Saturday, July 22, 2017

எதையும் வரையறைக்குள் வைத்திருப்பது அவசியம்

நாடகம் பார்க்க ஆரம்பித்தோம் தொடர்கதையானது வருடங்கள் கடந்தது ஓர் எபிசோட் பார்க்க மறந்தால் அழுத்தம் அதிகமானது வீட்டுக்கு திரும்பியவுடன் என்ன நடந்தது என்றோ அல்லது நட்புகளை தொடர்புகொண்டு கேட்கும் அளவுக்கு போனது. உளவியல்ரீதியாக பலரின் வாழ்க்கையை பாதித்தது. சிலர் தங்கள் வாழ்க்கையை அதனுடன் ஒப்பீடுசெய்தும் பலவற்றை இழந்தனர் .
மாதநாவல்கள், வாராந்தரி தொலைந்து போனது. பலரின் உணவு நேரங்கள் காலம் கடந்தன வியாதிகளை வரிசைகட்டி வரவேற்றோம்.
எதையும் வரையறைக்குள் வைத்திருப்பது அவசியமா இல்லையா என்று முடிவெடுங்கள். கொண்டாட்டம் மட்டுமே வாழ்க்கை அல்ல. 
சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைந்திட முடியும். அனைத்திற்கும் இந்த சொலவடை பொருந்தும்.


Sheik Mohamed Sulaiman

No comments: