Monday, January 7, 2013

பெண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு வருவது நம்மிடமே!

 பெண் குழ்ந்தை வேண்டாம் என்ற காலம் மறைந்து வரும் காலம். அதற்கு முக்கிய காரணமாய் இருப்பது ஆண் மகனுக்கு திருமணம் செய்விக்க பெண் கிடைப்பது முன் மாதிரி இப்பொழுது அவ்வளவு எளிதாக இல்லை.முன்பெல்லாம் வரதட்சணை கொடுமை வாட்டி எடுத்தது. தம்பதிகளுக்குள் உறவு முறை சரியாக இல்லையென்றாலும் அடங்கிப் போகும் கட்டாயம். கணவன் இறந்தாலோ அல்லது மணமுறிவு நிகழ்ந்தாலோ பெண்ணின் நிலை சீரழிந்த நிலை. மறுமலர்ச்சி காலத்தில் அடியெடுத்து வைத்து விட்டோம் . அவசியமானால் மறுமணமும் வந்துவிட்டது மற்றும் வரதட்சணை கொடுமையும் ஒழிந்து வருகின்றது. எங்கு போய் பெண் கேட்டாலும் ஆண் மகன் என்ன படித்திருக்கிறார்? என்ன வருமானம் அவருக்கு வருகிறது? குடும்ப கௌரவமானதா இப்படி அலசுகிறார்கள்!
பெண் படித்துக் கொண்டிருக்கிறாள் அதனால் அவள் படிப்பு முடிந்துதான் திருமணம் செய்ய விருப்பம், இன்னும் சிலர் படித்தபின் அவளுக்கென்று உள்ள வேலையை தொடர்வாள் அதற்கு ஒத்து வருவதாக இருந்தால் பார்ப்போம். சில இடங்களில் பெண்ணே தனக்கு தேவையான கணவன் தகுதியுடையவனா? என்பதில் கவனம் செலுத்தும் ஆற்றல்
இத்தனைக்கும் அடிப்படைக் காரணம் பெண்கல்வியின் அருமை அறிய வந்து அதன்படி செயல்படும் நிலை உருவாகியதுதான்.
பொதுவாக பெற்றோர்களுக்கு பெண் குழந்தைகள் மீது பாசம் அதிகம். அந்த பாச உணர்வு அவர்களை மிகவும் பாதுகாப்பாக வளர்க்க விரும்புகின்றது. ஆனால் பாச உணர்வு அவர்களை சமூகத்துடன் திறந்த மனதுடன் பழக தடை போடுகின்றது. சமூகத்தின் நிலையை அவர்களோடு மனம் திறந்து பெற்றோகள் பேசுவதில்லை இதன் காராமாகவே

பெண்ணின் மனது இறக்கம் கொண்டது அன்பிற்கு அடிமையாகக் கூடியது. பணிந்து பேசும் தன்மையுடையது.வெட்கத்தோடு நளினமாகப் பேசக் கூடியது. இதனை மற்றோர் மாறுவிதமாக கற்பனை செய்யத் தூண்ட வழி வகுத்துவிடுகின்றது .செல் போன் காலத்தில் வாழும் பெண்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமென்ற நிலையை பெற்றோர்கள் அவர்களுக்கு அறிய வைக்க வேண்டும். குழந்தையாய் இருக்கும்போது விளையாட்டுக்கு செல் போன் வாங்கிக் கொடுத்து விளையாட்டாக நாம் அறிந்தவர்களிடமெல்லாம் அவர்களை பேச வைத்து ஆசைப் பார்த்தது அவர்கள் பெரியவர்கள் ஆனா பின்பும் தொடர்கின்றது . வீட்டுக்கு வரும் அன்னிய ஆண்களோடும் அவர்களை கணிய பேச வைக்கத் தூண்டியது தொடர்கிறது. நாணமற்ற தன்மையை வளர்க்கும் ஆடைகளை வாங்கிக் கொடுத்து ஆசைப் பார்த்தது தொடர்கிறது


முன்பின் தெரியாத நபர்கள் தொலைபேசியில் அழைக்க , எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்துதளை தவற விட்டது பின் பல விளைவுகளை கொண்டு சேர்க்கும் நிலை. முகம் தெரியாத நபர் வீட்டுக்குள் நுழைய அனுபதிப்பதனை தடுக்காமல் விட்டது. அறியாத நபர்களையும், வந்தவர்களையெல்லாம் வீட்டிற்குள் உட் பாகம் வரை நுழைய விட்டது தொல்லையை கொண்டு சேர்க்கும் ஏன்பதனை அறிவிக்காமல் விட்டது தவறாகப் போனது, சக நண்பர்களோடு பழக விடாமல் அவர்களை துணிவாக செயல்படாமல் விட்டதும் பெண் மக்களை கோழையாக்கி விடும்.
சின்ன பெண் தானே அவளுக்கு என்ன தெரியும் என்றோ, இப்ப எதுக்காக இதப்பத்தியெல் லாம் சொல்லித் தரவேண்டும் என்றோ நினைக்காதீர்கள். “டிவி’, சினிமா என உங்கள் பெண் அரைகுறையாக பல விஷயங்களைத் தெரிந்திருக்கிறாள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சக நண்பர்களுடன் பழகவிடுங்கள். குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் தான் உங்கள் குழந்தை சுற்றிவர வேண்டும் என்று எண்ணாதீர்கள். எல்லையே இல்லாமல் இஷ்டத்துக்கு பிள்ளைகளை விடுவது எத்தனை தவறோ அதே போல தான் குறுகிய வட்டத்தை வரைந்து அதற்குள் உங்கள் குழந்தையை வலம்வரச் சொல்வதும். அதனால, உங்கள் குழந்தைகளை சக நண்பர்களிடம் பேச அனுமதியுங்கள். அப்போது தான் அவங்களோட கூச்ச சுபாவம் நீங்கும்.
தற்போதைய சூழ்நிலையில், கல்வி சம்மந்தமான புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது நாட்டு நிகழ்வுகளையும் அவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் அது சிறு வயதிலிருந்தே தொடர வேண்டும். சமூகத்தில் வெற்றி யடைய தொட்டிலிருந்து வழிக்காட்டும் தொடர் முயற்சி தேவை. கை சுட்ட பின் மருந்து போடுவதை விட சுடாமல் பார்த்துக் கொள்ளும் முனெச்சரிக்கை அவசியம் .

வாசனைப்போருட்களை வாங்கிக் கொடுத்து கவரும் ஆடைகளை அதில் தடவி ஊரில் உலா வருவது காண்போர் கண்களை கவரச் செய்து மணம் தரும் திரவங்கள் ஆடைகளில் பூசியதால் போவோர் மனத்தை சுண்டி இழுக்கும் தவறான பாதை அழிவைத் தரும். அழகிய கவர்ச்சி தரும் ஆடையும்,மனத்தைக் கவரும் மனமும் கணவனுக்கு உரியவை. அது அறைக்குள் இருக்க வேண்டியது கணவனுக்கு காட்டுவது அழுக்குத் துணி அணிந்த ஆடை ஆனால் வெளியே செல்லும்போது நறுமணம் தடவிக் கொண்ட அழகிய ஆடை . கவர்ச்சியாக கணவன் பார்வையில் படலாம் ,அது அடுத்தவர் பார்வைக்கு வரும்போது குற்றத்தை செய்யச் தூண்டிய குற்றமாகத்தான் கருதப்படும் .

அழகினை வெளிப்படுத்திக் கொள்வதிலும் அடைய முயல்வதிலும் ஒரு எல்லை உண்டு .அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறு இல்லை ஆனால் கவர்சியாக காணப்பட வேண்டும் என்பது முறையல்ல.
சில நேரங்களில், சிலவற்றில் அழகினை பங்கு போட்டுக்கொள்ள முடியாது .அதற்கும் உரிமை உடையோர் உண்டு .மனைவியின் அழகு கணவனுக்கு உரிமை .மனைவி என்பவள் மற்றவருக்காக தன்னை அழகுபடுத்திக் கொண்டால் மட்டும் எப்படி சிறப்பாக முடியும்.

கணவன் கண் நோய் வந்து பார்வை அற்ற நிலையில் மருத்துவரை காண புறப்பட மனைவியினை அழைக்க அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிவதில் நேரம் செலவிட “`எனக்குத்தான் பார்வை இல்லையே பின் ஏன் இவ்வளவு நேரம்” என்று கணவன் மன வேதனையுடன் சொல்லும்பொழுது அழகு படுத்திக்கொள்வதிலும் எல்லை உண்டு என்பதை அறிய முடிகின்றது

ஒருமுறை நாயகம் தனது மனைவி உம்முசல்மா ரலி மற்றும் மைமுனா ரலி இவர்களுடன் வீட்டில் அளவலாகிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இப்னு இப்னு மக்தூம் அவர்கள் சலாம் சொல்லி உள்ளே வர அனுமதி கேட்டார் . நாயகம் உடனே தன மனைவிகளை வீட்டில் திரைக்குப் பின் போகும் படி பணித்தார்கள் . அதற்கு அவர்கள் அந்த இப்னு இப்னு மக்தூம் சகாபிக்குத் தான் பார்வை தெரியாதே நாங்கள் போக வேண்டுமா! எ ன்று வினவினார்கள் . உடனே நாயகம் அவருக்கு கண் தெரியாது ஆனால் உங்களுக்குத் தெரியுமல்லவா! என நவின்றார்கள்,
இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே பண்பாடுதான் சொல்கின்றது அது பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்பதாகும்.

இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.-(குர் ஆன் 24:31. )

(புகாரி ஹதீஸ்1905.) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தியற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்.”
என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
http://seasonsnidur.wordpress.com/

No comments: