தந்தையர் தினம் ஜூன் மாதத்தில் தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். அமெரிக்காவில் தோன்றியது இந்த தந்தையர் தினம்.
தமிழ்நாட்டில் “அப்பா” என்று அன்பாக தனது தந்தையரை அழைப்பார்கள். நல்லவேளை இதற்கென விடுமுறை இருந்து காலத்தினை வீணாக்கவில்லை. தனது தந்தையரை தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் அத்தா என்று அழைப்பார்கள். அத்தா என்பதும் தமிழ் சொல்தான்.
. அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள். பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம். அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும். "அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம். "அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம். -
அன்புடன் புகாரி
அம்மா அப்பா இருவரும் நாம் வர வழி வகுத்தவர்கள் . ஆனால் அம்மாவுக்கு நாம் முதல் இடம் தருவது இயல்பு . காரணம் அவள் பாசத்திற்காக ஏங்குபவள். தகப்பன் கெட்டலைந்து தாய் அவதிகுள்ளாகிய நிலை கண்ட பையன் மனமுருகி தாய் மீது வைத்துள்ள பாசம் அவனை செம்மையாகவும் சிறப்பாகவும் வளர வைக்கின்றது, அதே நேரத்தில் தாய் கெட்டவளாக இருந்துவிட்டால் தகப்பன் எவ்வளவு உயர்ந்தவனாக இருந்தாலும் அந்த குடும்பம் நன்றாக அமையாது. நாம் காட்டும் பாசம், அன்பு,இறக்கம் மற்ற அனைத்தும் தாய் தந்தையர் இருவரிடமும் மேலோங்கி நிற்க விரும்புவோம் . ஆதலால் தாய் தந்தையர் தினத்தினை பிளவுபடுத்தாமல் தினமும் தாய் தந்தையர் தினமாக கொண்டாடுவோம். அவர்களுக்காக எப்பொழுதும் இறைவனிடம் பிரார்த்திப்போம்,நாம் நன்றாக் இருக்க பெற்றோர்களின் பிரார்த்தனையை வேண்டி நிற்போம்
தாய் தவறிவிட்டாலோ அல்லது அவளுடைய சுயநத்திற்காக விட்டுவிட்டுபோய்விட்டாலோ குழந்தையின் கதி அதோ கதிதான். அதே சமயம் தகப்பன் பொறுப்பற்ற ஊதாரியாக குடும்பதை கவனைக்காது விட்டுபோய்விட்டபினும் தாயானவள் அக்குழந்தையில் நலனை மிகுந்த அக்கரையோடு வலர்த்தெடுப்பாள்.
1 comment:
தாய் தவறிவிட்டாலோ அல்லது அவளுடைய சுயநத்திற்காக விட்டுவிட்டுபோய்விட்டாலோ குழந்தையின் கதி அதோ கதிதான். அதே சமயம் தகப்பன் பொறுப்பற்ற ஊதாரியாக குடும்பதை கவனைக்காது விட்டுபோய்விட்டபினும் தாயானவள் அக்குழந்தையில் நலனை மிகுந்த அக்கரையோடு வலர்த்தெடுப்பாள்.
அதனால்தான் எனவோ தாய்மைக்கு அதிகமுக்கியத்துவம்..
பொறுப்பற்ற தந்தைகளால் பிள்ளைகளின் எதிர்காலமே வீணாகிவிடுகிறது.
எதுவென்றபோதும் பிள்ளைகள் தங்களின் தாய்தந்தையரை தன் கண்களைவிடமேலானவர்களாக பாதுகாக்கவேண்டும்.
நல்லதொரு கட்டுரை.. வாழ்த்துகள் தாங்களுக்கும்..
Post a Comment