Monday, March 11, 2013

உங்களைத்தான் கேட்கிறார்கள்! விளக்கம் கொடுங்களேன்! மக்கள் அறியட்டுமே!

1. ஊருக்காக  புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் உங்களுக்கு...

2.  விழாக்களுக்கு கட் அவுட், பேனர்கள் வைத்து கொண்டாடும் உங்களுக்கு...

3. ஆடம்பர செலவு செய்து மேடை போட்டு கூட்டம் கூட்டும் உங்களுக்கு...

4.  தெருத் தெருவா போஸ்டர் ஓட்டும் உங்களுக்கு...

5.  கூட்டம் போட்டு திட்டம் போடும்  உங்களுக்கு...

6. இறைவனது இல்லத்தில்  சிலர் தவறான வார்த்தைகள் பேச வழி விட்டு அதனை தடுக்க முடியாத  உங்களுக்கு...

 (குத்பா நடத்தும் பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமை உலமாவின் பிரசங்கம் நடைபெற்ற பின்பு பள்ளிவாசலுக்கு சிலர் வருகிறார்கள்.
சிலர் உலமாவின் பிரசங்கம் பிடிக்காமல் முஅல்லாவின் பள்ளியை விடுத்து வேறு பள்ளிக்கு செல்கின்றார்கள்.

அரசியல் மேடையாக மற்றும் தனி மனிதரைப் பற்றிய விமர்சனமாகவும் ,சொல்லக் கூடாத வார்த்தைகளை உயர்வான இறைவனது இல்லத்தில் பிரசங்கம் செய்வது தற்போது சில ஊர்களில் மாறி வருவது வருந்தத் தக்கதாக உள்ளது .

தொழுகை நடத்துவதற்கு முன் செய்யப்படும் பிரசங்கம் மார்க்க அறிவைத் தருவதோடு தொழுகையில் ஒன்ற வைக்கக் கூடியதாக அமைய வேண்டும் . குர்ஆன், நபிமொழி மற்றும் அதற்கான விளக்கங்கள் தந்தாலே போதுமானது . இவைகளில் காணக் கிடைப்பதே ஏராளம்.)


7.  வசூல் செய்து விழா நடத்தும்  உங்களுக்கு...

8. தேவையற்றவைகளுக்கு  செலவு செய்யும் உங்களுக்கு...

9. ஒதுங்கி நிற்கும் மக்களை உசுப்பி விடும்  உங்களுக்கு...

10.  பதவிகளுக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவோர் விரோதம் பாராட்டி உறவுகளை முறிக்கும் உங்களுக்கு...


உள்ளூர் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளாகிய...

1. சமூக நலன் முன்னிறுத்தி ஊரை ஒற்றுமைப் படுத்த முயற்சி

2. பல பள்ளிவாசளிருந்து அனைத்து பள்ளிவாசலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆர்வம்

3. வேலைவாய்ப்புகள் பற்றி ஒரு விழுப்புணர்ச்சி உண்டாக்குதல்

4. விளையாடுமிடம் இருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து உற்சாகப் படுத்துவது

5. அறிவிக்கப்படாத மின்சாரத் துண்டிப்பு

6. சமூக குற்றங்கள் ஒழிப்பு

7. கல்வி மேம்பாடு

8.  தேவையான பள்ளிக் கூடங்கள் .கல்லூரிகள் நிறுவுவது

9. சுகாதார விழிப்புணர்வு

10. தேவையான பள்ளிவாசல்கள் உண்டு தொழ மக்கள் வராமலிருப்பது பற்றி சிந்திப்பது

11. நிறைந்த மாணவர்களிருந்தும் தேவையான பள்ளிக் கூடங்கள் .கல்லூரிகள் உருவாக்குவது

12. முதியோர் நலன்

13. இலவச மருத்துவ முகாம்

14.  கற்பவர்களுக்கு தேவையான பணத்தை உதவியாகவோ அல்லது வட்டி இல்லாத கடனாகவோ கொடுக்க முயற்சி செய்வது

15. நலத்திட்ட உதவி

16. உடலுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஊருக்கு ஒற்றுமை முக்கியம்
என்பதை முன்னிறுத்தி முயற்சி செய்வது

17. அறிவு வளர்ந்த காலத்தில் கருத்து வேறுபாடுகள் கொண்டால் கண்டிக்காமல் அன்புக்கு முக்கியம் கொடுத்து நேசன் பாராட்டுவது

என இது போன்ற உள்ளூர் பிரச்சனைகளைக் கையில் எடுத்து செயல்பட்டு  உள்ளூர் பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடுச் செய்ய முயற்சிக்க வேண்டாமா ?

இறைவனது அருள் அனைவருக்கும் கிடைக்க முயல்வோம் .

 உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)
நூல்: புகாரி 5984



குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. வாழு வாழ விடு . நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க

4 comments:

ஃபைஜூர் ஹாதி said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... ஒற்றுமையையும், அமைதியையும் விரும்பும் ஊர்மக்கள் ஒவ்வொருவரின் மனதில் புதைந்துகிடக்கும் நியாயமான கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் மிகவும் அழகாக கூறினீர்கள். அருவருக்கத்தக்க வகையில் பள்ளிவாசளிலும், மதரஸாவிலும் பேசுவதால் நமதூருக்கு என்ன நன்மை என்பதனை ஓவ்வொருவரும் நியாயமாக சிந்திக்க வேண்டும்.

”தளிர் சுரேஷ்” said...

நியாயமான எதிர்பார்ப்புக்கள்! கேள்விகள்! நன்றி!

தண்டேல் அமீன். said...

அஸ்ஸலாமு அலைக்கும் வழி மீது விழி வைத்து காத்திருந்த நேரத்தில் ஊர் மக்களுக்கு கிடைத்த மகத்தான ஆதரவு என்றே இதை சொல்லலாம். அல்ஹம்துலில்லாஹ்!!.

ஒரு தவறை கண்டால் கையால் தடுக்கவேண்டும் அது முடியவில்லை என்றால் வாயால் தடுக்க வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால் மனதால் வெறுத்து ஒதுங்கிவிடவேண்டும் என்பது நபிமொழி.

அதற்கு ஒப்ப ஊர் மக்களின் உணர்வை மிக அழகாக பிரதிபளிக்கிறது கட்டுரை.

வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒற்றுமையை காண்போம். பிரிவினையை தூண்டுவோரை அப்புறப்படுத்துவோம்.

அன்புடன்

தண்டேல் அமீன்.

Anonymous said...

அஸ்ஸலாமு அழைக்கும்

மனதில் உள்ளதை ( உண்மையை ) மிகவும் தெளிவாக எழுதி உள்ளீர்கள்.
வெள்ளி கிழமை ஜும் ஆ அன்று பயாணுக்காக காத்திருப்போம். நல்லதொரு சொற்பொழிவை கேட்பதற்காக. இறைவனது இல்லம் ஓர் உயர்வானது. இஸ்லாம் உலகம் போற்றும் ஓர் அழகான சமுதாயம். இன்றைய சூழலில் சொந்த வெறுப்புகளை வைத்து என்றென்றும் ஒன்று கூடி உறவாடி மகிழ்ச்சியுடன் இருந்த நம் சொந்தங்களை நட்புகளை பிரிப்பதற்கு இடம் கொடுக்காதீர்கள். ஒவ்வொருவரும் ஊரின் நலன் கருதி நல்லதொரு சூழலை உருவாக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக " அல்லாஹ் " ஒருவனுக்கே அஞ்சி நடக்க வேண்டும்.
A. Mohamed Feroz