Sunday, May 17, 2020

மூதாதையர்களுக்கான துஆ:


• யா அல்லாஹ், வஃபாத்தான என் மூதாதையர்கள் மற்றும் என் உம்மத்தினரின் பாவங்களை மன்னிப்பாயாக.

•யா அல்லாஹ், அவர்கள் உன்னை காணும் வரை மண்ணறையில் அவர்களுக்கு நிம்மதியான நேரத்தை வழங்கிடுவாயாக.

•யா அல்லாஹ், அவர்களை கப்ரின் வேதனை மற்றும் நரக நெருப்பிலிருந்து  பாதுகாப்பாயாக.

•யா அல்லாஹ், அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி கிருபை செய்திடுவாயாக.

•யா அல்லாஹ், அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் நல்லறங்களை ஏற்று கொள்வாயாக.

•மேலும் மறுமையில்  ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேன்மையான  சொர்க்கத்தை
அவர்களுக்கு வழங்கிடுவாயாக.


குடும்பத்தினருக்கான துஆ:


•யா அல்லாஹ், என் பெற்றோர்களைப் பாதுகாப்பாயாக.

•என் கணவனை/மனைவியைப் பாதுகாப்பாயாக.

•என் குழந்தைகளைப் பாதுகாப்பாயாக.

•என் சகோதர சகோதரிகளைப் பாதுகாப்பாயாக.

•எங்கள் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தை வழங்குவாயாக.

•எங்களுக்கு அருள் புரிவாயாக.

•எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக.

•நன்மையானவற்றை மட்டும் எங்களுக்கு வழங்குவாயாக.

•அனைத்து நோய் நொடியிலிருந்து எங்களை(குணப்படுத்துவாயாக)பாதுகாப்பாயாக.

•என்னையும் என் பெற்றோரையும்,  என் கணவனையும்/மனைவியையும்,   என் குழந்தைகளையும்,  என் உடன் பிறந்தவர்களையும் நேர் வழியில் செலுத்துவாயாக.

•யா அல்லாஹ், என்னையும் என்னுடைய குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக.

•ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேன்மையான சுவனபதியில் எங்களை நுழைய செய்வாயாக.

•யா அல்லாஹ், என் பெற்றோரின் பாவங்களை மன்னிப்பாயாக.

•இம்மையிலும், மறுமையிலும் அவர்களுக்கு சிறந்ததை வழங்குவாயாக.

•அவர்கள் கண்களின் குளிர்ச்சியாக என்னை ஆக்குவாயாக.

•யா அல்லாஹ், என் உடன் பிறவிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை வழங்கிடுவாயாக.

•யா அல்லாஹ், என் பெற்றோர்களின்,என் கணவனின்/மனைவியின் பெற்றோர்களின்,என் சகோதர சகோதரியின் மற்றும் என் உம்மத்தின் பதவிகளை உயர்த்திடுவாயாக.

•யா அல்லாஹ், என்னையும் அவர்களையும் நோய் நொடியிலிருந்தும் வயது முதிர்ச்சியின் கஷ்டங்களில் இருந்தும் பாதுகாப்பாயாக.

•ஷைத்தானின் தீண்டுதலிருந்து  பாதுகாத்து, எனக்கும் என் உடன் பிறந்தவர்களுக்கும் இடையில் அன்பையும், பிணைப்பையும் அதிக படுத்துவாயாக.

•யா அல்லாஹ், எனக்கும், என் பெற்றோர்களுக்கும், என் குழந்தைகளுக்கும், என் குடும்பத்தாருக்கும் ஈமானை அதிக படுத்தி அதில் நிலை நிறுத்துவாயாக.

•என்னையும் என் குடும்பத்தாரையும் மீண்டும் மீண்டும் ஹஜ் உம்ராஹ் செய்ய அருள் செய்வாயாக.

•யா அல்லாஹ், எங்களை கப்ரின்
வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திலிருந்தும், நரக நெருப்பிலிருந்தும் பாதுகாப்பாயாக.

•வலக்கையால் தன் புத்தகத்தை வாங்குவர்களில் என்னையும் என் குடும்பத்தாரையும் ஆக்கி வைப்பாயாக.

•யா அல்லாஹ், எங்களுக்கு தொழுகையை நிலைநிறுத்தி அதை உரிய நேரத்தில் நிறைவேற்றிட உதவி செய்வாயாக.

•யா அல்லாஹ், ஹராமானவற்றிலிந்து எங்களைப் பாதுகாப்பாயாக.

•யா அல்லாஹ்,வட்டியிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக.

•யா அல்லாஹ், உன் கோபப் பார்வையிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக.

•யா அல்லாஹ், இம்மையிலும், மறுமையிலும் எங்களையும் எங்கள் குடும்பத்தார்களையும் சேர்த்து வைப்பாயாக.

•யா அல்லாஹ, எங்கள் நற்செயல்களில் எங்களை நிலை நிறுத்துவாயாக.

•யா அல்லாஹ், மறுமை நாளுக்காக எங்களை தயார் படுத்துவாயாக.

•யா அல்லாஹ், முஹம்மது நபி(ஸல்)அவர்கள் பிரார்த்தித்த நன்மையானவற்றைக் வழங்கிடுவாயாக.

•யா அல்லாஹ், அவர்கள் பாதுகாப்புத் தேடிய அனைத்திலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக.

No comments: