காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் -
பாரதியார் பாடல் நினைவுக்கு வரும். அவர் நல்ல மனதோடு அனைவருக்கும் மாளிகை கேட்டார். அது நமக்கு கிடைக்குமோ! கிடைக்காதோ! குறைந்தது குடிசை மாற்று வாரியம் வழங்கும் வீடு கிடைத்தால் போதும் என்ற மனதோடு இருந்தால் எப்படி?
இருக்க ஒரு வீடு தேவை. இந்தியா ஏழை நாடு,அதனால் குடிசை போதும் . ஆனால் ஒரு சிலர் இருக்கும் ஆடம்பர பங்களா நம் கண்ணில் பட்டால் அதற்காக நாம் பொறாமை படாமல் இருப்பது உயர்ந்த உள்ளம்.
எல்லாம் இனாம் கிடைக்கும் காலம் வந்தாச்சு . அதனால் ஒரு காலம் வந்து ஓர்மாளிகையும் இனாமாக கிடைக்கலாம் ( "காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகைகட்டித் தரவேண்டும்" )அதுவரை பொறுமையாக இருந்து ராஜாவாக வாழ ஆசைப் பட்டால் அவதி வந்து வீடே வேண்டாம் எனறு மனம் மாறாமல் இருக்க படக் காட்சி கண்டு மகிழ்வோம்.
(உங்கள் ஆசை எப்படி ! ? வோட்டு போட்டால் போதுமா !)
3 comments:
gooD post!
வேனாமுங்க வேனாமுங்க இந்த மாதிரி மாளிகை எல்லாம்.
பிணியின்றி வறுமை இன்றி ஆயுள் வரை வாழ வல்ல நாயனின் கருணை ஒன்றே போதுமுங்க.
பகிர்விற்கு நன்றி! ஆடம்பரம் அழிவின் தொடக்கம் என்பது என் எண்ணம்!
Post a Comment