Tuesday, May 3, 2011

பின்லேடன் செய்த முதல் தவறு !

பின்லேடன் செய்த முதல் தவறு அமரிக்காவுடன் சேர்ந்து ஆப்கன் நாட்டில் ருஷ்ய படையினை வெளியேற உதவியது .அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன்.
அதிலிருந்து தொடர்ந்த தவறு செய்ய வழி வகுத்ததும் அமரிக்காதான்.
குற்றம் செய்ய வழி வகுத்தவன்
அமரிக்கன் . குற்றம் செய்பவனை விட அதனை தூண்டுபவன் பெரிய குற்றம் செய்தவனாக கருதப்பட வேண்டும்.
அமரிக்கா தனது படைகளை அராபிய நாட்டிலிருந்து ஒருகாலமும்
வெளியேற்றாது .எல்லாமே அமெரிக்க ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் இது அமெரிக்காவின் கொள்கை . அமெரிக்கா கால் வைத்த சிதைந்த நாடுகள் 
 ஏராளம் (வியட்னாம்,ஈராக். பாகிஸ்தான் ...) 
மற்றவர்களை மதிக்கும் மக்கள் பிரன்ச் இனத்தவர்தான்.  
 பின்லேடனை  அமெரிக்காதான் தனது சுய நலம் கருதி உலகம் அறிய வைத்தது .அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாததிற்கு துணையாகி பலிகடாவானவர் பின்லேடன். 
அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பு கடலுக்கு அடியில் இறந்தவர் உடலை அடக்கம் செய்வது .அதுவும் இஸ்லாமிய முறையாம்! (பின்லேடன்
கடலுக்கு அடியில் அடக்கம் செய்யப் பட்டதாக செய்தி.)
அமெரிக்காவுக்கு இனி கடலுக்கு அடியில் இருந்து பல தொல்லைகள் வரலாம் 


மேலும் படிக்க : பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!

No comments: