முதுமை மறதிக்கு இடம் கொடுக்கும் . தனக்கு இழைக்கப்பட்ட தீமையும் மறந்து நிற்கும்.
இளமை நினைவாற்றலை நிலை நிறுத்த முயலும் . தனக்கு இடையூறாக இருப்பவரை நினைவுபடுத்தி ஓரம் கட்டும்
முதுமை சிதைவடையும் மனமாக மாற வாய்புண்டு . சிதையும் மனதிற்கு இடம் தராது (காதல் வந்து மறுக்கப்பட்டால்! வெல்லும் அல்லது விழும் )
முதுமை மனவியின் மீது வைக்கும் பாசம் தியாக வாழ்வின் வழி வந்தது . இளமை மனவியின் மீது வைக்கும் அன்பு ஆசையினால் வந்தது.
முதுமை உண்மையின் உறைவிடம் . இளமை பண்மையின் பிறப்பிடம்.
முதுமை ஓரிடத்தில் ஒன்றி நிற்கும் . இளமை பேரிடம் நாடி ஓடும்
முதுமை இறையருள் நாடி நிற்கும் . இளமை பறை சாற்றும் புகழ் நாடும்
முதுமை வாழ்ந்த வாழ்வினை அசைபோடும் .இளமை நினைத்தது நடக்க நடை போடும்
பழம் இனிக்கும் .காய் கசக்கும் .முதிர்ச்சி அனுபவத்தின் ஆழம். முதுமை
பாசத்தின் பண்பு . இளமை அவசரத்தின் கோலம். கண்டதை விழுங்கும் வேட்கை .
துடிப்பின் வேகம் தடுமாற்றத்தின் காட்சி .
முதுமை சரித்திம் பேசும். இளமை விஞ்ஜானம் சொல்லும் .
முதுமை முன்னேற்றம் நாடாது இருப்பதனை பாதுகாக்க நாடும். இளமை புதுமையினை நாடி பல வழிகளில் செயல்பட முயலும்.முதுமையில் நிதானம் வந்தடையும் . இளமையில் வேகம் மேலோங்கும்.
முதுமை பதுமையல்ல அது பாதுகாவலன் . இளமையின் வேகம் வேதனையிலும் முடிய வாய்ப்புண்டு.
முதுமையில் வரும் வேதனை தாங்கும் சக்தியுடையதல்ல. இளமையில் வரும் சோதனை எதையும் தாங்கும் இதயம் கொண்டது.
தவிர்க்கமுடியாத மாற்றம் முதுமை. முதுமைக்கு இளமையில்லை. இளமைக்கும்
முதுமையுண்டு. என்றும் இளமை என்பது பேதமை
இளம் வீரர்களே முதியோரிடம் பரிவு காட்டுங்கள்.
இப்பொழுதே முதியோரிடம்
பாசத்தைக் காட்டுங்கள்
, பரிவைக் காட்டுங்கள்
,கனிவு காட்டுங்கள்
, அன்பாகப் பேசுகள்
,இறையருள் பெற்றிடுங்கள்
, இறைப் பொருத்தத்தை பெற்றிடுங்கள்
“முதுமை வந்து கூன் விழுமோ
மூன்றுகால் நடை வாய்த்திடுமோ
புதுமை உலகம் கேலி செய்யுமொ
என்று வரும் எனக்கு அழைப்பு – அங்கு
சென்று விடத்தான் நினைப்பு”
நீடூர் சயீது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன் எழுதிய கவிதை.