Tuesday, May 17, 2011

உடல் நலத்திற்கு ஒரே வழி தொழுகை.

நடந்து சென்று பள்ளிவாசலில் தொழுது வருவதின் சிறப்பு.

According to a latest research, walking is a useful sport to prevent some knees diseases …நடப்பது மூட்டு வலி வராமல் இருக்க உதவலாம் . .குதிப்பதும், ஓடுவதும் நடப்பதும் எவராலும் தொடர்ந்து செயல் பட முடியாது  .உடல் நலம் கருதி இதனை செயல்படுத்த முயல்வோரும் சில காலங்களுக்குள் நிறுத்தி விடுவர் . ஆனால் அதனை இறைபக்தியுடன் செயல்படுவோர் ஒரு காலமும் நிறுத்த மாட்டார்கள் . இதற்கு ஒரே வழி தொழுகை. இஸ்லாமிய முறை தொழுகை இறைபக்தியுடன் உடல் நலமும் தர வல்லது.தொடர்ந்து தொழுது வருபவர்களுக்கு கழுத்தில் உள்ள எலும்பின் தேய்மானம்(Cervical Spondylosis ) வருவதில்லை.
காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.
தூய்மையான அதி காலை காற்று உடல் நலத்துக்கு மிகவும் நல்லது விடியல் காலையில் பஜர் தொழுகைக்கு போகும் போது சுத்தமான ஓசோன் காற்றை சுவாசிப்போமே அப்போது வரும் ஒரு உற்சாகம் அது மிகவும் உயர்வானது.
The prophet said  to his companion (do you want to know what erase sins and raise Muslims to the upper levels in heaven , they said yes, then the prophet said  that you must make the ablution perfectly and to walk to mosques and to wait the prayers .)[Narrated by Muslim].அமல்களில் சிறந்தது எது என்று நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள். அறிவிப்பவர்: உம்முஃபர்வா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:திர்மிதி, ஹாகிம், அபூதாவூத்
ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
உங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) , ஆதாரம் : புகாரி-1163)
சுத்தமான இடத்தில எங்கு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் ஆனால் பள்ளிவாசலுக்கு சென்று தொழுவது சிறப்பு
ஜமாஅத்து(கூட்டுத்)தொழுகை தொழுகையைக் கடைபிடியுங்கள். ஜகாத்தையும் கொடுத்து விடுங்கள். ருகூஃ செய்வோருடன் சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்! (2:43)

  ஜமாஅத்துடன் தொழுவதற்கும், தனிமையாகத் தொழுவதற்குமிடையே நன்மையில் ஏற்ற தாழ்வு: ''ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
 

 'இன்னும் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனின்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் இழிவு உண்டு. மறுமையிலும் இவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு.' (அல்குர்ஆன் 2:114)

    மூன்று பள்ளிவாசல்களுக்கே தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக்கூடாது. ஒன்று (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம். மற்றொன்று (மதீனாவிலுள்ள) எனது பள்ளிவாசல். புpறிதொன்று (ஜெரூஸலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் பள்ளிவாசல்.
  'மூன்றே முன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அதுவும் நன்மையை நாடி, தொழுகை என்னும் வணக்கத்தை நிறைவேற்றுதற்காகவே செல்ல வேண்டும். ஸியாரத் செய்யும் நோக்கத்துடன் அல்ல’
   நபி வழியில் ஷரீஅத் சட்ட ஒளியில் நாம் முதலில் நடந்து, பிற சமுதாயத்தினரும் இப்பேருண்மையை ஏற்று குற்றமற்ற நிம்மதி நிறைந்த உலகைப் படைக்க முயற்சிப்போமாக, வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

பள்ளிவாசல் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் வாக்கு.

 தொழுது வருவது சாலவும் நன்று.

2 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்...

நல்ல தகவல்கள்..பகிர்வுக்கு நன்றி....

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல தகவல்கள்

பகிர்வுக்கு நன்றி