Wednesday, January 2, 2013

சலாம் ஆல்பத்தின் முக்கிய அம்சங்கள் Salaam Album Highlights


இசையை ரசிக்க மொழி முக்கியமல்ல. அருமையான கருத்தாழமுள்ள பாடல்களை பலர் பாடுவதையும் இந்த காணொளியில் காணுங்கள். இசை (music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும்.
---------------------------------------------------------
காடுகள் காற்றில் இசைக்கின்றன.
கடலின் அலைகள் இசைக்கின்றன
முகிலினங்கள் மோதி மோதி இசைக்கின்றன.
மழை ஒரு கச்சேரியே வைக்கிறது

தாய் தன் பிள்ளையின் வயிற்றில் வாயை வைத்து முகத்தை ஆட்டி ஊதுவாள். அப்போது எழும் இசைகேட்டு குழந்தை இசை நயத்தோடு சிரிக்கும். இங்கே இசைகள் எத்தனை கருவிகள் எத்தனை என்று கணக்கிட்டுப் பார்க்கலாம். சுவாரசியமாய் இருக்கும்!

மனிதன்தான் மனிதனை அடிமைப்படுத்துகிறான். கலையும் இலக்கியமும் எவரையும் அடிமைப்படுத்துவதில்லை. மனிதர்களுக்குப் புத்துணர்ச்சியையே தருகின்றன.

பறவைகளின் படபடக்கும் சிறகுகள் இசைக்கின்றன
இசையானால் என்ன, கவிதையானால் என்ன அல்லது வேறு கலைகளானால் என்ன, உன்னை முழுவதும் இழந்துவிடாத கட்டுப்பாட்டோடு மகிழ்ச்சியாய் வாழ். உண்ணு, பருகு, ஆனால் வரம்பு மீறினால் இறைவன் உன்னை மன்னிக்கமாட்டான்.

`A'ishah (may Allah be pleased with her) narrated: “Allah's Messenger (peace and blessings be upon him, came to my house while two girls were singing beside me the songs of Bu`ath (a story about the pre-Islamic war between the two tribes of the Ansar, the Khazraj and the Awus). The Prophet (peace and blessings be upon him) laid down and turned his face to the other side. Then Abu Bakr came and spoke to me harshly saying, ‘Musical instruments of Satan near the Prophet (peace and blessings be upon him)?' Thereupon, Allah's Messenger (peace and blessings be upon him) turned his face towards him and said, ‘Leave them.' When Abu Bakr became inattentive, I signaled to those girls to go out and they left.” (Reported by Al-Bukhari)

ஆயிசா (ரலி) கூறினார்: என்னருகில் இரு பெண்கள் இஸ்லாமிற்கு முந்தைய கால பழங்குடியினரின் யுத்தம் பற்றிப் பாடிக்கொண்டிருக்கும்போது இறைதூதர் என் வீடு வந்தார், முகத்தை மறுபுறமாகத் திரும்பிய நிலையில் கீழே அமர்ந்தார். அப்போது அபுபக்கர் வந்து ரசூலுக்கு அருகில் சாத்தான்களின் இசைக்கருவிகளா என்று என்னைக் கடிந்துகொண்டார். அப்போது நபிகள் நாயகம், அபுபக்கரின்(ரலி) முகமாகத் திரும்பி, ”அவர்களை விட்டுவிடுங்கள்” என்றார். இதனால், அபு பக்கர் (ரலி) சுரத்தின்றி போனதும், நான் செய்கையால் அந்தப் பெண்களை வெளியேறச் சொன்னேன், அவர்களும் வெளியேறினார்கள்.

- இசைக்கருவிகளை இசைத்தனர் பெண்கள்
- அவற்றைக் கேட்டு மகிழ்ந்திருந்தார் நாயகத்தின் மனைவி
- அங்குவந்த நபிகள் நாயகம் அதைத் தடுக்கவில்லை
- தடுக்க வந்த மாமனாரையும் நபிகள் தடுக்காதீர் என்றார்
* * * * அன்புடன் புகாரி புதிய பதிவுகள் * * *

இசையைப் பற்றியும் பாடல் பற்றியும் இஸ்லாம் சொல்வதனை ...




No comments: