Thursday, January 24, 2013

மனம் மகிழ, வாசகர்களுக்குப் பயனுள்ள நூல்கள் சில...

மனம் மகிழுங்கள்
ஆசிரியர்: நூருத்தீன்

பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ்

பதிப்பு: 2012

பக்கங்கள்: 195

விலை: ரூ. 140.00
ISBN: 978-81-8379-584-5



இந்நூலைப் பற்றி

இன்பம். மகிழ்ச்சி! ஆண்டிமுதல் ஆள்பவன்வரை, மூட்டை தூக்கும் முனுசாமிமுதல் மூட்டை மூட்டையாய்ப் பணம் வைத்துக் கொண்டிருக்கும் அம்பானிவரை, எல்லோருக்கும் அது பொதுவான தேடல். அனைவரும் அதைத் தேடி அலைந்து, திரிந்து, ஆன்மீகம், பெண் மோகம், போதை என்று என்னென்னவோ முயற்சி செய்துவிட்டு கடைசியில் ஞானமாய் வார்த்தை வரும் - "எல்லாம் மனசுல இருக்குபா!"

மனசு! அதுதான் எல்லோருக்கும் இருக்கிறதே! ஆனால் மன நிறைவு? இன்பம்?

மன மகிழ்வு என்பது என்ன என்பதை எல்லோரும் உணர்ந்து வாழ ஆரம்பித்தால் பாலாறும் தேனாறும் ஓடி, நாடு வளம் பெறும்; உலகம் சுபிட்சம் அடையும்; அமெரிக்கா நல்ல பிள்ளையாகிவிடும்; உலகில் தீவிரவாதம் குறையும் என்றெல்லாம் அதீத நம்பிக்கைக்கு நாம் ஆளாகி விடக்கூடாது. குறைந்த பட்சம், அவரவரும் மெய் மகிழ்வுடன் வாழ்க்கையை அணுகலாம்; உய்யலாம்; சமர்த்தாய் வாழப் பழகலாம். அவ்வளவே!

மனசு, நெஞ்சு, மூளை, இதயம் இவை எல்லாவற்றையும் கூறுபோட்டு, அனாடமி, தத்துவ ஆராய்ச்சி என்றெல்லாம் பண்ணாமல், பொதுவாய் மனசு, மகிழ்ச்சி, அர்த்தமுள்ள வாழ்க்கை என்பதை அடிப்படையாய் அமைத்துக் கொண்டு,

மனம் மகிழும் முயற்சி, இந்நூல். அவ்வளவே! அளவளாவிக் கொள்வோம்.

- நூருத்தீன்
-------------------------------------------------------------
 அன்பிற்குரிய அண்ணன் ஜின்னா அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்நேரம்.காம் இணைய தளத்தில் நான் எழுதிய மனம் மகிழுங்கள் அல்லாஹ்வின் அருளால் நூலாக வெளிவந்துள்ளது. சென்னையிலுள்ள பழம்பெரும் புத்தக நிறுவனமான பழனியப்பா பிரதர்ஸ் இதனை வெளியிட்டுள்ளனர்.

வாசகர்களுக்குப் பயனுள்ள நூலாக இது அமையும் என்பது என் தாழ்மையான கருத்து. இன்ஷா அல்லாஹ் இதை வாங்கவும் பரிசளிக்கவும் பரிந்துரைக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.



அன்புடன்,
-நூருத்தீன்
 www.darulislamfamily.com
------------------------------------------------------------------------------------
  
- தோழர்கள்!

புனிதர்களின் அற்புத வரலாறு!

முதலாம் பாகம் ஆசிரியர்: நூருத்தீன்

பதிப்பகம்: சத்தியமார்க்கம் பப்ளிகேஷன்ஸ்

பதிப்பு: 2011 பக்கங்கள்: 372  விலை: Rs. 150.00

இந்நூலைப் பற்றி

 இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின், நாகரீக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த அதே அரேபியர்கள் சுடர் விடும் நாயகர்களாக உலா வந்தனர்.

முஹம்மது (ஸல்) அவர்களின் புகழ்பெற்ற தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற்றைக் கூறும் முதல் தொகுப்பு இது எனக் கூறலாம்.

இஸ்லாமிய தமிழ் இதழியலின் முன்னோடிகளில் ஒருவரான அறிஞர் பா. தாவூத்ஷா அவர்களின் பேரனும் பா.தா. அவர்களின் இதழியல் சேவையில் தம்மை முற்றிலும் ஈடுபடுத்திக்கொண்ட அவர்தம் மகனார் என்.பி. அப்துல் ஜப்பார் அவர்களின் மகனுமான சகோ. நூருத்தீன் அவர்கள் இந்நூலை யாத்திருக்கிறார்.

பன்னூலாசிரியர் சகோ. அதிரை அஹ்மது அவர்கள் மதிப்புரையில் கூறியிருப்பது போன்று...

“இந்நூலை, நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும். மேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------


 நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக.,.

நீங்கள் ஆர்வமுடன் கையில் தாங்கியிருக்கும் இந்த புத்தகம் பல வகைகளில் தனித்துவமிக்கதாக திகழப்போகின்றது (இறைவன் நாடினால்). ஒரே எழுத்தாளரின் நடை, சிந்தனை ஓட்டத்திலிருந்து விலகி உங்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கும் இந்நூல், இணையத்தில் செயலாற்றும் பல்வேறு முஸ்லிம் பதிவர்களின் சிறந்த படைப்புகளை ஒருசேர இங்கு கொண்டுவந்து சேர்க்கின்றது.

வெவ்வேறு விதமான எழுத்து நடைகள், வித்தியாசமான சிந்தனைகள், பலதரப்பட்ட பார்வைகள். இப்படியான ஒரு பயணத்திற்கு தான் நீங்கள் ஆயத்தமாகி கொண்டிருக்கின்றீர்கள். ஒரு தலைப்பிலிருந்து அடுத்த தலைப்பிற்கு மாறும் போது நீங்கள் உணரப்போகும் தனித்துவத்தையும், வாசிப்பு  அனுபவத்தையும் உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன்.

முஸ்லிம் பதிவர்களின் நூலான "எதிர்க்குரல்" கிடைக்கும் இடங்கள் குறித்த விபரங்கள் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. பார்க்க 
http://www.ethirkkural.com/2013/01/blog-post_10.html
 ----------------------------------------------------------------------------------------------------------------  அழிக்கப் பிறந்தவனின் கதை!
 

போன வருடம் புத்தகக் காட்சியின் போது கிழக்கு முட்டுச் சந்தில் பாரா சொன்னார். “இந்த வருஷம் ஒரு கதை எழுதுடா! கதைப் புஸ்தகம் இப்போ நல்லா சேல்ஸ் ஆவுது”. நான் ஒரு மோசமான கதை சொல்லி என்று எனக்கே தெரியும். எனவே நழுவப் பார்த்தேன்.

பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு நாள் கூப்பிட்டார். “கதை எழுத சொன்னேனே? என்ன டாபிக்குன்னு முடிவு பண்ணிட்டியா?”

“இல்லை சார். எனக்கு கதையெல்லாம் எழுத வராது”

“எல்லாம் வரும். ஒன்லைனர் சொல்றேன். அப்படியே நூல் புடிச்சி போய், ஒரு இருவத்தி ரெண்டாயிரம் வார்த்தைலே எழுதிடு”

 
   பார்க்க   http://www.luckylookonline.com
 

No comments: