Friday, January 4, 2013

எதுவும் தலைநகரில் நடந்தால் தான் தலையில் ஏறுமோ!

எதுவும் தலைநகரில் நடந்தால் தான் தலையில் ஏறுமோ!
இப்பொழுதாவது தலையில் ஏறியதே!

நமது கடமை தவறை தடுப்பது
குஜராத் குல்பர்க்கா சொசைட்டி முஸ்லிம் பெண்கள் பனிரெண்டு பேர் நிர்வாணமாக்கப் பட்டு கேவலப் படுத்தப் பட்டனர்.
வயிற்றை கிழித்து குழந்தையை கொன்று தாயையும் கொன்ற கொடுமை.
இதற்கு அத்தனை முக்கியப் படுத்தி செயல்பட நிதானம்
அதனை மறந்த நிலை.

நன்மையான செயல் செய்ய தாமதமும் வேண்டாம்
தீமையான செயலை தடுக்க தாமதமும் வேண்டாம்

பெண்ணியம் பேசும் மாந்தர் பெண்களுக்கு உரிமை கேட்டனர்
பெண்ணியம் பேசும் சில மாந்தர் பெண்களுக்கு கவரும் ஆடை உடுத்துவதிலும் உரிமை கேட்டனர்
பெண்ணியம் பேசும் மாந்தர் பெண்கள் இப்பொழுது ஆடை உடுத்துவதில் முறை வேண்டும்மென்று விரும்புகின்றனர்

ஒரு குழந்தை பிறந்த பின் அதனை பாதுகாக்க தாய் படும் சிரமங்களை நினைத்துப் பாருங்கள்
நம்மைப் பெற்றவரும் ஒரு தாய்தான் அவளும் பெண்தான் தாய் என்ற சொல்லுக்கு மதம் என்ற பொருளில்லை மதமில்லை. அவளையும் மத வேறுபாடு கற்பிக்கும் கொடுமை .மனித நேயத்தை தாயோடு புதைக்க முயலும் பேதமை அழியட்டும் .


வயிற்றை கிழித்து குழந்தையை கொன்று தாயையும் கொல்லும் கொடுமை
வயது வந்த பெண்ணை வம்புக்கு இழுக்கும் மனிதர்
வயது வந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்வோர்
வயது வந்தும் பார்த்து ,அறிந்து
நிலை தடுமாறிய நிலையில்
'ச்சே பாவம் என உச் கொட்டி' என்பதோடு
அதனை மறக்கும் நிலை நம் நிலை
வயதும் வருவதும், வயிறு இருப்பதும் குற்றமா!
குற்றத் தண்டனையை முறைபடுத்தாதோர் குற்றமா?
தள்ளிப் போடும் தீர்ப்பு தீர்ப்பாகிவிடுமா?

அழகினை வெளிப்படுத்திக் கொள்வதிலும் அடைய முயல்வதிலும் ஒரு எல்லை உண்டு .அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை ஆனால் கவர்சியாக காணப்பட வேண்டும் என்பது முறையல்ல.
சில நேரங்களில், சிலவற்றில் அழகினை பங்கு போட்டுக்கொள்ள முடியாது .அதற்கும் உரிமை உடையோர் உண்டு .மனைவியின் அழகு கணவனுக்கு உரிமை .மனைவி என்பவள் மற்றவருக்காக தன்னை அழகுபடுத்திக் கொண்டால் மட்டும் எப்படி சிறப்பாக முடியும்.

கணவன் கண் நோய் வந்து பார்வை அற்ற நிலையில் மருத்துவரை காண புறப்பட மனைவியினை அழைக்க அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிவதில் நேரம் செலவிட "`எனக்குத்தான் பார்வை இல்லையே பின் ஏன் இவ்வளவு நேரம்" என்று கணவன் மன வேதனையுடன் சொல்லும்பொழுது அழகு படுத்திக்கொள்வதிலும் எல்லை உண்டு என்பதை அறிய முடிகின்றது

கணவனுக்கு காட்டுவது அழுக்குத் துணி அணிந்த ஆடை ஆனால் வெளியே செல்லும்போது நறுமணம் தடவிக் கொண்ட அழகிய ஆடை . கவர்ச்சியாக கணவன் பார்வையில் படலாம் ,அது அடுத்தவர் பார்வைக்கு வரும்போது குற்றத்தை செய்யச் தூண்டிய குற்றமாகத்தான் கருதப்படும் .

ஒருமுறை நாயகம் தனது மனைவி உம்முசல்மா ரலி மற்றும் மைமுனா ரலி இவர்களுடன் வீட்டில் அளவலாகிக் கொண்டிருந்தார்கள் .அப்பொழுது இப்னு உம்மு  மக்தூம் (ரழி) அவர்கள் சலாம் சொல்லி உள்ளே வர அனுமதி கேட்டார் . நாயகம் உடனே தன மனைவிகளை வீட்டில் திரைக்குப் பின் போகும் படி பணித்தார்கள் . அதற்கு அவர்கள் அந்த இப்னு இப்னு மக்தூம் சகாபிக்குத் தான் பார்வை தெரியாதே நாங்கள் போக வேண்டுமா! எ ன்று வினவினார்கள் . உடனே நாயகம் அவருக்கு கண் தெரியாது ஆனால் உங்களுக்குத் தெரியுமல்லவா! என நவின்றார்கள்,
இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பண்பாடுதான் சொல்கின்றது .அது பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்பதாகும்

பொழுதும் அவனிடம் ஒப்படைத்து
பொழுதுண்டு அவனைத் தொழுது நின்று
பொழுதும் இரங்கல் செய்தல்
போதியவரை விரைவில் கிட்டும்

மறையை ஓதி தொழுது நிற்க
இறையின் மாண்பு மனதில் ஓட்ட
நம்பினோர் மனதில் ஞானம் பிறக்க
நாடிய பொருள் கைக் கூடும்

எழுதியவர்: முகம்மது அலி (நீடூர்அலி)

No comments: