தலைநகர் டெல்லியில் தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், நடிகர் தனுஷுக்கும் மலையாள நடிகர் சலீம் குமாருக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தனுஷுக்கு "ஆடுகளம்" என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும், சலீம் குமாருக்கு "ஆதாமின்றே மகன் அபு" என்ற படத்தில் (இஸ்லாமிய கதைப் பின்னணியில்) சிறப்பாக நடித்ததற்காகவும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது சரண்யா பொன்வண்ணனுக்குக் கிடைத்துள்ளது.
கவிஞர், திரைப்பாடலாசிரியர் வைரமுத்துவுக்குச் சிறந்த பாடலாசிரியர் விருது (படம் - தென்மேற்குப் பருவக்காற்று) கிடைத்துள்ளது.
மைனா படத்தில் சிறைக்காவலராக நடித்த தம்பி ராமய்யாவுக்குச் சிறந்த துணை நடிகர் விருது கிடைத்துள்ளது.
தனுஷ் நடித்துள்ள ஆடுகளம் திரைப்படத்தின் இயக்குநர் வெற்றி மாறனுக்குச் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த திரைக்கதைக்கான விருதும் ஆடுகளம் படத்துக்குக் கிடைத்துள்ளது. சிறந்த நடன அமைப்புக்கான விருது ஆடுகளம் படத்தின் நடன இயக்குநர் தினேஷ் குமாருக்குக் கிடைத்துள்ளது.
சிறந்த தயாரிப்புக்கான விருது சண் குரூப்ஸ் படமான "எந்திரன்" படத்துக்குக் கிடைத்துள்ளது.
சிறந்த தமிழ்ப் படமாக - தென்மேற்கு பருவக்காற்று- தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Source : http://www.inneram.com/
No comments:
Post a Comment