Sunday, July 30, 2017

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் தமிழ்நெஞ்சம்.

அறியப்பட வேண்டிய நண்பர் தமிழ்நெஞ்சம் .

தமிழ்நெஞ்சம்.அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் தமிழ்நெஞ்சம். அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)


உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி  கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்

தமிழ்நெஞ்சம். அவர்கள் ஒரு சிறந்த ,அருமையான எழுத்தாளர்,நல்ல மனம் கொண்டு சேவை நோக்கம் கொண்டதுடன் மார்க்க பிடிப்பு கொண்டு மார்க்கத்தை முறையாக பேணி வருபவர் .
அவரது கவிதைகள் ,கட்டுரைகள் அனைத்தும் பாராட்டுகள் பெற்றவை

தமிழ்நாடு மயிலாடுதுறை அருகில் உள்ள வடகரையிலிருந்து பாரிஸ் நாட்டிற்கு சென்றாலும் தன தாய்மொழியில் பற்று கொண்டு தாய்மொழியின் காதலினால் தமிழ்நெஞ்சம் மின்னிதழ்  நடத்துவதுடன் தானும் பல கட்டுரை மற்றும் கவிதைகளை எழுதி சேவை செய்து வருகின்றார்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் தொடக்கம் இதுதான்
நல்வரவு

வழிவழி வந்து நம்மை
வளமாக்கும் கவிதை வாழ
விழிவிழி கவிதை என்னும்
விளக்கேற்று நெஞ்ச வீட்டில்!
View Download
ĊView Download
அவரை அறிய இங்கு செல்லுங்கள் http://tamilnenjam.com/
மற்றும் இங்கும் tamilnenjam(Instagram)
முகநூல் முகவரி https://www.facebook.com/nenjam.tamil
Tamil Nenjam
ஈத் கவியரங்கம்
கவிஞர் ஈழபாரதியுடன் தமிழ்நெஞ்சம்.
இடம் வவோரியல் செர்ஜி ஃப்ரான்ஸ்




பக்கங்கள்

http://tamilnenjam.com/?p=3245

புதிய வரவு …

சுடர்க தமிழ்நெஞ்சம்


மயிலாடு துறை அருகினிலே
மகிழும் ‘வடகரை’ நல்லூரில்,
ஊரைக் காக்கும் நல்லோர்தம்
உண்மை நெறியைக் காத்ததுவாம்!
ஏரைப் போன்றே உழுதுலகில்

இன்பப் பயிரை விளைத்ததுவாம்!
தேரை நிகர்த்த பொலிவோடு
திகழும் இனிய தமிழ்நெஞ்சம்!

பேரீச் சம்போல் சுவைகூட்டி,
பெரியோர் சொன்ன நெறிகாட்டி,
மாரி பொழியும் குளிராக
மனமே சிலிர்க்கக் கவிதீட்டி,
பாரி வள்ளல் கொடைபோல
வாரித் தமிழைப் படைத்திடுமே!
பாரீச் நகரில் பைந்தமிழைப்
பரப்பி மகிழும் தமிழ்நெஞ்சம்!

புல்லும் பூண்டும் முளைக்காதே!
புவியில் இனிமை தழைக்காதே!
வெல்லும் வெறியால் மண்ணுலகை
விரைந்து பொசுக்கும் பெரும்போரால்!
செல்லும் வழியில் முள்விதையைச்
செரிதல் ஏனோ கொடியோரே!
சொல்லும் வல்ல கருத்தாலே
சுடர்க உயர்ந்து தமிழ்நெஞ்சம்!

கம்பன் கழகம், பிரான்சு
தமிழ்நெஞ்சம்

தமிழர் நெஞ்சம் தமிழ்நெஞ்சம் - அது
தமிழர் வாழ்வில் கமழ்நெஞ்சம்;
இமயம் போலும் புகழ்நெஞ்சம் - அது
என்றும் தமிழர் மகிழ்நெஞ்சம்.

வீர வித்தை நடும்நெஞ்சம் - அது
வெற்றி விளைவைத் தொடும்நெஞ்சம்
ஈர அன்பைப் பொழிநெஞ்சம் - பண்பு
ஏந்தி நடக்கும் வழிநெஞ்சம்.

மானம் காக்கும் அறநெஞ்சம் - உலக
மனத்தைக் கவரும் அறநெஞ்சம்
ஈனப் பகையைத் தொடாநெஞ்சம் - நலம்
இயற்றும் கடமை கெடாநெஞ்சம்.

நீதி வகுத்த நன்நெஞ்சம் - சங்க
நெறிநூல் தொகுத்த பொன்நெஞ்சம்
ஆதி நெஞ்சம் இந்நெஞ்சம் - வேறு
அதற்கீ டாவ தெந்நெஞ்சம்?

- பாட்டறிஞர் பண்ணுருட்டி பரமசிவம்
தமிழ்நெஞ்சம் அவர்களை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".
அன்புடன் ,
அ.முகம்மது அலி ஜின்னா

No comments: