உங்கள் திறமை உங்களுக்கு தெரிந்து விட்டது. அதனை அருமையாக செயல்படுத்துவது உங்களுக்குக்காக மட்டுமா அல்லது அது மற்றவருக்கும் பயன்தருமா அல்லது மற்றவருக்கு பாதகம் மனசாலோ,உள்ளத்தாலோ அல்லது உடலாலோ பாதிக்குமா என்பதனையும் நீங்கள் அறிந்துக் கொள்ளுங்கள்.
நம்மை நாம் அறிந்துகொண்டோம்! நம்மை மற்றவர் எவ்விதம் அறிந்து கொண்டார்கள் என்பதில்தான் உயர்வே உள்ளது. நம் அறிவின் ஆற்றல் உயர்வாக உள்ளதாக நாமே ஒரு எடை போட்டுக்கொண்டு அதனை தவறாக செயல்படுத்தும் போது அனைத்தும் விரயமாகின்றது. பொது வாழ்வில் வந்த பின்பும் பொதுவாக ஒரு கருத்தை வெளியே கொடுத்த பின்பும் அது உங்கள் உரிமையோடு மட்டும் நிற்பதில்லை . மக்களின் விமர்சனத்திற்கு அது உள்ளாகின்றது .விமர்சனம் நம்மை மேன்மை படுத்தவும் மற்றும் திருத்திக் கொள்ளவும் உதவுகின்றது. கத்தியை எடுத்து காயை வெட்டுவதுபோல் கருத்தைக் கொண்டு அடுத்தவர் மனதை வெட்ட முயல்வது சிறப்பாக முடியாது. சமூகத்தில் நாமும் ஒருவன்.நாம் நலமுடன் அமைதியாக வாழ சமூகத்தின் ஒற்றுமையை குலைப்பதில் நாம் ஒருவராகிவிடக் கூடாது . அதற்கு உங்களை நீங்களே அறிந்துக் கொள்ளுங்கள் .
பாயிரம் பார்த்த உடன் உள்ளிருப்பது இதுதான் என விளங்கிவிடும் ஆற்றோர் நிறைந்த காலத்தில் நாம் நம் செயல்பாட்டை அறிவதற்கு முன் நம்மைப் பற்றி மற்றோர் அறியும் திறம் படைத்தோர் அதிகம். அதனால் உங்களை முதலில் நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்.
உங்களது கடந்த கால செயல்பாடு உங்களை காட்டிக் கொடுத்து விடும்.
வல்லவனுக்கு வல்லோன் வையகத்தில் உண்டு . தவறு இருப்பின் திருத்திக் கொள்ளுங்கள் .வீணான அகம்பாவமும் பிடிவாதமும் வேண்டாம்.
வயிற்றின் பசி உழைப்பை தேடும் .ஆத்மாவின் பசி இறைவனை நாடும்
No comments:
Post a Comment