Saturday, July 29, 2017

சி.ஐ.ஏ விரித்த வலை! ஃபைஸல் கொடுத்த விலை!

Noor Mohamed
சில நாட்களாக முகநூலில் சவுதியின் முன்னாள் மன்னர் காலம் சென்ற ஃபைஸல் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களுடைய படமும்,சிலவார்த்தைகளும் அடங்கிய படம் ஒன்று பல நண்பர்களால் பதிவும் பகர்வும் செய்யப்பட்டிருந்தது.முன்னாள் அமெரிக்க அதிபர்
ரிச்சர்ட் நிக்சனின் வெளியுறவு அமைச்சர் ஹென்ரி கிஸிங்கர் மன்னர் ஃபைஸலுக்கு விட்ட மிரட்டலும் அதை மன்னர் துணிவுடன் எதிர்த்து நின்ற செய்தியும் அதில் சிலாகிக்கப் பட்டிருந்தது.
மன்னர் தன்னளவில் இறுதிவரை துணிவுடன்தான்
இருந்தார்.ஆனால் அதற்கு அவர் கொடுத்த விலை என்ன தெரியுமா?அவரது உயிர்!
ஒரு சின்ன flash back !



67ஆம் ஆண்டு நடந்த ஆறுநாள் போர்!இஸ்ரேலின்
எதிர்பாராத அதிரடித் தாக்குதலில் நிலைகுலைந்து போனது அரபுலகம்.அதுவரை இஸ்லாமிய நாடுகளின் தனிப்பெரும் ஹீரோவாக விளங்கிய UAR
(எகிப்து)அதிபர் கமால் அப்துன் நாஸர் மனம் நொறுங்கிப் போனார்!எகிப்து சிரியா ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனத்தின் மிக முக்கியமான பகுதிகளை யூதன் ஆக்கிரமித்துக் கொண்டான்.ஐநாவும் அமெரிக்காவும் அதன் அடிவருடிகளும் வழக்கம்போல வஞ்சகம் செய்தன.அதன் எதிரொலியாக பெட்ரோலிய இஸ்லாமிய நாடுகள் ஒன்று திரண்டனர்.அதிரடியாக பெட்ரோல் கட்டுப்பாடு ,விலைஉயர்வு இஸ்ரேலிய ஆதரவாளர்களுக்கு பெட்ரோலியம் ஏற்றுமதி மறுப்பு என்று தடாலடி நடவடிக்கையில் இறங்கின.
மிக அருமையான உணர்வு பூர்வமான ஒற்றுமையைக் காட்டினர்.உலகம்,குறிப்பாக மேற்குலகம் திணறி நின்றது.பெட்ரோல் சிக்கனம் வேண்டுமென்று அப்போதைய இங்கிலாந்து பிரதமர் தனது அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்ல முடிவெடுத்தார் என்றால் நெருக்கடியின் வீரியத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
இழந்த வல்லமையை மீட்டெடுக்க முஸ்லிம் உலகுக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு!
என்ன செய்ய! யூத நஸ்ராணிகள் விழித்துக் கொண்டனர்.
மனமுடைந்த நிலையிலேயே நாசரும் மறைந்தார்.அரபுலகம் தீவிர நடவடிக்கையில் இறங்கிய கால கட்டத்தில் நிக்சனின் தலைமையில் கிஸிங்கர் வெளியுறவு செயலாளராக
வந்து சேர்ந்தார்.அவர் ஒரு யூதர்!தனது இனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற முடிவெடுத்தார்.
புதிய மத்தியக் கிழக்கு சமாதான திட்டங்கள் முன் வைக்கப்பட்டன.எல்லாமே இஸ்ரேலுக்கு சாதகமாகவே இருக்கும்.நாடுநாடாகச் சென்று தனது திட்டத்துக்கு வழிபட அரபுகளை சந்தித்தார்.இதைshuttle diplomacy என்று அழைத்தனர்.எல்லா யுத்திகளையும் கையாண்டு, மிரட்டவேண்டுமென்றால் மிரட்டி ஆசைகாட்டவேண்டி வந்தால் அதையும் செய்து படிப்படியாக முன்னேறினார்.
சவுதி மன்னர் மட்டும் தனது நிலையைவிட்டு இறங்கவில்லை.முதலில் ஆக்ரமிப்புகளை விட்டு இஸ்ரேல் வெளியேறவேண்டும்.ஐநாவும் அமெரிக்காவும் இஸ்ரேலை கட்டுக்குள் வைக்க வேண்டும்.அதன் பிறகே oil embargo பற்றிய பேச்சு என்று கிஸிங்கரிடம் உறுதியாக நின்றார்.
அப்போதுதான் படத்தில் கூறப்படும் டயலாக் பேசப் பட்டது.என்ன அது?
கிஸிங்கர் : அரசே,நீங்கள் எங்கள் வழிக்கு வரமறுத்தால் அமெரிக்க விமானங்கள் உங்கள் எண்ணெய் கிணறுகளை குண்டு வீசித் தகர்க்கும்.தயாரா?
(மிரட்டல் )
மன்னர் ஃபஸல்:
தாராளமாகச் செய்யுங்கள்
எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.எனது முன்னோர் பாலைவனத்தில்
அலைந்து உண்ட ஒட்டகப் பாலும் பேரீச்சம்பழமும் எங்களுக்கு போதும்.ஆனால் உங்களால் எண்ணெயின்றி வாழ முடியாது நினைவிருக்கட்டும்!
ஒரே அடி!
யோசித்தார் கிஸிங்கர்.தனது திட்டத்துக்கு இருக்கும் பலமான தடை ஃபைஸல்!
தடை அகற்றப்பட வேண்டும்.எண்ணெய் வளமும் தமது கட்டுப் பாட்டுக்குள் இருக்க வேண்டும்.இஸ்ரேலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

சி ஐ ஏ யும் மொஸாத்தும் களத்தில் இறங்கின.மெதுவாகவும் தந்திரமாகவும் திட்டங்கள் தீட்டபட்டன.
சில மாதங்களில் பரபரப்பான அந்தச் செய்தி
உலகை உலுக்கியது!
ஆம்.மன்னர் ஃபஸல் தனது குடும்ப உறுப்பினராலேயே
point blank range ல் சுட்டு கொலை செய்யப் பட்டார்!
அரபுகள் கைகட்டி கண்ணீர் விட்டனர்.
சிஐஏ,மொஸாத் டைரக்டர்கள் கைகுலுக்கி
கண்சிமிட்டினர்.
கொன்றவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று ஒரு கதை.
குடும்பத்தில் முன்பு நடந்த நிகழவுக்குப் பழி வாங்கியதாக ஒரு கதை.
விரும்பிய பெண்ணை மணமுடிக்க தடை விதித்ததால் கொன்றதாக ஒரு கதை.
இப்படி கதைகதையாக கசியவிடப்பட்டது.
அதுதானையா சிஐஏ.
அவன்தான் செய்தானென்று தெரியும்.ஆனால் எந்த தடையமும் இருக்காது.கதைகள் மட்டும் விதவிதமாகப் பரவும்!
முள் குத்தினால் முள் கொண்டுதான் எடுக்க முடியும்.அதற்கு மூளையும் வேண்டும்!!

Noor Mohamed

No comments: