Monday, May 11, 2020

நான் பிரான்ஸ் வந்தபோது / Nidur AbuAyman

புதிதில் பள்ளிவாசல் எங்கு இருக்கிறது  என்று தெரியாமல் இருந்த நேரத்தில்
#தாஃவா தப்லிக் சகோதரர் ஆஃபிரிகா நாட்டச்சார்ந்த
முஹம்மது பிலால் என்பவர் #என் வீடு தேடி வந்து
பள்ளி வாசல் பக்கத்தில் இருக்கிறது என்று சொல்லி அழைத்துச்சென்றார்
(#அல்லாஹ் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஜன்னத்தையும் தந்தருள்வானாக)
#அவர் யார் என்று எனக்குதெரியாது நான் யார் என்று அவருக்கு  தெரியாது அல்லாஹ்
மலக்கை அனுப்பியது
போன்று எனக்கு தோன்றியது
#சிலநாட்களாக ஒரு சிலர் தப்லிக் தஃவா செய்யக்கூடியவர்களை தவறாக எழுதி வருகிறார்கள்
#எத்தனையோ மடாக்குடிகாரர்களையும்  நிரந்தர தொழுகையாளியாக்கிய வரலாறு இருக்கிறது
#தப்லிக் செய்பவர்கள் வாலி ஏந்தியோ போஸ்ட்டர் ஒட்டியோ
ஜகாத் நிதியோ
பித்ரா நிதியோ
வெளி நாடு மற்றும் எந்தவித வசூலும் செய்யாமல்
#தன் சொந்த பணத்தில் ஊர் ஊராக சென்று மக்களை தொழ அழைக்கிறார்கள்
#அவர்களின்
பணத்திலேயே சமைத்தும் சாப்பிடுகிறார்கள்
விளம்பர படுத்தி யாரோ பிரியாணி ஆக்கிஇவர்கள் சாப்பிடுவதில்லை

இன்று எவ்வளவு படு மோசமாக இருந்த தொழாத மனிதர்களை அத்தனை சுன்னத்துக்களையும் ஹயாத்தாக வைத்தவர்கள்
#ஆடியோபோட்டு அசிங்கபடவில்லை வீடியோ போட்டு வீண் விவதங்களில் ஈடுபட்டதில்லை
#ஊழல் குற்றச்சாட்டு பட்டதில்லை
#ஒருஉண்மைத்தெரியுமா உங்களுக்கு
இங்கு (பிரான்ஸில்)
முஸ்லிம் தாய் தந்தயர்களுக்கு பிறந்த ஆஃப்ரிக்க மற்றும் அரபுகளும்               
#மார்க்கமே_என்ன_வென்று தெரியாத வாலிபர்கள் திருட்டிலும்
கஞ்சா  மற்றும் பல வித அராஜகங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் நம் கண் முன்னால்
இன்று பெரிய தாடியோடும்  தலைப்பாகையயோடும்  மற்றவர்ளையும் தொழ அழைப்பாளர்களாக மாற்றி பெருமை தப்லிகையே சேரும்
#அதுமட்டுமல்லஅந்த இளைஞர்கள் வரதட்சணை வாங்காமலும் சுன்னதான முறையில் இங்கு திருமணம்  முடிக்கும் நிகழ்வுகள் அதிகம்
#இங்கு பிரான்ஸில் எங்களது மஹல்லாவில்
மேயர் அவர்கள் தவறான வழியில் சென்றவர்ளை
நேர்வழிக்கு அழைத்த தப்லிக் செய்பவர்களை பாராட்டிய நற்சான்றுதலும்  இருக்கிறது
#டீவி போஸ்டர் பேனர் பல விதமான விளம்பரம் இல்லாமல் லட்சக்கணக்கில்
வேரு எந்தஇயக்கமும்
இப்படி ஒரு கூட்டம் கூட்டமுடியுமா?
சில தவறுகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம் யாரிடம் தவறில்லை
#தேவைஇல்லாமல் அவர்களை திட்டுவதை #நிறுத்துங்கள்

#நீடூர்அபுஅய்மன்

No comments: