Sunday, May 8, 2011

பின்லேடன் படுகொலை சில சிந்தனை கவிஞர் இரா .இரவி

ஒழிக்கப்படவேண்டியது தீவிரவாதம்தான் .தீவிரவாதி அல்ல .பின்லேடன்  ஏன்?   தீவிரவாதியானான் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் .உலக ரவுடியான அமரிக்கப் படை எங்கு சென்றாலும் ,எந்த நாட்டிற்குள் நுழைந்தாலும் வெளிய வருவது இல்லை . .வியாட்னாமிலும்அமரிக்கப் படை இன்னும் உள்ளது .ஆப்கானிஷ்தானிலும்,ஈராக்கிலும் அமரிக்கப் படை இன்னும் உள்ளது . அமரிக்கப் படையின் தாக்குதலுக்கு அப்பாவி பொதுமக்கள் பல்லாயிரம் மாண்டு உள்ளனர் .அணு ஆயுதம் வைத்துள்ளார் என்று சதாமைக் கொன்றார்கள் .கடைசிவரை  அணு ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. வல்லரசு நாடு என்பதற்காக எதுவும்  செய்யலாம் என்பது தவறு .தவறு யார்? செய்தாலும் தவறுதான் .சில ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான பின்லேடனைக் கொன்றார்கள் .ஆனால் சில லட்சம் பேர் சாவுக்கு காரணமான ராஜபட்சேயை கொல்ல அமெரிக்க முன் வருமா ?வராது .காரணம் அமெரிக்காவில் இறந்தது அமெரிக்கர் .இலங்கையில் இறந்தது தமிழர் .ஏன் ? இந்தப் பாகுபாடு .இலங்கையில் பெட்ரோல் கிணறுகள் இல்லை பின்லேடன் படுகொலையோடு இது முடிந்துவிடுமா? யோசிக்க் வேண்டும் ?பின்லேடன்  ஆதரவாளர்கள் இருப்பார்கள் அவர்களை மூளைச் சலவை செய்து வன்முறைக்கு வழி வகுப்பார்கள். அமெரிக்காவின் இந்த பலி வாங்கும் செயலால் உலக அமைதி கேள்விக் குறியானது .
பின்லேடனை கொல்லாமல் சிறைபிடித்து இருக்கலாம். அமெரிக்கா வினை விதைத்துவிட்டது .சரிந்து வந்த ஓபாமாவின் செல்வாக்கை உயர்த்த பின்லேடன் படுகொலை பயன்படலாம் .ஆனால் இதையும் வன்முறையாகவே  பார்க்கிறேன் நான் . உலக அளவில் மனிதநேய ஆர்வலர்கள் யாரும் பின்லேடன் படுகொலையை விரும்பவில்லை .இதற்காக அமரிக்க மக்கள் மகிழ்வதும் தவறு .ஓபாமா இந்தியா வந்த போது காந்தியத்தை மதிப்பவன் என்று சொன்ன சொல் பொய்யானது  .

இரா. இரவி தமிழகக் கவிஞர்.
இவரது சில ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது. சிறந்த நூலிற்கான பரிசினை புதுவை துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.

Source : http://eraeravi.wordpress.com

No comments: