1980 ஆம் ஆண்டுகளில் அறிமுகமான இணைய தள பெயர்களை தனியாக அடையாளப்படுத்த அவற்றின் இணைய முகவரியின் இறுதியில் .com அல்லது .net மற்றும் .org என்ற மூன்று பெரும்பிரிவுகளாக வகைப்படுத்தி இருந்தனர்.பிறகு 2000 ஆண்டின் தொடக்கத்தில் இணைய தளங்களின் எண்ணிக்கை அசுர வளர்ச்சியடைந்ததால், அவற்றின் பின்னொட்டு (Suffix) அடையாளங்களில் மேலும் சில வகைகளை அறிமுகப்படுத்தினர். குறிப்பாக .cc, .co போன்றவற்றைச் சொல்லலாம்.
மென்மேலும் வளர்ச்சியடைந்த இணையத்தில், முகவரிகளில் நாடுகளின் பெயர்களையும் .in, .us, .de மற்றும் .info, .biz என ஏழுவகைகளுடன் மொத்தம் முன்னூறு வகைப்படுத்தி,இணைய தேடல்வசதி எளிமையாக்கப்பட்டது உலகின் அனேக நாடுகள் தனித்தனி வழங்கிகளில் இணைய சேவையைத் செயல்படுத்தத் தொடங்கிய பின்னர் மேலும் வகைப்படுத்த வேண்டிய தேவை எழுந்ததால் Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) என்ற அமைப்பு மேலும்சில புதிய வகைப் பிரிவுகளை அறிமுகம் செய்ய வேண்டி உருவாக்கப்பட்டது.
ஏற்கனவே புழக்கத்திலுள்ள 300 க்கும் மேற்பட்ட பின்னொட்டு (Suffix) களில் 180க்கும் மேற்பட்டவை நாடுகளின் பெயரால் அறியப்படுகிறது. அதையே சர்வதேச நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களின் பெயர் (Brand) மற்றும் நிறுவன பெயரால் வகைப்படுத்துவதை அங்கீகரிக்க வேண்டி இன்று ICANN அமைப்பு சிங்கப்பூரில் ஆலோசனை நடத்துகிறது.
அரபு மற்றும் சீன மொழி உள்ளிட்ட பின்னொட்டுகளையும் அங்கீகரித்து, அடுத்த வருடம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் .bank, .sony , .dubai என்று தொழிலின் தன்மை, பொருட்களின் பெயர் மற்றும் இடன்ப்பெயர்களால் இணைய தளங்களை துல்லியமாக அறியலாம்.ஆபாச தளங்களை.xxx என்றும் சினிமா மற்றும் பொழுதுபோக்கு தளங்களை .movies என்று வகைப்படுத்தி அறியலாம்.
இந்த பின்னொட்டுகள் விரிவடையும் நிலையில் நமது அரசியல் கட்சிகள் .dmk, .admk, .dmdk என்றெல்லாம்கூட இணைய தளப்பெயர்களை வைத்துக்கொள்ளலாம். எனினும் இதற்கான நுழைவுக் கட்டணம் 185,000 அமெரிக்க டாலராக இருக்கும் என்றும், தேர்வு செய்யப்பட்ட பெயர்களை நிரந்தரமாக்க ஆண்டுதோறும் 25,000 அமெரிக்க டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
அரசியல் கட்சிகளுக்கு இதெல்லாம் பிசாத்து காசு என்றாலும் பெரும்பாலான பயனர்கள் பின்னொட்டுகளைப்பற்றி கவலைப்படாமல் கூகிலில் ஓரிரு சொற்களை தட்டச்சு செய்து தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர் என்பதால் புதியவகை பின்னொட்டுகள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.
Source : http://www.inneram.com
No comments:
Post a Comment