காட்சி தரும்.

அந்த காட்சியில் மயங்கிய மக்கள் தங்கள் நாட்டுக்கே லெபனான் என்று

பெயர் வைத்து விட்டார்கள்.

அரபு நாடாக இருந்தாலும் அரபு நாட்டு சீதோஷ்ண நிலை இங்கே கிடையாது .

மிக அருமையான பருவ காலங்களைக் கொண்ட நாடு லெபனான்.

லெபனான் மட்டுமல்ல ..

லெபனான் மக்களும் அழகானவர்கள்.

லெபனான் அழகிகள் உலகப் புகழ் பெற்றவர்கள்.

பண்டைய காலத்தின் கலை கலாச்சாரங்களில் சிறந்து விளங்கிய இந்நாட்டில் முஸ்லிம்களும் கிறித்தவர்களும் சரிசமமான அளவில் வாழுகின்றார்கள்.

ஜனாதிபதி முஸ்லிமென்றால் பிரதமர் கிறிஸ்த்தவராக இருப்பார்.

இது மாறி மாறி வரும் அரசியல் அமைப்பு கொண்ட நாடு லெபனான்.

இந்த அழகான நாட்டை கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஆட்சி செய்தனர்.

உமையாக்களும் 

அப்பாசியாக்களும் 

மம்லூக்குகளும் ஆட்சி செய்த பிறகு 

துருக்கி சுல்தான் படையெடுத்து தனது ஆட்சியின் கீழ் இதைக் கொண்டு வந்தார்.

நீண்ட நெடுங்காலமாக மக்கள் போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து  1946 ல் தங்கள் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றார்கள்.

அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு 1900 ல் யூதர்கள் வடிவில் சோதனை வந்தது.

1948ல் யூதர்கள் ஆக்கிரமித்துக் கொண்ட பாலஸ்தீனப் பகுதியை தங்கள் சொந்த நாடாக பிரகடனம் செய்தார்கள்.

அதை அமெரிக்கா உடனே அங்கீகரித்தது.

அதைத்தொடர்ந்து அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் அடிக்கடி தகராறுகளும் போர்களும் நடக்க ஆரம்பித்தன.

ஒற்றுமையாக வாழ்ந்து வந்த  லெபனான் நாட்டு முஸ்லிம்களும்  கிருஸ்துவர்களும் தங்களுக்குள்  மோதிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் அதற்கு 

தூண்டுகோலாக இருந்தன.

அந்த மோதல்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட பிறகு இஸ்ரேல் தீவிரவாதிகள் 1976 ல் லெபனான் மீது தாக்குதல் நடத்தினர்.

நிறைய மக்கள் இறந்து போனார்கள்.

1978 லும் மற்றொரு தாக்குதல் நடந்தது.

1982 ல் லெபனானில் ஒரு பெரும் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றி அந்த பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களை கொலை செய்வதை

வாடிக்கையாக நடத்திக் கொண்டிருந்தது.

அதேநேரம் பாலஸ்தீனை முழுமையாக ஆக்கிரமித்துவிட வேண்டும் என்ற வெறியில் பாலஸ்தீனத்தின் மீதும்

கடுமையான குண்டுமழை பொழிந்தது.

கணக்கு வழக்கில்லாத முஸ்லிம்கள் அநியாயமாக இறந்து போனார்கள்.

உயிர் தப்பிய மக்களில் இரண்டு லட்சம் முஸ்லிம்கள் தங்கள் சொத்துக்களையும்  வீடுகளையும் அப்படி அப்படியே விட்டு விட்டு லெபனானில் அகதிகளாக வந்து குடியேறினார்கள்.

மேற்கு பெய்ரூட்டிலுள்ள 

#சாப்ரா_ஷத்தீலா என்ற அகதி முகாம்களில் இவர்கள் தங்கி இருந்தனர்.

1986 செப்டம்பர் பத்தாம் நாள் #மோனாச்சம்_பிகின் என்ற யூத வெறியனின் தலைமையிலான ஒரு கொலைப்படை நவீன கொலைக் கருவிகளோடு இந்த முகாம்களில் வந்து இறங்கியது. அதன் தளபதி 

#ஏரியல்_ஷெரோன் .

( இந்த ஷெரோன் பின்னர் இஸ்ரேலின் பிரதமராகி பாலஸ்தீன மக்களுக்கு ஏகப்பட்ட துன்பங்களை விளைவித்தான்.

பின்னர் பதவி இழந்து நோயாளி ஆகி 

பல வருடங்கள் கோமாவில் கிடந்து 

சித்திரவதைக்கு ஆளாகி புழுத்துச் செத்தான் )

பாலஸ்தீனிலிருந்து வந்து தங்கி இருந்த அந்த மக்களை மூன்று நாட்கள் இரவும் பகலுமாக வார்த்தைகளால் விவரிக்கமுடியாத வகைகளிலெல்லாம்

கொடூரமாக இவர்கள் கொன்று குவித்தார்கள்.

உதவி உதவி என்று கதறிய அந்த மக்களைக் காப்பாற்ற எந்த அரபு நாடும் வரவில்லை.

இருபதாயிரம் முஸ்லிம்கள் துடிக்க துடிக்க கொல்லப் பட்டார்கள்.

#அதில்_ஒரு_யூதன்_கூட_சாகவில்லை.

என்றாவது ஒருநாள் தங்கள் வாழ்வுக்கும் விடியல் வரும் . தாங்களும் நிம்மதியாக வாழலாம் என்று நினைத்த 

அந்த மக்களின் 

கனவெல்லாம் கண்ணீரானது

தரையெல்லாம் செந்நீரானது.

அமெரிக்க பிரிட்டன் இஸ்ரேல் கூட்டு சதிகளை நன்றாகத் தெரிந்துகொண்ட #மூஸா_சத்ர் என்ற ஈரானியர் அந்த சதிகளை முறியடிக்க 

#அமல் என்ற ஒரு படையை தோற்றுவித்தார். இந்த அமைப்பு இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முடிந்த அளவு பதிலடி கொடுத்தது.

மூஸா சத்ரின் மறைவுக்குப் பிறகு

 அமல் அமைப்பு 

#ஹிஸ்புல்லாஹ் வாக மாறியது.

இதில் பெரும்பான்மை மக்கள் ஷியாக்களாக இருந்தாலும்  அவர்கள்தான் யூதர்களிடமிருந்து

எல்லா முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் காப்பாற்ற போராடினார்கள்.

வீரமும் விவேகமும் நிறைந்த ஹிஸ்புல்லாஹ்வின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 2000ம் ஆண்டில்  லெபனானை விட்டு வெளியேறியது இஸ்ரேல்.

லெபனானின் வளர்ச்சியை மட்டும் கருத்தில் கொண்ட ஹிஸ்புல்லா கல்வி வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி லெபனானை மிகச் சிறப்பான வளர்ச்சிப் பாதையை நோக்கி

அழெத்துச் சென்றது.

மீண்டும் லெபனான் பூவுலகின் பேரழகான நாடு ஆகி விட்டத்தை பொறுக்க முடியாத இஸ்ரேல் அமெரிக்காவைக் கெஞ்சிக் கூத்தாடி லெபனானை தாக்க வைத்தது.

ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் 

நாசமாக்கிய  அமெரிக்க அதிபர் சண்டாளன் 

#ஜார்ஜ்_புஷ் அனுமதியோடு

#கண்டலிசா_ரைஸ் என்ற பெண்பேய் #இங்கிலாந்தின்_டோனி_பிளேர் என்ற

கொலைகாரனை சந்தித்து சூழ்ச்சிகள் பல செய்து  லெபானின் மீது கடுமெயான தாக்குதலை நடத்தினார்கள்.

லெபனான் மீண்டுமொருமுறை அழிந்தது.

அதன் பிறகு பத்தாண்டுகளாக கஷ்டப்பட்டு புதுப் பொலிவோடு எழுந்த லெபனான் சில நாட்களுக்கு முன்னால் 

சேமித்து வைக்கப்பட்டிருந்த 

எரிபொருள் வெடித்ததின் காரணமாக பேரழிவுக்கு ஆளாகி இருக்கிறது.

அரபு நாடுகளின் மீதும் 

பாலஸ்தீன் மற்றும் லெபனான் மீதும் 

இஸ்ரேல் உக்கிர தாண்டவம் ஆடிய அந்த 

காலகட்டத்தில்தான் நான் சவுதியில் இருந்தேன்.

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன் ,

லெபனான் நாட்டு மக்களுக்கு சவுதி உட்பட அரபு நாடுகள் ஏராளமான வேலை வாய்ப்புகளை வாரி வழங்கின.

லட்சக்கணக்கான பாலஸ்தீன லெபனான் மக்கள் சவுதியில் வேலைக்குச் சேர்ந்தார்கள்.

பல கம்பெனிகளில் உயர் பதவிகளில் அவர்கள் இருந்தார்கள்.

அவர்களில் பலர் மிகச் சிறந்த அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள்.

நான் வேலை செய்த பேக்டரியிலும் 

லெபனானிகளோடு

ஏராளமான பாலஸ்தீனியர்களும் வேலை செய்தார்கள்.

செக்யூரிட்டி கார்டாக ஒரு பாலஸ்தீனி வேலை செய்தார்.

குண்டான மனிதர்.

எப்போதும் இன்முகத்தோடு எல்லோரிடமும் பழகுவார்.

சில நைட் ஷிப்டுகளில் 

அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களையும் கொடுமைகளையும் 

அரைகுறை ஆங்கிலத்திலும் அரபியிலுமாக சொல்லி கண்ணீர் வடிப்பார். மனசு உடைந்து அழுவார்.

அவர்கள் படும் வேதனைகளுக்கு முன்னால் நாம் படும் துன்பங்களோ 

துயரங்களோ ஒன்றுமே இல்லை என்பதை புரிய வைப்பார்.

ஒருவருடமோ இரண்டு வருடமோ 

வேலை செய்து வெக்கேஷனில் 

அவர்களால் ஊருக்குக் கூட போக முடியாது.

காரணம் போர்.

இப்படி பல்வேறு மனிதர்களின் 

வாழ்க்கை அனுபவங்களோடுதான் 

அரபு நாட்டில் நம்முடைய பொழப்பு 

ஓடிக் கொண்டிருந்தது.

இன்ஷா அல்லாஹ் ...

அந்த அனுபவங்களையும் 

ஒருநாள் விட்டு ஒருநாள் உங்களோடு 

பகிர்ந்து கொள்வேன்.

* இந்தப் பதிவை மெனக்கெட்டு படிப்பவர்கள் இதில் இடம் பெற்றுள்ள 

#படங்களையும்_தயவு_செய்து #பாருங்கள்.

எவ்வளவு அழகாக இருந்த ஒரு நாட்டை 

வல்லரசு சாத்தான்கள் எவ்வளவு குரூரமாக நாசமாக்கி இருக்கிறார்கள் என்பது புரியும்.

#முதல்6படங்கள்

* லெபனானின் வெள்ளைப்பனி போர்த்திய மலைகள்.

#இரண்டாவது3படங்கள்

* லெபனானின் பழங்கால சரித்திர சின்னங்கள் 

#மூன்றாவது7படங்கள் 

* லெபனான் மீது நடத்தப்பட்ட வல்லரசு தாக்குதல்கள் 

#நான்காவது7படங்கள்

லெபனான் நாட்டின் எழில்மிகு தோற்றங்கள் 

#ஐந்தாவதுபடம் 

* லெபனானின் அழகான பெண்களில் ஒருத்தி

#ஆறாவது4படங்கள்

* லெபனான் நாட்டின்  ஷப்ரா ஷத்தீலா அகதி முகாம்களில் தங்கி இருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை

##ஏழாவது3படங்கள் 

* லெபனானில் சமீபத்தில் நடந்த எரிபொருள் வெடிப்பில் சீரழிந்துபோன பெய்ரூட் நகரம்



Abu Haashima




















































No comments: