Wednesday, May 13, 2020

சில மண்மூடிய அஸ்திவாரங்கள்

Vavar F Habibullah



80 களின் துவக்கத்தில்
என்று நினைக்கிறேன்.
தக்கலையில் குழந்தைகள்
சிகிச்சைக்கென்றே தனியாக
ஹபீப் குழந்தைகள் மருத்துவமனை
உருவான நேரம். எம்ஜிஆர்
ஆட்சியில் வக்பு வாரிய
விசாரணைக்குழு உறுப்பினராக
நான் தேர்வு செய்யப்பட்ட நேரம்.

சென்னை பிரபல சட்ட வல்லுனரும்
தொழில் அதிபருமான நண்பர்
ரஜாக், வக்பு வாரிய தலைவராக
இருந்தார். எனது மாமா
திருவிதாங்கோடு
எஸ்எ.இப்ராஹீம் அப்போது
முஸ்லிம் கலைக்கல்லூரியின்
நிர்வாகியாக இருந்தார்.



அன்றைய தமிழக முதல்வர்
எம்ஜிஆர் அவர்களுடன் எனக்கு
நல்ல தொடர்பு இருந்ததால்
கல்லூரி துவங்கிய காலத்தில்
சில பெரிய விஷயங்களை கூட
என்னால் எளிதாக செய்து தர
முடிந்தது.தொழில் அதிபர்
பிஎஸ்ஏ.ரஹ்மான் கல்லூரியை
பார்வையிட வருவதாக எனக்கு
தகவல் அனுப்பினார்.நான் தான்
கல்லூரி வளாகத்தில் ஒரு சிறப்பு
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன்.
பிஎஸ்ஏ, வக்பு வாரிய தலைவர்
ரஜாக் உட்பட அவரது சில
நண்பர்களையும் அழைத்துக்
கொண்டு திருவிதாங்கோடு
வந்தார்.கல்லூரி எதிர்புரம்
உள்ள மாமாவின் வீட்டில் தான்
ஒரு நாள் முழுக்க தங்கி
இருந்தார்.

விழா நிகழ்ச்சிகள் எனது
தலைமையில் தான் நடந்தது.
பிஎஸ்ஏ ரஹ்மான் கல்லூரி
எனக்கு சொந்தமானது என்று
நினைத்து, இரண்டு லட்சத்துக்
கான காசோலையை
நன்கொடையாக மேடையில்
வைத்து என்னிடம் வழங்கினார்.
நான் தான் மாமாவை அழைத்து
அதை பெற வைத்தேன்.

மிகவும் இளைஞனாக இருந்த
கால கட்டம் அது.மாமாவின்
நிர்வாகத்தில் கல்லூரி இருந்த
தால், நிர்வாக விசயங்களில்
நான் அதிகம் தலையிடுவது
இல்லை. நிர்வாக பிரச்னைகள்
வரும் போது பிரின்சிபால்
என்னை தொடர்பு கொள்வார்.
நான் தீர்த்து வைப்பது வழக்கம்.
நான் அந்த நாள் கல்லூரி
பேட்ரன் மெம்பர்

பிறகு நான் சென்னை சென்று
விட்டேன். நாகர்கோவில்
தொடர்பும் குறைந்து விட்டது.
முஸ்லிம் கலைக் கல்லூரி
பேட்ரன் என்பதற்கான எந்த
ஆதாரமும் என் வசம் இல்லை.
சில அஸ்திவாரங்கள் மறைந்து
கிடப்பதாலேயே சில கட்டிடங்கள்
கம்பீரமாக உயர்ந்து நிற்கின்றன.
கறிவேப்பிலைகள் தூக்கி
எறியவே பயன்படுகின்றன.
Muslim Community is
not bothered about
the blood the flesh and
the bones of the patrons
that gives life to an
organisation

No comments: