
கடாஃபி நல்லவரா? கெட்டவரா? - இங்கர்சால், நோர்வே.
அவரது குடிமக்களில் ஒருசாராருக்கு நல்லவர்; மற்றொரு சாராருக்குக் கெட்டவர். இதனால்தான் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் போரிடுகின்றனர்.
மாமியார் மருமகள் பிரச்னைகள் போல் மாமனார் மருமகன் பிரச்னைகள் வருவதில்லையே... என்ன இருந்தாலும் Male மக்கள் மேன்மக்கள்தானே? - ரிஸ்வான், பஹ்ரைன்.
ஆண்கள் தொழில், வணிகம், ஊழியம் என வருவாய் ஈட்டும் வழிதேடி வீட்டை விட்டு வெளியே செல்லும் நிலையில் வீட்டில் இருக்கும் பெண்களிடையே சில பிரச்சனைகள் உருவாகும். அதுவே மாமியார் மருமகள் போருக்கு வழிவகுக்கும். பொதுவே பெண்கள் பொசசிவ்னெஸ் குணம் உள்ளவர்களாக இருப்பதால் மகனும் கணவனும் என இரண்டு நிலைகளில் இருக்கும் ஒருவன் மீது கொண்ட பொசசிவ்னெஸ் இப்போருக்குக் காரணம். வீட்டில் யாருக்கு பொசசிவ்னெஸ் அதிகம் என்ற ஈகோவும் காரணம்.
மருமகளை மாமியார் வேலைக்காரியாக நினைப்பதைப்போல் மருமகனை மாமனாரோ மாமியாரோ வேலையாளாக நினைப்பதில்லை. மேலும் பெரும்பாலோரான மாமியாரும் மருமகளும் ஒரே வீட்டில் இருப்பர். மாமனாரும் மருமகனும் ஒரே வீட்டில் இருப்பதில்லை என்பதோடு எந்தத் தந்தையும் தம் மகளின் வாழ்க்கை (த் துணை)யோடு விளையாடத் துணியமாட்டார் என்பதும் மாமனார் மருமகன் சண்டை இல்லாமைக்குக் காரணமாகலாம்.
சதாம், ஒசாமா, அடுத்து..? - இளமாறன், ராயப்பேட்டை.
அய்மன் ஜவாஹிரி / முல்லா ஓமர்.
அண்ணா ஹசாரே - சமீப புரட்சி தொடரில், இந்திய புரட்சியின் ஆரம்ப குறியீடா? - இளவரசு, பரங்கிபேட்டை.
வினா புரியவில்லை. அவர் என்ன பெரிய புரட்சி செய்து விட்டார்.?
நடைமுறையில் உள்ள சட்டத்தைச் செயல்படும் சட்டமாக ஆக்குவதற்கு உரிய வழியை உருவாக்கச் சொல்லி ஒரு போராட்டம் நடத்தியுள்ளார். முன்னர் ஒரு விடையில் நான் சொன்னதுபோல் குத்து விளக்காக உள்ளார்.
அதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் திமுக நிலைமை என்னவாகும்? - அருள், கத்தர்.
அ இ அ தி மு க வுடன் காங்கிரஸ் கூட்டணி வந்தால் கம்யூனிஸ்ட்கள் தி மு க பக்கம் வரலாம்; பா ம க, அ இ அ தி மு க பக்கம் போகலாம். வேறு பெரிய மாற்றம் எதுவும் வரப்போவதில்லை. வலிமையான எம் ஜி ஆரும் இந்திரா காந்தியும் நெருக்கடி நிலைக் கொடுமையும் சேர்ந்திருந்தபோது கூட தி மு க அஞ்சவில்லை; அசரவில்லை. இப்போது எதிர்க் கட்சியாக இருக்கும் தகுதியைக் கூட இழந்து கேவலமான தோல்வியைச் சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு வரும் தொண்டர் பலம் கொண்டது தி மு க…
ஊழல் பெருச்சாளிகளையும் உட்கட்சிக் கலகக்காரர்களையும் களையெடுத்துவிட்டு, ஸ்டாலின் தலைமையில் துவக்க காலத் துடிப்புடன் மக்கள் பணி ஆற்றினால் மீண்டும் தி மு க ஆட்சிக்கு வரும்.
தனது பயணத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளாரே? - செந்தமிழ்செல்வன்,அருப்புக்கோட்டை.
தம் ஆட்சியில் முன்பு சாலை வெய்யிலில் காத்துக் கிடந்த மக்கள், அடுத்து வந்த தேர்தலில் தமக்களித்த தண்டனையை மறக்காமல் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்..
தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி இனிமேல் எப்படி இருக்கும்? - ப.கோ. வசீகரன்.
மேலே உள்ள வினாவில் இருப்பது உண்மையாக நடைமுறைப் படுத்தப் படும் என்பது உறுதியானால் முன்னர் ஜெயலலிதா ஆண்டதை விடச் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அவரின் அதிரடித் துவக்கம்( ரஸ்ஸலின் அலசல்) பழைய மாதிரியே இருக்கிறது..
ஆட்சி மாறும் போது முந்தய அரசு செயல்படுத்திய திட்டங்களை புதிய அரசு மாற்றும் போது ஏற்படும் பண விரயத்திற்கு யார் பொறுப்பு? இதனை தவிர்க்கவே இயலாதா வணங்காமுடியாரே? (உதாரணம்: தலைமைச் செயலகம்)- சரவணன், திருச்சி.
இப்படிச் செய்வோரே பொறுப்பு. ஆனால் மக்கள் இதை உணர்வதாகத் தெரியவில்லை. நான்காம் தூணாகிய பத்திரிகைகளும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாயாவதி லக்னோ நகரின் பல இடங்களில், 1000 கோடி ரூபாய் அரசுச் செலவில் யானைச் சிலைகள் நிறுவியுள்ளார்; கூடவே கன்ஷிராமுக்கும் தமக்கும் அம்பேத்கருக்கும்…..
5.9 கோடி பேர்,வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஒரு மாநிலத்தில் இப்படி ஊதாரிச் செலவு நடந்ததை உச்சநீதிமன்றமே கண்டித்துள்ளது. தாம் ஆட்சிக்கு வந்தால் இவற்றை அகற்றப் போவதாக முலாயம்சிங் யாதவ் சூளுரைத்துள்ளார். மக்கள் பணத்தை வீணாக்குவதில் உ பி யுடன் தமிழ்நாடு சரிசமமாகப் போட்டியிடுகிறது.
விறைப்புத்தன்மை எதனால் குறைகிறது? - சூர்ய ப்ரகாஷ் சேதுராமன்.
வீர்யம் குறைவதால்.


நடந்து முடிந்த தமிழகத்தின் சட்டமன்றத்திற்கான 17ஆவது பொதுத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று, அதன் தலைவி ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அதிக இடங்களை வெல்லும் என ஆரூடம் கூறிய ஊடகங்கள் உட்பட யாருமே எதிர்பாராத அளவுக்கு 147 இடங்களில் தனித்து (91.875%) வென்று, ஆட்சியைப் பிடித்திருக்கிறது அ.தி.மு.க.



தலைநகர் டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், நடிகர் தனுஷுக்கும் மலையாள நடிகர் சலீம் குமாருக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.


பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் வைத்து பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றதாக அறிவித்தையடுத்து, பாகிஸ்தான் அரசு தான் அவரை பாதுகாத்து வந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. காரணம் பின்லேடனை தங்கியிருந்ததாகக் கூறப்படும் இடம் ராணுவ பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ளதால் ராணுவத்திற்கு தெரியாமல் பின்லேடன் தங்கியிருக்க முடியாது என்ற விமர்சனம் எழுந்தது.

ஒருங்கிணைந்த ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உளவுத் துறையான சிஐஏவால் வளர்த்து எடுக்கப்பட்ட பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அவரது கொலையில் பல்வேறு சந்தேகங்கள் சர்வதேச சமூகத்தால் முன்வைக்கப்படுகின்றன.

