மூளைக்குள் ஒரு பயணம் செய்து அதன் வேலையை அறிவோம்
பயணத்தை தொடர இங்கு சொடுக்கு செய்யுங்கள்
படமும் ,விளக்கமும் ஆங்கிலத்தில் இருக்கும்
மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் நிகழும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு(செரிமானம்),இதயத்துடிப்பு, கொட்டாவி[1] போன்ற செயற்பாடுகளையும்,[2] விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்ற எல்லா உயிர்களையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளைச் சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது.
மனிதனின் மூளை, மற்ற பாலூட்டிகளின் மூளையின் பொது வடிவத்தினை பலவாறு ஒத்திருப்பினும், அவற்றின் மூளைகளைக் காட்டிலும் உடல் எடை-மூளை அளவு விகிதத்தில் குறைந்தது ஐந்து மடங்கு பெரியது. இதற்குக் காரணம், மனித மூளையின் நன்கு விரிவடைந்த பெருமூளைப் புறணிப் (cerebral cortex) பகுதியாகும். நரம்பிழையத்தால் (neural tissue) உருவாகி, பல தொடர் மடிப்புகளை கொண்ட இப்பகுதி மனிதனின் முன்மூளையில் அமைந்துள்ளது. குறிப்பாக, பிற விலங்குகளில் இருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சிறப்பு செயல்பாடுகளான, தற்கட்டுப்பாடு, திட்டமிடல்,பகுத்தறிதல், கற்றறிதல் ஆகியவற்றிக்குக் காரணமான மூளையின் முன் மடல்கள் மனித மூளையில் நன்கு விரிவடைந்து காணப்படுகின்றன. மேலும், கண் பார்வைக்குக் காரணமான பகுதியும் மனித மூளையில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.
தொடர்ந்து படிக்க
மூளை - 1
மூளை - 2
No comments:
Post a Comment