Thursday, May 26, 2011

அன்புடன் மலிக்காவும் கவிதையும்

நம் எண்ணங்கள் தெளிந்த நீராய் ஓடட்டும் அது நம் ஆன்மாவை தெளிவாக்கட்டும் என்று தொடங்கி

என்றும் உங்கள் நினைவுகளோடு
நிலைக்க விரும்பும்
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.

இவ்விதம் எழுதி அனைவர் மனதிலும் ஆழமாக பதியும் வரிகளுடன் கவிதையினை நிறைவு செய்யும் அதிரை மலர் தமிழ் மனம் வீசும் மங்கை மலிக்காவுக்கு நம்  வாழ்த்துக்கள்.

துபாயில் வானலை வளர்தமிழ் நிகழ்வில் முத்துப்பேட்டை கவிஞர் மலிக்காவுக்கு பாராட்டு


இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் -இது என்னுடைய ஆக்கம்..

நான் மிகவும் விரும்பிய உள்ளத்தினை தொடும் கவிதை
மரணிக்கும்போது
உனக்காகவே நானென்றுஎனைநீ உச்சிமுகர்ந்தாயே
அத்தருணமே எனதுயிர் சாந்தி அடையக்கண்டேன்
நான்பிறக்க வரம்கேட்டாய் என்னைமணக்க வரம்கேட்டாய்
நமதன்பின்வெளிப்பாடாய் நம்வாரிசுகளின் வரம்கேட்டாய்
எத்தடையுமின்றி எல்லாமே கிடைத்தது


என்னவனே! எனக்கு வரமாக கிடைத்தவனே!
எனக்காக ஒருவரம் கேட்பாயா? இறைவனிடம்
என்விழிநீர் உன்னைத்தழுவ உன்மார்புக்குழிக்குள்
நான் முகம் புதைத்திருக்கும் வேளையில்
எனக்கு மரணம் நிகழவேண்டுமென்று...


அன்புடன் மலிக்கா.
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்

எனக்கு அவரை அறிமுகம் செய்து வைத்த கவிதை
இறையில்லம்


இடித்து தள்ளப்பட்டது இறையில்லம்
   அதற்கு தீர்வே தெரியவில்லையே
இன்றுவரையும்

மனிதம் மீறிப்பட்டது சிலமனிதமிருகங்களால்
  அதற்கு முடிவே தெரியவில்லையே
இன்றுவரையும்

வந்திடுமே நல்தீர்பென்று வருடங்கள்
   பதினேழையும்கடந்தும் வந்திடவில்லையே
இன்றுவரையும்

பிறர்மதத்தை இழிவாய் நினைத்து
  தன்மதத்தை உயர்த்தும் மனிதன்
மனிதனில் சிறந்தவனா?

மனிதமனங்களை கொன்றுசிதைத்து
  அதில் மகிழ்வுகாணும் மனிதன்
மனிதனில் புனிதவனா?

மனிதா மனிதா கேள்கேள்
  மனசாட்சியிருந்தால்
அதைகேள்

நீ செய்தது சரியா பிழையா
  இது மாபெரும்
பாவமில்லையா?

மனிதனாய் பிறந்துவிட்டு
  மனசாட்சியைகொன்றது
முறையா?

எப்போது கிடைத்திடும் நியாயம்
அதற்காக வேண்டுகிறோம் நாளும்...


அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய் 


 மலிக்கா பெற்ற பரிசுகள் ஏராளம்.
விருதுகள் வரவேற்கப்படவேண்டியவைகள்..
 அப்சரா அவர்கள் தந்த விருது


 ”சினேகிதி” ஃபாயிஜா வழங்கிய விருது.
உணர்வுக்கவிதைகள்.கவிதைச்சங்கமம். முதல்பரிசு.
  மறக்கமுடியாத விருது
  ”உணர்வுகளின் ஓசை” புத்தக வெளியிடும். மற்றும் விருதும்.

Related Posts Plugin for WordPress, Blogger...200,ரையும் தாண்டி...கவிதைகள் 
திருமணநாள். 

அன்புடன் மலிக்காவின் வலைப்பூக்கள

கலைச்சாரல்
நீரோடை
இனிய பாதையில்
Jazakallah Khayran
 JazakAllah Khayr (Arabic: جزاك اللهُ خيراً‎) is an islamic term and Islamic expression of gratitude meaning "May Allâh reward you [in] goodness. ...
 அ முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.

1 comment:

அன்புடன் மலிக்கா said...

அஸ்ஸலாமு அலைக்கும்

என்னுடைய எழுத்துக்களின் வாயிலாக பல உறவுகளின் பாசங்கள் கிடைத்திருப்பதற்க்காக எல்லாம் வல்ல இறைவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய பதிவுகளை கூர்ந்து கவனிக்கும் பல நல்நெஞ்சங்களில் தாங்களும் ஒருவர் என்பதை நானறிவேன். எனக்குள் எழும் எண்ணங்களை தூய்மையாக்கி. அதை பிறக்கு பயன்படும் வகையில் பகிர்ந்தளிக்க வல்ல நாயன் அருள்வதற்க்கு தங்களின் துஆ என்றென்றும் வேண்டும்.

தாங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. இந்த சாதரணமான சிறியவளை தங்களின் பாசத்தில் இணைத்துக்கொண்டமைக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள்பல.இந்த பாசங்களும் நேசங்களும் இறைவனின் அருளோடு தொடர்ந்திருக்க வேண்டுகிறேன்.. என்றும் உங்கள்
அன்புடன் மகள் மலிக்கா..