அன்புடன் புகாரி
நான் பிறந்த ஊர்
வானூறி மழை பொழியும் வயலூறி கதிர் வளையும் தேனூறி பூவசையும் தினம்பாடி வண்டாடும் காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும் பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில் நான் பிறந்தேன்
தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால் சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.
தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.
என் ஊரைப்பற்றி நான் சொல்லிவிட்டேன் என்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும்.
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.in/
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
1 comment:
வாழ்த்துகள் அன்புச்சகோதரர் அன்புடன் புகாரி அவர்கட்கு,
தொடரட்டும் தங்களின் எழுத்துப்பணி என்றென்றும்...
Post a Comment