Tuesday, May 5, 2020

மறைந்த மாமேதை மர்ஹூம் மௌலானா எஸ். ஆர். ஷம்சுல் ஹுதா அவர்களின் பயான்,

நாற்பது வருடத்திற்கு முன் ரமலான் தராவிஹ்!

சுமார்
இருபது நிமிட பயானாக இருந்தாலும் ஒரு அற்புதமாகவும் கேட்க கேட்க இனிமையாகவும் கருத்து மிக்கதாகவுமே இருந்தது.

நீடூர் நெய்வாசல் பெரிய பள்ளியில்
மறைந்த மாமேதை மர்ஹூம் மௌலானா எஸ். ஆர். ஷம்சுல் ஹுதா அவர்களின் பயான்,
அன்று ஹாஃபில் அவர்கள் எதை ஓதுகிறாரோ
அதிலிலிருந்து ஒரு வரி எடுத்துக் கொண்டு  மிக அற்புதமான கருத்துக்களை சொல்வார்கள். அதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்!
அவர்களின் அந்த பயானை கேட்க மற்ற ஜமாஅத் நண்பர்களும் ஓடோடி வருவார்கள்.
அவர்களின் விளக்கம் அப்படி இருக்கும்!


அந்த பயான் இன்று வரை எங்கள் காதுகளில்  ஒலித்துகொண்டே இருக்கிறது.

அவர்களின் கால்களுக்கருகே நாங்கள் அமர்ந்திருப்போம், அவர்களின் அங்க அசைவுகளை கவனித்தவாறே!

அவர்களின் தலைப்பாகை ஆடுவதும் அற்புதமே!

இன்னும் கொஞ்ச நேரம் சொல்ல மாட்டார்களா என்று நினைக்கும் போது சரியாக இருபது நிமிடத்தில் முடித்து விடுவர்கள்.

கடைசி பிறை 28 தராவிஹ் தொழுகையில்
ஹாஃபிசாவை  ஒவ்வொரு முதல் ரக்காயத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை
ஓதச் சொன்னார்கள்.
பிறை 29-ல்  முதல் ரக்காயதில் அர்ரஹ்மான் சூராவை ஓத சொன்னவர்கள்.

குல்ஹுவல்லாஹு-வுக்கு விளக்கம் தந்தார்கள் பாருங்கள்; அல்லாஹு அக்பர்!! அப்படி ஒரு விளக்கம்!!

அதே அர்ரஹ்மானுக்கும் தந்தார்கள்!

அந்த காலத்தை அற்புத காலமாகவே நினைக்கிறேன்!

இன்று வரை அப்படி ஒரு ஆலிம் பெருமகனாரை பார்க்க முடியவில்லை.
அவர்களின் பயானை கேட்டவர்கள்  பாக்கியசாலிகளே!
அதில் நானும்  ஒருவன். அல்ஹம்து லில்லாஹ்!

அவர்களின் பயானை கேட்ட பாக்கியவான் கள் யார் யார்? அவர்களோடு உங்களி்ன் அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லுங்களேன்!

#நீடூர்அபுஅய்மன்
 மர்ஹூம் ஹஜ்ரத் S.R.ஷம்சுல்ஹுதா அவர்கள்  நீடூர் - நெய்வாசலில் பல ஆண்டுகள் நீடூர் - நெய்வாசல் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் நாஜிராகவும்(முதல்வராக) நீடூர் நெய்வாசல் ஜாமியா மஸ்ஜிதில் தலைமை இமாமாகவும் இருந்து சிறந்த சேவை செய்தார்கள்.
ஹஜ்ரத் அவர்களின் சொந்த ஊர் வடக்கு மாங்குடி
S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின்,அறிவியல் ரீதியிலான சொற்பொழிவு,
அல்லாவின் உயரிய படைப்பின் பார்வை,உயரினங்களின் உண்ணதம்,
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

No comments: