Tuesday, July 25, 2017

வெயில் காலத்திற்கு இதமானது

வெயில் காலத்திற்கு இதமானது
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெள்ளரி சிறிதாக நறுக்கி , எலுமிச்சையை மெலிதாக சீவி, தேவைக்கேற்ப புதினா இலை சிறிது லவங்கப்பட்டை மற்றும் கருப்பு மிளகு இவை அனைத்தையும் குவளை / பாட்டில் தண்ணீரில் இட்டு குளிர்பெட்டியில் ஒரு மணிநேரத்திற்கு மேல் வைக்கவும். பின்னர் குடித்து பாருங்கள் ருசியான பானம் இயற்கையானது , விலை குறைவானது , உடல் எடையை குறைத்திடும் வல்லமை படைத்தது. சிறிது நாட்கள் தொடர்ந்து முயற்சித்து. மாற்றத்தை சொல்லுங்கள்.

மிளகுக்கு பதில் சிகப்பு மிளகாய் (cayenne pepper) சிறிது சேர்த்து கொள்ளலாம். லவங்கப்பட்டை பிடித்தம் இல்லையெனில் தேவையில்லை. மிளகும் அப்படியே. முதலில் கூறிய மூன்று ( வெள்ளரி , எலுமிச்சை , புதினா போதுமானது ). மிளகும் , லவங்கப்பட்டையும் எடையை வேகமாக குறைத்திட வல்லது. இவை தவிர்த்து மற்ற பயன்களும் உண்டு . குவளை கால் பகுதி குறைந்தவுடன் மீண்டும் தண்ணீரை நிரப்பிடலாம் . இவ்வாறாக மூன்று முறை அல்லது அதற்கு மேலும் பயன்படுத்தலாம் சுவைக்கேற்ப .

Sheik Mohamed Sulaiman

No comments: