Saturday, May 30, 2020

பிறர் வாழ விழுந்த மனிதர்

பிறர் வாழ விழுந்த மனிதர்

Vavar F Habibullah
ஐம்பது வருடங்களுக்கு
முன்னால் கோட்டாறில்
வாழ்ந்த இந்த பெரிய
மனிதரின் பெயர்
வாவர் ஹாஜியார்.
உண்மையில் இவர் ஒரு
செல்ஃப்மேட் மேன்.இளம்
வயதில் மிகவும் கஷ்டப்பட்டு
தன் திறமையால் சமூகத்தில்
மிகவும் உயர்ந்த நிலையைத்
தொட்டவர்.

சினிமாவில் கூட காண முடியாத
அளவுக்கு அதிசய திருப்பங்கள்
கொண்டது இவரது வாழ்க்கை
வரலாறு.இதை நான் சொல்லா
விட்டால் இளம் தலை முறை
என்னை மன்னிக்காது.ஹிஸ்டரி
என்பது ‘ஹிஸ் ஸ்டோரி’ என்பதால்
இது கூட அவரது கதை தான்.
தயாளம்,தர்மம் கூட எல்லை
மீறி போனால் அது மனிதனை
அழித்து விடும் என்பதற்கு இவர்
ஒரு உதாரணம்.


தன்னை சுற்றிலும் உள்ளவர்
வறுமையிலும் ஏழ்மையிலும்
உழல்வதை கண்ணுற்ற இவர்
அவர்கள் வாழ்வாதரத்தை
உயர்த்த ஒரு தொழில் நிறுவனம்
ஒன்றை நாகர்கோவில் நகரில்
துவங்கினார்.

ஜாரியா சா மில்ஸ்
தயாரிப்பாளர்,
வுடன் எலக்ட்ரிகல்
புராடக்ட்ஸ்,புல்லக் கார்ட்
அசஸரீஸ், பாரஸ்ட் காண்ட்ராக்டர்
டீக்,ஈட்டி வுட் ஸ்பெசலிஸ்ட் என
மரத்தொழிலில் அபாரமான
முதலீடு.இருநூறு பேர் வரை
ஏழைகளை தேர்வு செய்து
பணியில் அமர்த்திய நிறுவனம்.

உறவினர் பலரை
அந்த நிறுவனத்தில் பணியில்
அமர்த்தினார்.தொழில் நிறுவனத்
தை தன் பெயரில் இல்லாமல்
வேறு உறவினர் பெயரில் நடத்தி
னார்.தன் சொத்துக்களுக்கெல்
லாம் பவர் ஆஃப் அட்டார்னியும்
எழுதிக் கொடுத்தார். அவர்
உழைப்பால் உருவான பல
சொத்துக்கள் அவர் அறியாமலே
பின்னாளில் பிறர் கை மாற இது
துணை புரிந்தது. இவரால் வளர்ந்த
பலர் இவருக்கு எதிராக ஓரணியில்
திரண்டனர்.பல கேஸ்கள்
கோர்டில், இவர் மீது
புனையப்பட்டன.

வயதான காலத்தில் ஊரில்
சற்று ரிலாக்சாக வாழலாம் என்று
வந்த இவரை பல கேஸ்கள் சூழ்ந்து
கொண்டன.இவற்றில் இருந்து விடுபட
ஒரே வழி.....பிஸினஸ் நிறுவனத்தை
விற்று விடுவது.இந்த ஆலோசனையை
அவருக்கு வழங்கியவர், அன்றைய
பிரபல வழக்கறிஞரும் முன்னாள்
எம்பி யுமான அவரது நண்பர்
ஏஏ.ரஸாக்.MA.LLB,Ex.MP

தனது நண்பரை பற்றி ரஸாக்
கூறும் நகைச்சுவை டயலாக்
He is an open book
Any one can write on him
அவர் ஒரு திறந்த புத்தகம்
யார் வேண்டுமானாலும் எழுதிக்
கொள்ளலாம். உண்மை தான் அது.

பணம் மிகவும் அதிகம் தேவைப்
பட்ட நேரம் அது.பிஸினஸ் கை
மாறியதால், கைகளில் ஏகப்பட்ட
பணம்.ஹாஜியாரின் முகத்தில்
நீண்ட நாட்களுக்கு பிறகு
மிகுந்த மலர்ச்சி. அடுத்த நாள்
மிகவும் நிம்மதியாக உறங்கிய
தாக அவர் சொன்னார்.
நாங்கள் நினைத்தது வேறு
அவர் சொன்னது வேறு!
ஊரில் மிகவும் சேதமடைந்த
ஒரு மசூதியை சீர் செய்ய
அந்த பணத்தை எவரும் அறியாமல்
அவர் தானம் கொடுத்து விட்டார்.
சில தர்மங்கள் தலை
காக்கின்றன என்பது நான்
அறிந்த வரை உண்மை தான்.
உழைத்துச் சிவந்த கரங்களே
கொடுத்தும் சிவக்கின்றன.
In fond memory of my Father

Vavar F Habibullah

No comments: