Friday, January 11, 2013

உன்னையே நேசிக்கிறேன்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اللَّهُ الصَّمَدُ
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை - குர்ஆன்

=======================================================================

உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே .(உன்னிடமே) யாசிக்கிறேன்
உன்னையே நாடுகிறேன்
உன்னையே போற்றுகிறேன்

உன்னையல்லால் யார் உதவுவார்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்
உன்னை நாடியோர் கை விடப்படார்
உன்னை நோக்கி ஓர் அடி வைத்தால்
என்னை நோக்கி ஓடி வருவாய்

சிந்தனைகள் ,கருத்துகள் .தூண்டுதல்கள்  அனைத்தும்  இறைவனது அருட்கொடை அது  உங்களின் ஒருவனாக நானும்  இருப்பதின்  வெளிப்பாடு . தனியே பிறப்பது இருவரின் கூட்டு முயற்சி. வந்தவுடன் அரவணைத்து  வாழ்த்துவோர் அநேகம் . அவர்களின்  நன்மையை  நாடும் ஒருவனாக  இருப்பதிலேயே  என்  உயர்வின்  அடித்தளமாக அமையும் . தூற்றுவோர்  இருக்க துவள வேண்டியதின்  நிலைப்பாடு  வேண்டாம் . தூக்கிச்  செல்வோர்  வசை பாடி இசை பாட  இறைவனும்  என்னை  கனலில் விட்டு  விடுவதை நான் அஞ்சுகிறேன். தென்றலாய்,  தேன் மதுரச் சுவையாய்  இருக்கட்டும்  உங்கள்  வாய்  மொழி.

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள் [குர்ஆன் 10:44]

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
குர்ஆன் 2:21


Habibi means 'My love' or 'My beloved'. .

No comments: